(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 01 - தீபாஸ்

oten

ன்று காலை முதல் அழகுநிலா  சாப்பிடாமல் படுத்தபடியே இருந்தாள். அதற்கு  அவளின் அம்மா  ராசாத்தி,

“அடியே...! அழகி ஏண்டி இப்படி சண்டித்தனம் பண்ற, பொட்டச்சிக்கு இம்புட்டு பிடிவாதம் ஆகாதடி” நீ என்னதான் முரண்டு புடிச்சாலும் உன்னை டவுனுக்கு வேலைக்கு எல்லாம் நான் அனுப்பமாட்டேன்.

பொத்தி பொத்தி உன்னை வளர்தாச்சு பொறுப்பா உன்னை ஒருத்தன் கையில புடிச்சுகொடுத்துட்டா அப்புறம் உன்பாடு உன் புருஷன் பாடு. உன்னை வேலைக்கு அனுப்பிட்டு வயித்தில நெருப்பக் கட்டிக்கிட்டு என்னால் காலம் தள்ள முடியாது.

பொட்டப் புள்ளைய வேலைக்கு அனுப்பி பொழப்பு நடத்துரமாதிரி என் புருஷன் ஒண்ணும் என்னை தவிக்கவிட்டுட்டுப் போகல, என்று சத்தம் போட்டபடி பின் கட்டில் உள்ள மாட்டுக்கு தண்ணீர் காட்டச் சென்றாள்.

அப்பொழுது காலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்த குமரேசன், என்னம்மா இன்னும் தங்கச்சியை திட்டிக்கிட்டுதான் இருக்கிறயா? என்று கேட்டபடி வீட்டினுள் நுழைந்தவனை கண்டு ராசாத்தி,

எல்லாம் உன் தொங்கச்சிக்கு நீ கொடுக்கிற இடம் தான்.., அப்பவே அவள காலேசுக்கு படிக்க அனுப்பவேண்டாமுனு சொன்னேன், நீ அவளுக்கு சப்போட்டுபண்ணி படிக்க அனுப்புன, இப்பபாரு வேலைக்கு போகணுமுன்னு மொரண்டு பண்ணிக்கிட்டு, சாப்பிடாம கிடக்கிறா.. நானெல்லாம் இவவயசுல ரெண்டு புள்ளைக்கு அம்மாவாகிட்டேன். இது என்னடானா இன்னும் ஒருவருஷம் வேலைபார்த்த பிறகுதான் கண்ணாலம் கட்டிக்கிடுமாம். இது சம்பாதிச்ச பணத்துலதான் இத கரையேத்தனுன்ற நெலமையொண்ணும் இங்க கிடையாது .

என்னை கட்டுன மவராசன் என்னை விட்டுட்டுப் போய்டாலும், ஏ...புள்ளைகளை கரையேத்த எனக்கு வசதிய வச்சுட்டுத்தான் போனாறு.  என்று மகனை திட்ட ஆரம்பித்து புலம்பலில் முடிக்காமல் தொடர்ந்து கொண்டேபோன தன் அம்மாவை பார்த்து,

ஏம்மா..! அது படிச்ச படிப்பு வீணாகக் கூடாதுன்னு ஒருவருஷம் வேலைக்கு போறேன்னு சொல்லுது. “போகட்டுமே”””’””“ நல்ல வரன் வந்தா வேலையைவிட்டு நிப்பாட்டிட்டு கல்யாணம் முடிச்சுடலாம்.

அதுக்கு ஏத்த வரன் கிடைக்கிற வரைக்கும் அது வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு பதிலா வேலைக்கு போகட்டுமே என்று தன் தங்கைக்கு பரிந்துகொண்டு பேசிய குமரேசன், வாணி.. என்ன செய்றாமா இவள சமாதானப் படுத்தி சாப்பிடவைக்கலாமில்ல என்று தன் மனைவியை கேட்டான் .

