(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 12 - தேவி

vizhikalile kadhal vizha

லர்விழியின் திகைத்த பார்வையில் தன்னை தொலைத்தவனாக நின்று கொண்டு இருந்தான் செழியன். எத்தனை நேரம் நின்றார்களோ இருவருக்குமே தெரியவில்லை.

கீழிருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்கவும், முதலில் தெளிந்த செழியன், சுற்று முற்றும் பார்த்து விட்டு.

“மலர் “ என்று அழைக்கவும், மலரும் சுற்றுபுறம் உணர்ந்து , அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாக இறங்க ஆரம்பித்தாள்.

“மலர்... நான் கேட்டதுக்கு பதில் சொல்லலலியே “ என்று செழியன் நிறுத்த,

“நீங்க என்ன கேட்டீங்க.. சாரி நான் கவனிக்கல.?” என்று அவள் எதவும் தெரியாத மாதிரி கேட்க,

“ஹலோ.. மை டியர் விழி.. உன் காது சரியாதான் வேலை செய்யுது.. என்னோட கேள்விக்கு பதில் சொல்லு “ என்று மேலும் அவளிடம் வம்பு செய்தான்.

மலர் அவன் நாமும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதை எண்ணி திகைத்தாலும், ஒருவேளை நம் காதில் தான் சரியாக விழவில்லையோ என்று நினைத்தாள். மீண்டும் அவன் கேட்கவும் அவன் ஏதோ விளையாடுகிறான் என்ற எண்ணம் தான் அவளுக்கு.

ஆனாலும் எதாவது பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் வாயை திறக்க, அப்போது செழியன் அப்பாவின் குரல் கேட்டது.

உடனே செழியன் மலரிடம் மெல்லிய குரலில் , “மலர் நான் உன்கிட்ட பேசணும்.. இன்னிக்கு உனக்கு போன் பண்ணுவேன்.. ப்ளீஸ் அட்டென்ட் பண்ணு... மற்ற விஷயத்தை நாம அப்போ பேசிக்கலாம்” என்றவன்,

அவன் அப்பா வருவதை பார்த்தபடி , “வாங்க மலர் மேடம்... உங்களத்தான் கீழே எல்லோரும் தேடிகிட்டு இருக்காங்க” என்றான்..

அங்கே செழியனின் அப்பா சிவஞானம் அம்மா பார்வதி இருவரும் சாப்பிட வந்து கொண்டு இருந்தனர்.

பார்வதி மலரிடம்,

 “என்னம்மா நீங்க இங்கே நிற்கறீங்க..? சாப்பிடீயா... இல்லை எங்களோட வாம்மா” என்றார்.

“ இல்லைமா.. எங்க காலேஜ் lecturer ஓட நானும் சாப்பிட்டு விட்டேன்.. நான் கை கழுவிட்டு இருக்கும்போது, அவங்க கீழே இறங்கிட்டாங்க.. நானும் அங்கே தான் போறேன்.. “

“சரிம்மா.. நாங்க சாப்பிட்டு வரோம்.. அதுவரைக்கும் கீழே இரும்மா” என,

மலரோ “இல்லை மா.. நான் சாப்பிடும்போது அப்பாக்கு போன் பண்ணிட்டேன்... வண்டி அனுப்பி வச்சுடாங்க.. அதனாலே வண்டி வந்தவுடனே கிளம்பிடுவேன்.. நான் சீக்கிரம் போயிட்டு அவங்களுக்கு வண்டி அனுப்பனும்.. “ என,

“சரிம்மா.. உன்ன பார்த்தது ரொம்ப சந்தோஷம்.. முடியும்போது வீட்டு பக்கம் வாம்மா..” என,

“எனக்கும் உங்கள பார்த்தது ரொம்ப சந்தோஷம் அம்மா. நீங்களும் வீட்டுக்கு வாங்க.. வரேங்கமா.. வரேங்க ஐயா”

“சரிம்மா “ என்றனர் இருவரும்.

அதோடு செழியனிடம் திரும்பி “நீயும் சாப்பிட வரயா தம்பி” என வினவ,

“இல்லை பா.. நான் இவங்கள எல்லாம் வழி அனுப்பி வச்சுட்டு.. அப்புறம் செந்திலோட சாப்பிடுறேன்..” என,

“சரிப்பா .. நீ போ “ என்று அனுப்பினார்.

இவர்கள் பேசும்போதே மலர் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, இப்போது செழியனும் கீழே இறங்கினான்.

பார்வதி அவர் கணவரிடம் “நல்ல பொண்ணா இருக்குங்க இந்த மலர்.. “ என்று கூறிக்கொண்டே மேலே சென்று கொண்டிருந்தார்.

சிவஞானமும் “ஹ்ம்ம்.. “ என ஆமோதித்தாலும், அவர் மனதில் ஏதோ யோசனை ஓடிக் கொண்டு இருந்தது.

மலர் கீழே சென்று, hod, வளர்மதி மற்ற ஆசிரியர்கள் இருந்த இடத்தில சென்று அமர்ந்தாள்.

அங்கே பேச்சு சுவாரசியாமாக சென்று கொண்டு இருந்தது. அன்றைக்கு காலையில் அவரவர் வீட்டில் நடந்த கலாட்டக்கள், மற்றவர்களின் திருமண நாளில் நடந்த மலரும் நினைவுகள் என்று அரட்டை களை கட்டியது.

HOD தன் சகாக்களிடம் “ ஹ்ம்ம்.. இங்கே பாரு கல்யாணம் நிச்சயம் ஆனதில் இருந்து இப்போ கல்யாணத்திற்கு லீவ்லே போற வரைக்கும் டெய்லி மத்தியானம் சாப்பிடுறானோ இல்லியோ போனே தூக்கிட்டு staff ரூம் ஓரத்துக்கு போய் பேச ஆரம்பிச்சான் செந்தில்.. காலேஜ் லஞ்ச் பெல் அடிக்குதோ இல்லியோ, இவன் போன் ரிங் ஆயிடும்.. இன்னும் அந்த பழக்கம் மாறாம கடலை போட்டு இருக்கான் பாரு செந்தில் “ என்று பெருமூச்சு விட,

“இதுலே உங்களுக்கு என்ன காண்டு தல” என்று செழியன் வினவ,

“ஹ்ம்ம்.  இந்த காலம் மாதிரி அப்போ எல்லாம் பொண்ண பார்த்து , பழகி கல்யாணம் பண்ணிருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.. நானும் கடலை வறுத்து இருப்பேன்.. “

“ஏன் இப்போ மட்டும் என்ன பிரச்சினை.. நீங்களும் லஞ்ச் அவர்லே போன் பேசுங்க..?”

“எங்கடா.. நான் செந்தில பார்த்திட்டு, ஒரு நாள் உங்க ஆன்ட்டிக்கு போன் பண்ணினால் , என்ன நடந்துச்சு தெரியுமா ? என்று அவர் மேலே பார்க்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.