(Reading time: 18 - 36 minutes)

அவள் கூறியதும் சூதானமா இருந்துக்கோ அழகி, எதுனாலும் உடனே போன் பண்ணு நேரத்துக்கு சாப்பிடு என்று கூறியவன் தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

அச்சோ இம்புட்டு பணம் எதுக்குன்னே எனக்கு, என்று சொல்லிக்கொண்டே அவன் கையில் இருந்த பணத்தை வாங்கினாள் அழகி.

உடனே குமரேசன், எதுக்குனு கேட்டுகிட்டே வாங்கி வச்சுகிட்ட அழகி, உனக்கு வேண்டாம் என்றால் என் கிட்டயே கொடுத்துவிடு என்று சிரித்தபடி கூறினான் .

ம்..கூம் கிடைகிறத எதுக்கு விடனும், பாருண்ணே! எனக்கு சம்பளம் வந்ததும் உனக்கு இதவிட நெறைய ரூபா நான் தர்றேன் . அம்மா குடுத்த ஆயிரம் ரூபாயை வச்சு எப்படி சமாளிக்கிறதுன்னு  நானே கவலைப்பட்டுக்கிடந்தேன். இங்க கேண்டீனில் ஐஸ்கிரீம் விக்குகுமில்ல அதனால் தான் நான் அம்மாவிடம் எனக்கு இன்னும் ரூபாய் வேணுமென்னு கேட்டதுக்கு நான் பெத்த மவன் ஒத்தபைசா செலவழிக்க கூட யோசிச்சு பொறுப்பா இருக்கான். பொட்டச்சி நீ! பொறுபில்லாம செலவழிக்க பணம் கேட்குறேனு ஒரே திட்டு அண்ணே என்றாள்.

அம்மானா அப்படித்தான் சொல்வாங்க அழகி. உனக்கு மூனுமாத ஹாஸ்டல் பீசும், அட்வான்சும், இந்தமாத சாப்பாட்டுக்கு பணமும் முன்கூட்டீயே கட்டிடுவோம் என்று  நான் ஏற்கனவே அம்மாவிடம்  சொல்லிவிட்டேன். மத்தபடி உனக்கு தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்துடுவோம் பிறகு எதுக்கு கையில்  நிறைய காசு என்று  அம்மா நினைத்து  இருக்கும், பாவம்! அதுக்கென்ன தெரியும் பட்டணத்தில் ஆகிற செலவ பத்தி என்று சொன்ன குமரேசன். நீயும் பொறுப்பானவ தான் இருந்தாலும் நம்ம ஊரு மாதுரி இங்க அசால்ட்டா இருக்க கூடாது ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்

நம்ம குடும்பத்து குத்துவிளக்கு நீ அழகி! நீ, பத்தரமா இருந்தாத்தான் நம்ம குடும்பம் கெளரவமாக வாழ முடியும். நீ ஆசை பட்ட என்ற காரணத்துக்குத்தான்  அம்மா வேண்டாம் என்று சொல்லியும் நாம் உன் ஆசையை நிறைவேத்த அதை சமாதானப் படுத்தி உன்னை வேலைக்கு அனுப்ப சம்மதிக்க வச்சேன். உனக்கு வேலை பிடிகாட்டியோ அல்லது வேற எதுவும் தொந்தரவு இங்க ஏற்பட்டாலோ! உடனே யோசிக்காமல் வேலைய உதறிட்டு  ஊருக்கு வந்துவிடனும் சரியா... என்று கூறி அழகுநிலாவிடம் விடை பெற்று சென்றான் குமரேசன்.

----தொடரும்----

Episode # 02

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.