(Reading time: 22 - 43 minutes)

இந்த இடத்துக்கு பேர் தலையணை அக்சுவலா இது ஒரு ரிசர்வேயர் அதாவது நீர்தேக்கம் மாதிரி டேம்ல இருந்து வர்ற வாட்டரர சேவ் பண்றதுக்காக அமைக்கப்பட்து..பாபநாசத்துக்கு வர்ற பாதி பேர் இந்த இடத்தை பாக்குறதுக்காகவே வருவாங்க..அவ்ளோ அழகாயிருக்கும்..

அனைவரும் உற்சாகமாய் ஆட்டம் போட நேரம் போவதே தெரியவில்லை..கார்த்திக் சிறிது நேரத்தில் வெளியே வர கௌரி ஏற்கனவே அங்கு நின்று தலைமுடியை உலர்த்திக் கொண்டிருந்தாள்..

என்னடா அதுகுள்ள வந்துட்ட??

ஆமா அண்ணா நா இங்க தான இருக்கேன் நினைச்சா வரப் போறேன்..

ம்ம் அதுவும் கரெக்ட் தான் என்றவன் தயங்கியவாறே அவளிடம்.கௌரி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..பட் இதப்பத்தி சஹானாக்கு எதுவும் தெரியய கூடாது வீட்டுக்கு போனப்பறமா டைம் பாத்து பேசுறேன் தப்பா எடுத்துகாதடா..

என்ன அண்ணா ஏன் இப்படிலா பேசுறீங்க எதுவாயிருந்தாலும் சொல்லுங்க என்றவளுக்குமே மனதில் சிறு தயக்கம் இருந்துதான் இருந்தது சஹானா அக்காக்கு தெரிய கூடாத அளவு என்ன விஷயம் இருக்கப்போகுது சரி அவரே சொல்லட்டும்..

ஒருவழியாய் ஆசைதீர ஆட்டம்போட்டுவிட்டு வெளியே வந்தவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்..வீட்டிற்கு வந்தவுடன் இருந்த அலுப்பில் அவரவர் அறையில் சென்று நுழைந்து கொள்ள கார்த்திக் தனதறைக்கு வந்தான்..காலை முதல் சஹானாவின் சந்தோஷமும் புத்துணார்வும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவளின் முன்ஜென்ம இறப்பின் காரணம் என்னவாய் இருக்கும் என்பதையே மனம் சுற்றி வந்தது..சிந்தனைகளும் உடல் அசதியும் சேர்ந்து அவனை தூக்கத்திற்கு தள்ள தன்னையறியாமல் தூங்கியும் போனான்..மீண்டும் கண்விழிக்கும் போது இரவு விளக்கு எரிய கண்ணை கசக்கியவாறு எழுந்தமர்ந்தான்..

அறை விளக்கை போட்டவாறு கையில் காபியோடு  சஹானா உள்ளே நுழைந்தாள்..எழுந்துட்டியா மாமா இரண்டு தடவை வந்தேன் பயங்கர அலுப்பு போல நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பாம விட்டுட்டேன்..இந்தா காபி எடுத்துக்கோ..

தேங்க்ஸ் சஹி..ம்ம் எப்போ தூங்கினேன்னு தெரில என்றவாறு அவன் காபியை குடித்து முடிக்க என் சஹி பேபி ரெண்டு தடவை அலைஞ்சு காபி கொண்டு வந்ததுக்கு கிப்ட் தராம அனுப்பினா நல்லாவா இருக்கும்என அவன் முடிப்பதற்குள் சஹானா ஓடிச் சென்று அறைவாசலில் நின்று கொண்டாள்..

நீ ஒண்ணும் தர வேணாம் ஒழுங்கு மரியாதையா கீழ வா எல்லாரும் உனக்காகதான் வெயிட்டிங்..என திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டாள்..

சற்று நேரத்தில் கார்த்திக்கும் ரெப்ரெஷ் ஆகி கீழே வரஅனைவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..வா அண்ணா எல்லாருமே ஒரு தூக்கம் தூங்கி எழுந்தாச்சு சோ எதாவது கேம் கண்டெக்ட் பண்ணலாம்நு இருக்கோம் வா வா உக்காரு என்றவாறு கையிலிருந்த பேப்பரை சிறு சிறு காகிதங்களாய் பிரித்து அதில் ஏதேதோ எழுதி சிறு டப்பாவில் போட்டு குலுக்கினான்..

அனைவரும் வட்டமாய் அமர்ந்திருக்க. முதலில் ஷரவந்தியிடம் நீட்ட அதை பிரித்தவளோ முடியவே முடியாது நா பண்ணமாட்டேன் என்று அடம்பிடிக்க ஷாரவன் என்னவென பார்க்க லவ் ப்ரபோஸ் பார் யுவர் வலன்டைன் என்றிருந்தது..சிவாவோ மச்சான் நீ தெய்வம்டா என் கஷ்டம் உனக்கு புரிஞ்சுருக்கு டீச்சரம்மா ஐ அஅம் ரெடி..

எவ்வளவு கெஞ்சியும் யாரும் விடுவதாய் இல்லை என்பதை உணர்ந்து சில நொடிகளில் எழுந்து சிவா அருகில் சென்றவள்,இந்த உலகத்துல என் குடும்பம் எனக்கு கொடுத்த பாசத்தையும் பாதுகாப்பையும் வெளி ஒரு ஆளா உங்ககிட்ட நா உணர்ந்தேன்.. ஒரு வேளை அதுக்கு பேர் காதல்னா லவ் யூ மேட்லி ப்ரம் மை பாட்டம் ஆப் தி ஹார்ட்..ஐ லவ் யூ என்று முடிக்க சிவா மெய்மறந்து போனான்..மற்றவர்களின்ஆரவாரத்தில் சுயநினைவிற்கு வந்தவன் தன்னவளிடமிருந்து விழி அகற்றாமல் இருக்க ஷரவ் ஓடிச் சென்று தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள்..அடுத்ததாய் கௌரியின் முறை சீட்டை பிரித்து பார்த்தவள் திருதிருவென முழிக்க ஷரவன் அதை கையீல் வாங்கிப் படித்தான்..த டே வென் யூ சா யுவர் வலெண்டைன் பார் த பர்ஸ்ட் டைம்..என்றிருந்தது..சிவா வழக்கம்போல் அவன் காதருகில் வந்து மச்சான் பின்ற போ இப்போதான் தெரியுது எதுக்கு இந்த கேம் சூஸ் பண்ணணு..

அய்யோ மாமா ஆரம்பிக்காதீங்க பாருங்க அவ என்னை கண்ணாலேயே எறிச்சுருவா போல நா எதார்த்தமா எழுதினேன் அது அவ கைக்கு போகும்நு எனக்கென்ன தெரியும் என்று வெளீயே கூறினாலும் மனதினுள் ஒரு சிறு எதிர்பார்ப்பு இருந்து கொண்டுதான் இருந்தது..

அவளோ நிதானமாய்  ஏப்ரல் 6. என்றுகூற ஷரவன் ஒரு நொடி உறைந்துபோனான்..என் லைவ் பார்ட்னர நா இன்னும் பாக்கல இப்போதைக்கு என் வலெண்டைன்னா என் அப்பா அம்மா தான்..சோ அவங்கல நா பர்ஸ்ட் பாத்தது நா பிறந்த அன்னைக்கு அந்த டேட் தான் சொன்னேன் என்று முடித்த போதுதான் உயிர் வந்ததாய் தோன்றியது ஷரவனுக்கு..மச்சான் தப்பிச்ச உனக்கு போட்டிக்கு ஆள்லா இல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.