(Reading time: 22 - 43 minutes)

ந்த விடியல் அனைவருக்குமே ஒருவித பயத்தை கொடுத்திருக்க சஹானா எழுந்ததிலிருந்து ஷரவந்தியை காணாமல் வெளியே வர அங்கு அம்சமாய் கிளம்பி நின்றவளை பார்த்ததும் விசிலடித்தவாறே அருகில் வந்தாள்..

என்ன நாத்தனாரே இவ்ளோ அழகா ரெடி ஆய்ட்டீங்க????என்ன மேட்டர்??

அண்ணி கிண்டல் பண்ணாதீங்க அவரோட வெளில போறேன்..

அடடா எங்க உங்க அவர காணும்???

ஏய் என்ன அங்க என் பொண்டாட்டிய ராகிங் பண்ணிட்டு இருக்க??

அதான மூக்கு வேர்த்துருமே உனக்கு.. இன்னைக்காவது ஷரவ்வ வெளில கூட்டிட்டு போகணும்னு தோணிச்சே உனக்கு..ஹவ் அ நைஸ் டே பை..என துள்ளிச் சென்றவளை பார்க்க மனதை பிசைந்தது இருவருக்கும்..எல்லாம் நல்லபடியா நடக்கனும் ஷரவ்..அதுக்காக தான சிவா கோவிலுக்கு போறோம் தைரியமா இருங்க என ஆறுதல் படுத்தினாள்..

சஹானாவும் கார்த்திக்கும் சாப்பிட அமர கௌரி பரிமாறினாள்..ஷரவன் தலையில் கைவைத்தவாறு ஹாலில் அமர்ந்திருக்க கார்த்திக் அவனை அழைத்தான்..

இல்ல அண்ணா ஸ்டொமக் அப்செட் மாறி இருக்கு எனக்கு ஒண்ணும் வேண்டாம்..மதியத்துக்கு மேல பசிச்சா சாப்ட்டுகிறேன்..தேடுவீங்களேனு தான் வெயிட் பண்றேன்..நா போய் படுத்துக்குறேன் என அவனும் உள்ளே செல்ல..

சஹானா கௌரியிடம்,நீயும் எங்களோடாயே சாப்டேன் கௌரி..எப்படியும் தனியா தான சாப்டுவ..

இல்லக்கா என் ப்ரெண்ட் வரேன்னு சொல்லிருக்காங்க அவங்களோட சேர்ந்து சாப்ட்டுகிறேன் நீங்க சாப்டுங்க..

ஓ..சரி ஓ.கே என்று சாப்பிட்டு முடிக்க கார்த்திக் பேப்பர் படிப்பதாய் வந்து ஹாலில் அமர சஹானா சமையலைறைக்குச் சென்றாள்..நேரம் ஆக ஆக கார்த்திக்கிற்கு உள்ளுர பயம் பரவிக் கொண்டேயிருந்தது..தான் செய்வது சரியா தவறா என ஆயிரம் முறை யோசித்து விட்டிருந்தான்..அதற்குள் வாசலில் அழைப்பு மணி அடிக்க கௌரி வந்து கதவை திறந்தாள்..கௌரி கண்களால் அவளை அறிமுகப்படுத்த கார்த்திக் சிறு தலையசைப்போடு நிறுத்திக் கொண்டான்..சஹானா வெளியே எட்டிப்பார்க்க கௌரி அவர்களுக்கான அறிமுக படலத்தை தொடங்கினாள்..

சஹானாக்கா இவங்க காயத்ரி என்னோட ப்ரெண்ட்..

ஹே ஹாய் காயத்ரி வாங்க வாங்க நீங்க தான் கௌரியோட க்ளோஸ் ப்ரெண்டா உங்களுக்காக சாப்டாம வெயிட் பண்ணிட்டு இருக்கா வாங்க பர்ஸ்ட் சாப்டலாம்..

அக்கா பரவால்ல நா பாத்துக்குறேன் நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க..-கௌரி..

