(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 02 - தீபாஸ்

oten

தித்தராஜன் ஆறடி உயரத்தில் ஆளை அசரடிக்கும் கம்பீரமான தோற்றத்தில் கூர்மையான பார்வையிலேயே எதிரில் இருப்போரை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வரும் இன்றைய வேகமாக வளரும் தொழிலதிபன் அவனின் தொழில் திறமையைக் கண்டு தொழிலின் அடிபடையில் அவனோடு இணைய ஆர்வம் காட்டும் தொழில் சார்ந்த மற்றவர்கள் கொடுக்கும் பார்டிகளில் கலந்துகொள்ளும் போதுதான் அவளை சந்தித்தான் நம் ஆதித்.

இன்றும் அதேபோன்ற பார்டியில் கலந்து கொள்ளவே அந்த பெரிய பார்டி ஹாலினுள் நுழைந்தான் ஆதித்.

அவன் உள் நுழைவதை பார்த்ததும் அஜய்சந்த் வேகமாக அவனை வரவேற்கும் விதமாக விரைந்து வந்து அவன் கை பற்றி குலுக்கியவர் வெல்கம் மிஸ்டர்  ஆதித்தராஜ் என்றவர், மற்றவர்களிடம் அவனை அறிமுகப்படுத்தினார், அறிமுகங்களை கவனமாக கேட்டாலும் அவனின் கண்கள் அவள் எங்கே என்று தேடியது. ஆதித் வர்ஷாவை கண்களினால் தேடிக்கொண்டு திரும்புகையில் வர்ஷா யாரோ ஓர் ஆணுடன் புன்னகையுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்.

. அவ்வளவு நேரமும் ஆதித் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்ப்புடன் காத்து இருந்த வர்ஷா அவன் வருவதற்கு சற்று முன்புதான் அவளின் தோழி ரோசி, வர்ஷாவிடம் “இது மாதேஷ், என்னுடைய நண்பன்  என்று ஆர்வமுடன் அவளை பார்த்தபடி அறிமுகத்திற்காக கைகுலுக்க கைநீட்டிய அவனை அறிமுகப் படுத்தினாள் .

சிவந்த நிறத்துடன் பார்த்தவுடன் பெண்களை கொள்ளைகொள்ளும் அழகுடன் சிரித்தமுகமாக தன்னிடம் கைநீட்டிய அவனின் கை பிடித்து “ஹாய் ஐ ஆம் வர்ஷா” என்றாள்

அவளின் கைபிடித்து குலுக்கியவன் ‘இவ்வளவு அழகான பெண்ணின் அறிமுகம் இந்த மாதேசுக்கு கிடைத்தது என் பாக்கியம்’, என்று கூறினான் .

அவன் அவ்வாறு கூறியதும் சிரிப்புடன்  தேங்க்ஸ் என்று கூறிக்கொண்டு நிமிர்ந்தவள், அவனின் பின்னால் கனல் வீசும் கண்களுடன் அவளை பார்த்துக்கொண்டு நின்ற ஆதித்தை  பார்த்தவள் “அச்சோ..! எப்போ இவன் வந்தான் இப்படி முறைத்துவேறு பார்கிறானே என்னசெய்துதான் இவனை மாற்றுவது” என்ற யோசனையுடன் மாதேசிடம் நாம் இன்னொருநாள் பேசலாம் என்று அவனிடம் கூறியவள் ஆதித்திடம்  வந்தாள்.

அப்பொழுது தன் பின்னால் திரும்பி பார்த்த மாதேசின் கண்களும் ஆதித்தை  பார்த்து இவனா...? என்ற கேள்வி எழுந்தது மனதில். அதே நேரம் அவன் முகத்தை பார்த்த ஆதித்துக்கு  யாரை தான் பார்க்கவே கூடாது என்று தன் தாயுடன் சென்னை வந்தானோ அவனை பார்த்ததும் அவனின் முகம் இறுகியது .

