அவள் அத்தனை சுலபத்தில் அவனை தனது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அவன் கோயிலில் அவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு தனது விவரங்களை கொடுத்துவிட்டு சென்ற பின்னரும் பெரிய இடம். அது தங்களுக்கு ஒத்து வராது என்று கிடப்பில் போட்டுவிட்டாள்.
எதார்த்தமாக அவர்கள் தெருவில் வசிக்கும் ஒருவனே அவனைப் பற்றி பெருமையாக உரைப்பது கண்டு அவளது பயம் போயிற்று. அப்படியும் மகளுக்கும் விருப்பம் இருந்தால்தான் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.
அவர்கள் தெருவில் வசிக்கும் அவன் மனுதர்மனிடம்தான் வேலை பார்க்கிறான்.
அவன் தனது தாயிடம் மனுதர்மனைப் பற்றி பெருமையாக பேச நேர்ந்ததை எதார்த்தமாக அவள் கேட்க நேர்ந்தது.
எத்தனையோ பிள்ளைகளை தனது சொந்த செலவில் படிக்க வைக்கிறானாம்.
தொழிலாளிகள
...
This story is now available on Chillzee KiMo.
...
ழப் போன இடத்தில் அவளை ஒழுங்கா வச்சுக்கலை போல. அதான் நீ வேலைக்கு கிளம்பிட்டேன்னு நினைக்க மாட்டாங்க. நீ உடனே வேலையை ரிசைன் பண்றே? இல்லைன்னா. அம்மா இதைப் பத்தி உன்கிட்ட பேச வேண்டியிருக்கும்.”
எடுத்த எடுப்பிலேயே அவளை திட்டித் தீர்த்தவள் உடனே வைத்துவிட்டாள்.
அம்மாவுக்கு தெரிந்தால்?