(Reading time: 22 - 43 minutes)

ஹானா தனக்கான சீட்டை எடுத்து அதிலிருந்ததை படித்தாள்..வலெண்டைனிற்கு பிடித்தமான ஏழு விஷயங்கள்..

இப்போது கார்த்திக்கிற்குமே சிறு ஆர்வம் வந்திருந்தது..இத்தனை நாட்களில் எவ்வளவோ பேசியிருந்தாலும் தனக்கு இது பிடிக்கும் பிடிக்காது என இருவருமே வெளிப்படையாய் பேசிக் கொண்டதில்லை அதே நேரம் ஒவ்வொருவரின் செயல்களில் புரிந்து கொண்டது அதிகம் அதற்காக அவன் காத்திருக்க அவளோ சிறு யோசனைகூட இல்லாமல் கடகடவென கூறி முடித்துவிட்டாள்..

 வெள்ளை ரோஜா

இளைராஜா மியூசிக்

மழை

குட்டி பேபிஸ்

அவனோட குடும்பம்

அவனோட ஜாப்

இதெல்லாத்துக்கும் மேல இப்போ அவனோட சஹி..என்று கூறிமுடித்து கண்சிமிட்ட வழக்கம்போல் கார்த்திக் மனதை கொள்ளை கொண்டுவிட்டாள்..உண்மைதான் அவள்கூறிய இந்த விஷயங்கள் தான் அவன் வாழ்க்கையை முழுமையாக்கும் விஷயங்கள்..எத்தனை வித ரோஜா இருப்பினும் ஏனென்றே தெரியாமல் மனம் வெள்ளை ரோஜாவை தான் நாடும்..ராஜாவின் இசையில் நனைவதென்பது அவனுக்கு பாற்கடலின் அமிர்தத்தை உண்ட உணர்வு போன்றது..மழை கடவுளின் படைப்பில் அற்புதமானதாய் தோன்றும்..குழந்தைகள் அவர்களின் வடிவில் கடவுளே இருப்பதாய் தோன்றும் அந்த சின்ன சின்ன கண்களும் பிஞ்சு விரல்களும் பார்க்க பார்க்க தெவிட்டாதது..அவனின் குடும்பம் அது இல்லையென்றால் கார்த்திக் என்ற ஒருவனே இல்லை..வேலை அவனுக்கென ஒரு தனிமதீப்பை இந்த சமூகத்தில் அளித்தது..சஹி மேற்கூரிய அனைத்து சந்தோஷத்தையும் ஒன்றாய் கட்டி ஓர் உருவில் கொடுக்க நினைத்த கடவுள் சஹியாய் அவனீடம் அனுப்பிவிட்டான்..தன் நினைவுகளில் இருந்தவனை கலைத்தது ஷரவனின் குரல்..அவனுக்கான சீட்டில் இருந்தது எ சாங் பார் யுவர் வலெண்டைன்..

வாவ் அண்ணா நீதான் சூப்பரா பாடுவியே பாடு நாங்களும் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு பாடு அண்ணா..

கார்த்திக் நீங்க பாடுவீங்களா என ஆச்சரிமாய் சிவா ஒருபுறம் முகம் முழுவதும் எதிர்பார்ப்போடு சஹானா எதிரே அமர்ந்திருக்க கண்களை மூடி குரலை சரி செய்து பாட ஆரம்பிக்க அப்படி ஒரு மௌனம் அங்கு..

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்

காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்

காலடி எழுதிய கோலங்கள் புதுக்

கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்

கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்

கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று

கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்..”

முடித்து அவன் கண் திறந்த வேளையில் அனைவருமே அந்த குரலில் கரைந்திருக்க சஹானா கண்களில் நீர் கோர்க்க அங்கிருந்து எழுந்து தனதறைக்குச் சென்றுவிட்டாள்..அவளைப் பின் தொடர்ந்தவன் உள்ளே ஜன்னலோரம் வெளியே வெறித்தவாறு நின்றிருந்தவளின் தோள்பற்ற சட்டென அவன்மீது சாய்ந்து கொண்டாள்..ஏ சஹி என்னாச்சு ஏன் அழற அவ்ளோ கேவலமாவா பாடினேன்..??என்றவனை ஒருமுறை பார்த்தவள்  மார்பில் புதைந்து கண்ணீரையே பதிலளித்தாள்..

அவளை கட்டாயமாய் பிரித்து நிறுத்தி இப்போ நீ என்னனு சொல்ல போறியா இல்லையா..

 என்னை நிஜமாவே உனக்கு இவ்ளோ பிடிக்குமா மாமா??

என்னடீ கேள்வி இது??

இல்ல மாமா நீ பாடும்போது எவ்ளோ பீல்லோட பாடின தெரியுமா அது எனக்காகநு நினைக்கும்போது அழுகை வந்துடுச்சு..இதே லவ்வோட எப்பவும் இருப்பியா கார்த்திக்??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.