அட அதென்ன பெரிய வேலையா வா கௌரி எப்படியும் வீட்ல யாரும் இல்ல எனக்கும் போர்தான் அடிக்குது அதுக்கு உங்களுக்கு கம்பனியாவது கூடுப்பேன்ல..வா உக்காரு என்றவாறு பரிமாற தொடங்கினாள்..

ஆமா ப்ரெண்ட்ங்கிற அப்பறம் ஏன் வாங்க போங்கநு கூப்டுற???

இவங்க என் காலேஜ் சீனியர் சஹானாக்கா..

வாவ் சீனிர் ஜுனியர் ப்ரெண்ட்ஸ்ஸா இன்ட்ரெஸ்ட்டிங்..எப்படி??

ஒரு நாள் காலேஜ்ல ஒரு நோட்ஸ் விஷயமா என்கிட்ட ஏதோ கேக்க வந்தா கௌரி அப்போ சும்மா பேச ஆரம்பிச்சோம் அது எங்கெங்கேயோ போய் எங்க ஸ்டடீஸ்ல உள்ள ஹிப்னோதெரபில போய் லேண்ட் ஆய்டுச்சு..இவளுக்கும் என்னமாறியே அதுல இன்ட்ரெஸ்ட்னு தெரிஞ்சுது அப்போயிருந்தே டைம் கிடைக்குறப்போலா அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்..அது அப்படியே ப்ரெண்ட்ஷிப் ஆய்டுச்சு இப்போகூட அது சம்மந்தமா ஒரு ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் கேட்டுதான் வந்துருக்கேன்..

வாவ் அப்போ நீங்க நம்ம சூர்யா சார் படத்துல வர்ற மாறி எல்லாரையும் வசியம் பண்ணிடுவீங்களா??

ஹே அப்படிலா இல்ல அது ஹிப்னாட்டிஸம் இது ஹிப்னோதெரபி முன்ஜென்மத்தை பத்தி தெரிஞ்சுக்குறதுக்கான தெரபி..இதவச்சு பாஸ்ட் லைப்ல நாம என்னவா இருந்தோம் எப்படியிருந்தோம்நு தெரிஞ்சுக்கலாம்..பார் எக்ஸாம்பில் சிலருக்கு எதுமேலேயாவது தேவையில்லாத பயமோ வெறுப்போ இருக்கலாம்..அதனால அவங்களோட இயல்பு வாழ்க்கைல பாதீப்பு வரலாம் அப்படியிருக்கும் போது சைக்காட்ரிஸ்ட் கிட்ட போனா அவங்க கவுண்சிலிங் மூலமா அத குணப்படுத்த பாப்பாங்க ஒரு வேளை அது சரி வரலனா அடுத்ததா அவங்கள ஹிப்னோதெரபி குடுத்து சரி பண்ணுவாங்க..

ஹய்யோ என்னென்னவோ சொல்றீங்க கேக்கவே இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு..

ம்ம் ஆமா சஹானா இப்போ கூட என் தீசிஸ்க்காக இங்க பக்கத்துல இவளோட ப்ரெண்ட் ராதிகா இருக்கா அவளுக்கு ஹிப்னோதெரபி குடுத்து நோட்ஸ் எடுத்துக்கலாம்நு தான் வந்தேன்..

அய்யோ அக்கா அவதான் ஊர்ல இல்லையே நேத்துதான் அவங்க சொந்தகாரங்க யாரையோ பாக்கனும்னு ஊருக்கு போனா..

என்னகௌரி சொல்ற போச்சு நாளைக்கு நா தீசிஸ் சம்மிட் பண்ணலனா அவ்ளோதான்..இப்போ என்ன பண்றது உன்கிட்ட ஏற்கனவே ஸ்டடீஸ் பண்ணிட்டேன் இல்லனா உன்னையாவது டெஸ்ட் பண்ணலாலம் ஹய்யோ நா வந்ததே வேஸ்ட்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.