ஆதித்தராஜ்  மிகவும் தன்மானம் உள்ளவன் தொழிலில் முன்னேறி நல்ல நிலைக்கு வந்து தன் அன்னையையும் தன்னையும் இழிவாக பேசியவர்களில் முன் அவர்களை விட பல மடங்கு பொருளாதாரத்தில் முன்னேறி, அவர்களே தன்னை பார்த்து பிரமிக்க வேண்டும் என்ற வெறியில் இது வரை வேறு எதிலும் தன் கவனத்தை செலுத்தாமல் உழைத்து தனக்கென ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே இளம் வயதிலேயே உருவாக்கியவன், இனிமேல் தன் தொழிலில் தன்னை யாரும் மிஞ்சிவிட முடியாத வழிமுறைகளையும் அதற்கான வலுவான அடித்தளத்தையும் போட்ட பிறகே, அவன் தனது எட்டாம் வகுப்பறையில் ஆரம்பித்த வெறி பயணத்திற்கு கொஞ்சம் இளைப்பாற வேண்டும் என்று கொஞ்சம் தன்னை சுற்றி  பார்க்க ஆரம்பித்தான்

அப்பொழுது மிகவும் அழகான வர்ஷா  தன்னை ஆர்வமாக பார்ப்பதை பார்த்தவனுக்கும் அதில்  ஆர்வம் உண்டானது. இதற்கு முன் அவன் படிக்கும் காலம் முதல் அவனின் திறமையை கண்டும் அவனின் ஆரடி  உயரத்தையும், ஆண்மைக்கே இலக்கணமாக இருந்த  உருவத்தையும் கலையான முகவடிவத்தையும், அவனின் தேர்ந்தெடுத்த உடுத்தும் உடையின் அழகாலும் ஈர்க்கப்பட்டு பல அழகான பெண்கள் அவனிடம் நெருங்கி பழக முன்வந்தனர். ஆனால், அதனால் தனது லட்சியம் தடை பட்டு விடுமோ! என்ற அச்சத்தில்,ஆட்சேபமான கண் பார்வையில்  அவனை யாரும் நெருங்காது தள்ளிவைத்தான்.   .

வர்ஷாவின் பேரழகு அவனுக்கு இப்பொழுது இளைப்பாற தேவையாக இருந்தது மேலும் அவளும் தன்னை ஆர்வமாகப் பார்ப்பதை பார்த்தவன் அவளை தன்னவளாக ஆக்க முடிவெடுத்து காதலை சொன்ன பிறகு அவன் தொழிலில் எந்த அளவு முன்னேற வேண்டும் என்று இதுவரை மூர்க்கமாக இருக்கிறானோ, அதே போல் தனக்குரியவளை கட்டுப்படுத்துவதிலும் மூர்க்கமாக இருந்தான்  இதனால் இருவருக்கும் இடையில் மோதல்கள் வர ஆரம்பித்திருந்தது .அதுவும் தொடர்ந்து இருமுறை அவன் கலந்து கொண்ட பார்டிகளில் அவனின் அப்பாவின் மூத்தமனைவியின் மகன் மாதேசைப் பார்த்ததில் இருந்து கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருந்தான் . .

மாதேஷ்  அழகான பணக்கார வீட்டுப் பிள்ளை  பெண்களை மயக்கும் சிவந்தநிறம் கொண்டவன். மாதேஷ் பெண்கள் விரும்பும்  சாக்லேட் பாய்  தோற்றத்துடன், மலர்ந்தமுகத்துடன் எதிராளியை தன் பேச்சின் மூலம் எளிதாக நட்பாக்கிக்கொள்ளும் தன்மை உடையவனாக  இருப்பான். ஆனால், ஆதித் கம்பீரமான களையான உயரமான எதிராளியை பார்த்தவுடன் கணிக்கக்கூடிய கூர்மையான் பார்வை உள்ளவனாக யாரும் எளிதில் நெருங்க முடியாதபடி  இருப்பான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.