உள்ளிருந்து கணவன் பேசுவதை குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொன்டிருந்த வாணி, க்கும்... இவரு தங்கச்சிக்கு ஊட்டிவிடத்தான் இந்த மனுஷனுக்கு என்ன கட்டிக் கொடுத்திருக்கிறார்களாக்கும் என்று முனுமுனுத்தபடி இருந்தாள் வாணி .

அவன் கூறியதை கேட்ட ராசாத்தி ஆமா….  உன் பொண்டாட்டி புள்ள சாக்கு வச்சு அவ சாப்பாட்டையே ஒரு ஆளு, அவளுக்கு எடுத்து போட்டுக் கொடுக்கணுமுன்னு சொல்லுரரகம். அவபோயி என்மகளை சாப்பிடவச்சுட்டுத்தா.... வேற வேலையைப்பார்பா.. போடா போ... என்று அலுத்துக்கொண்டாள் .

ழகுநிலா, பெயரைப் போலவே அழகான ஒளிவீசும் களங்கமில்லா நிலவு போல முகமும் .செப்புச்சிலைபோல் உடலமைப்பும் கொண்டவள். ஆனால் தன் அழகை தானே அறியாதவளும் தன்னிடமுள்ள அழகை பகட்டாக பறைசாற்றத்தெரியாத சுபாவமும் துடுக்குத்தனமும்  உள்ள கிராமத்தில் வளர்ந்த பெண் .

கிராமத்தில் ஓரளவு வசதியான வீட்டில் பிறந்த பெண், அவளின் பதிமூன்றாம் வயதிலேயே வயலுக்கு போன அவளின் தந்தை பாம்புக்கடிக்கு ஆளாகி இறந்துவிட்டார்.  அவளின் அண்ணனுக்கும் அவளுக்கும் 7 வயது வித்தியாசம் இருந்ததால் அப்பொழுது அக்ரிகல்ச்சர் படித்துக்கொண்டிருந்த அவள் அண்ணன் குமரேசன் வீட்டின் நிலைமை அறிந்து தன் அம்மாவிற்கு துணையாக பொறுப்புடன் இருந்து அவர்களின் வயல்வெளிகளின் விளைச்சலை கவனித்துக்கொண்டே தன் படிப்பினையும் தொடர்ந்து முடித்தான் .

பள்ளிபடிப்பை முடித்தவுடனே அழகுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டாள் அழகியின் அம்மா ராசாத்தி. ஆனால் அழகி  கல்லூரிசென்று படிக்கவேண்டும் என்று சாப்பிடாமல் தர்ணா செய்து பின் தன் அண்ணனின் சப்போர்ட்டுடன் கல்லூரியில் சேர்ந்தாள்.

அழகியின் அப்பாவின் தங்கை, அழகியின் அண்ணன்  குமரேசனுக்கு தன்மகள் வாணியை கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தினாள். அழகிக்கு கல்யாணம் முடிக்காமல் எப்படி குமரேசனுக்கு கல்யாணம் செய்ய என்று யோசித்தாள் ராசாத்தி .

உடனே, மதினி! என் அண்ணன் இருந்தால் நான் சொன்ன மறுநிமிஷம் என் பொண்ணை உன் வீட்டிற்கு உடனே மருமகளாக்கி கூட்டிவந்திருப்பான். என் அண்ணன்  இப்போ இல்லாததால எனக்கு உரிமைஇருந்தும் உன்கிட்ட தொங்கிகிட்டு இருக்க வேண்டிக் கிடக்கு, என்று சண்டைக்கு வந்தாள்.      .     .  தன் கணவனின் மீது அதிக காதலுடன் குடும்பம் நடத்திய ராசாதிக்கு   அவளின் கணவனின் தங்கை சண்டையிட்டதும் தன் கணவனின் சொந்தம் தன்னை தவறுதலாக நினைப்பதை விரும்பாத ராசாத்தி, தன் மகளுக்கு முன் தன் மகனுக்கு கல்யாணம் செய்ய மனது இல்லாமலே மனம் முடித்து வைத்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.