(Reading time: 11 - 22 minutes)

“ஹலோ மலர்... செழியன் பேசுகிறேன்”

“ஹ்ம்ம்...” என,

“மலர்.. நான் உன்கூட நேர்லே பேசணும்.. எங்கே மீட் பண்ணலாம்..?”

“எங்கிட்ட என்ன பேசணும்..? இப்போவே சொல்லுங்க”

“அது நேர்லேதான்மா பேசணும்.. “

“அப்போ எங்க வீட்டுக்கு வாங்க..”

“ஐயோ.. வீட்டிலே எல்லாம் முடியாது.. வெளியில் எங்காவது போய் பேசலாம்”

“நான் வெளியில் எல்லாம் வரமாட்டேன்..”

“ப்ளீஸ்.. எங்கியாவது வெளிலே தான் பேசணும்”

“காலேஜ் லே பார்ப்போமே அப்போ பேசலாம்..”

“ஓகே..ஓகே.. காலேஜ்லே வச்சு பேசலாம்.. அனால் நாளைக்கே பேசணும்”

“ஹ்ம்ம்.. காலேஜ் லீவ் தானே.. அங்கே யார் வருவா? அதோட நான் வீட்டில் என்ன சொல்லிட்டு வர முடியும்?”

“ஹேய்.. அது ஒன்னும் பிரச்சினை இல்லை .. இன்டெர் காலேஜ் கிரிக்கெட் மேட்ச் வருது.. அதுக்கு practice பண்ண பசங்க வருவாங்க.. அவங்களுக்கு கோச் நான் தான்.. சோ நானும் போவேன்.. நீ எதாவது refer பண்ணனும்னு சொல்லிட்டு காலேஜ் வா..”

“நான் அப்படி எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்..”

“ப்ளீஸ்.. நீ பொய் எல்லாம் சொல்ல போறதில்லை.. அடுத்த செமஸ்டர் க்கு நம்மோட சிலபஸ் உள்ளே portion எப்படி கவர் பண்றதுன்னு ஒரு பிளான் போட போறோம்.. அதுக்கு கொஞ்சம் basic வொர்க் இருக்கு.. எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ வரதா சொல்லிட்டு வா.. நாம பேசிட்டு அந்த வேலையும் பார்க்கலாம்”

மலர் எதுவும் பதில் சொல்லாமல் இருக்க, செழியன்

“ப்ளீஸ்.. இந்த ஒரு தடவை வா.. நான் உன்கிட்ட சொல்ல போற விஷயம் உனக்கு பிடிக்கல என்றால் உன்னை அதுக்கு அப்புறம் disturb பண்ண மாட்டேன்” என

அவனின் குரலில் கட்டுண்டவளாக,

“சரி .. வீட்லே கேட்டுட்டு உங்களுக்கு மெசேஜ் பண்றேன்..” என்றாள்.

“தேங்க்ஸ் மா.. நீ சொன்னதுக்கு அப்புறம் தான் நான் டைம் பிக்ஸ் பண்ணனும்.. சோ எனக்கு சீக்கிரம் மெசேஜ் பண்ணு .. பாய்..” என்று முடித்தவன்.

செழியன் “டேய்.. அவள் கிட்டே propose பண்றதுக்கே தலையால தண்ணி குடிக்க வேண்டி இருக்கே... இனி அவளை சம்மதிக்க வைக்க என்ன எல்லாம் செய்யணுமோ.. தெய்வமே .. என்னை காப்பாத்து.. “ என்று மனதுக்குள் வேண்ட,

அவன் மனசாட்சியோ “டேய்.. அப்போ இன்னிக்கு மத்தியானம் நீ பண்ணினதுக்கு பேர் என்ன..?

“ஹா.. அதுவும் propose தான்.. இருந்தாலும் அது unexpected தானே..”

“ஆமாம். உனக்கு இது எல்லாம் நான் வர போறேன்நு தந்தி போட்டுட்டு வரும் பாரு.. அப்போ நீ சொன்னப்போவே அவ கத்தி ஊர கூடிருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும்டி இன்னிக்கு உனக்கு சங்கு தான்..

ஊர் எல்லாம் வேண்டாம்.. எங்க அப்பா ஒருத்தர் கிட்டே மாட்டி விட்ருந்தா போதும் , என் மொத்த வாழ்க்கைக்கும் ஆப்பு தான்..

தெரியுதில்ல.. அப்போ close தி door.. நாளைக்கு நல்ல பிள்ளையா போய் அவகிட்டே உன் மனச எடுத்து சொல்லு புரியுதா .. என்று மனசாட்சி விரட்டியது.

“சரிங்க எசமான்.. அவ்ளோதானா.. வேறு எதுவும் இருக்கா?” என்று இவனும் பதிலுக்கு நக்கல் விட்டான்.

மலரிடம் பேசி முடித்த உடன் குளித்து உடை மாற்றி வந்தவன், நேராக சென்றது தன் painting ஹால் க்கு ..

காலையில் இருந்து தன்னை இம்சை செய்த தன் அழகான ராட்சசியின் ஓவியம் வரைந்தான்.. அதிலும் இருவரும் படியில் நிற்க, அவளின் திகைத்த பார்வையும், அவனின் காதல் பார்வையுமாக இருவரையும் வரைந்தான்..

 அவளை பார்த்த நாள் முதல் அவனின் மனம் கவர்ந்த போஸ்களில் அவளை வரைந்து இருக்கிறான்.. என்றாலும் அவளோடு தன்னையும் சேர்த்து வரைவது இதுவே முதல் முறை.. அந்த ஓவியத்தின் கீழ், அழகான ராட்சசி.. என்று குறிப்பு வேறு கொடுத்தான்.

ஓவியம் வரையும் போது மெலிதாக பாடல்கள் ஒலிக்க விடுவான்.. இன்றோ அவன் மனநிலைகேற்ற துள்ளல் பாடல்கள் ஒலித்தது.  அதிலும் சரியாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.