(Reading time: 18 - 35 minutes)

சரியாக இரவு 9.30க்கு வீட்டிற்குள் நுழைந்த ஆதித்துக்கு அந்த பெரிய வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு தனக்காக காத்திருக்கும் தன் அம்மாவை பார்த்தவன் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தான். வந்தவன் அவனது அம்மா ஜானகியின் அருகில் நின்று தன்னை அறியாமல் உட்கார்ந்தவாறே கண் அயர்ந்து இருந்த தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்

சாந்தம் தவழும் மென்மையான சுபாவம் கொண்ட பார்த்தவுடன் மரியாதை கொடுக்கும் தன்மையுடன் அழகே உருவான தன் அம்மாவின் வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் ஏன் இல்லாமல் போனது. நான் கூட எனது எட்டாம் வகுப்பு படிக்குப் போதிலிருந்து இவரின் முகம் பார்த்து பேசியதில்லையே கடந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஏதோ கொஞ்சம் அவருடம் இணக்கமாகப் பேசுகிறேன் என்று நினைத்தவன் ஓர் பெருமூச்சோடு சத்தம் செய்யாமல் தனது அரைக்கு சென்று ரெப்ரஸ் ஆகி வெளியில் வந்தான் .

சாப்பாடு மேஜையின் மீது ஆதித் சாப்பிடுவதற்கு தட்டை எடுத்துவைத்துக் கொண்டிருந்த ஜானகி “ஆதித் வந்ததும், என்னை எழுபியிருகலாம்ல, நீ உன் ரூம் திறக்கும் சத்தத்தில் தான் கண் விழித்தேன்” வா வா பசியோட இருப்ப, இன்னைக்கு உனக்கு பிடிச்ச ஆப்பமும் தேங்காய் பாலும் செய்திருக்கிறேன்.  வந்து சாப்பிடு. என்று புன்னகையோடு தன் மகனை அழைத்தார் ஜானகி.

“எதுக்குமா நீங்க அடுப்படியில் சமைத்து கஷ்டப்படுறீங்க வேலம்மாளிடம் என்ன செய்யணும் என்று  சொன்னா செய்துடப் போறாங்க” என்று கூறினான் ஆதித்

எனக்கு இருக்கிற ஒரே சந்தோசமே உனக்கு சமைச்சு என் கையால்  பரிமாறுவதுதான் இந்த ஓர் வேலையும் செய்யாவிட்டால் எனக்கு எப்படி பொழுது போகும், காலையில் இருந்து சாயந்தரம்  வரைக்கும் நான் மட்டும் தனியா சும்மாதானே இருக்கிறேன்.

என்னமோ இந்தமாசம் அவரும் வரல உடம்பு எதுவும் சரியில்லையோ? வேறு என்னவோ?என்று கவலையாக இருக்கு போன் பண்ணும் போது கேட்டாள் நல்லாத்தான் இருக்கிறேன் கொஞ்சம் வேலை ஜாஸ்தி அப்படின்னு சொல்கிறார் என்று தன்னை அறியாமல் புலம்பியபடி அவனுக்கு தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவள் தன் மகன் சாப்பிடுவதை நிறுத்தி தன்னை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தவள் டக்கென தனது புலம்பலை நிறுத்தி விட்டார்.

“நான் வேற புள்ள சாப்பிடும் போது கண்டதெல்லாம் பேசிக்கிட்டு” என்று கூறியவளுக்கு மனம் வலிக்கத்தான் செய்தது, இருந்தாலும் அவனின் முன் தன் கணவரை பற்றி பேசினால் கடந்த ஐந்து வருடமாக எதோ கொஞ்சம் தன் முகம் பார்த்து பேசும் மகன் திரும்பவும் தன்னிடம் பேசாமல் வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வானோ? என்ற பயத்தில் தன் மன உணர்வுகளை தன்னுள்ளேயே போட்டு அழுத்திக்கொண்டார் ஜானகி

அவர் மெளனமானதும் தன் தட்டில் உள்ளதை சாப்பிட ஆரம்பித்த ஆதித்துக்கு தனது தந்தையின் மேல் கோபம் எப்பொழுதாயும் விட சற்று அதிக கோபம் ஏற்பட்டது, தான் கடந்த இருமாதமாக மாதேஷை அங்கங்கு பார்டிகளில் பார்ப்பதில் இருந்து அவன் மறக்க நினைத்த நினைவுகள் சிறுவயது அவமானங்கள் மற்றும் தற்போது அவன் தன் வர்ஷாவுடன் பலக முயல்வது அனைத்தும் சேர்ந்து ஓர் பொங்கும் எரிமலையின் சீற்றம் அவன் மனதில் உருவாக ஆரம்பித்திருந்தது.

அவன் அடுத்த ஆப்பத்தை தன் வாயில் பிட்டு வைத்துக்கொண்டே, உங்க புருசனின் மூத்த மகன் கொஞ்ச நாளா சென்னையில் தான் இருக்கிறான். அதனால் தான் உங்க புருஷன் உங்களை பார்க்க இங்க வராமல் இருக்கிறார். அவரிடம் சொல்லி வைங்க என்னை விட்டு என் வழியை விட்டு அவர் மகனை தள்ளியிருக்க சொல்லுங்க. நான் சினனப்பிள்ளையாக இருக்கும் போது என்கிட்டே விளையாண்டு பார்த்தமாதிரி இப்போதும் கேம்பிளே பண்ண பார்த்தான் அவ்வளவுதான். அப்போழுது விளையாண்டதுக்கும் சேர்ந்து இப்போ அவன்  அனுபவிக்கும் படி ஆகிவிடும் என்று நிதானமாக அழுத்ததுடன்  கூறியவன், சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றான்.

அவன் கூறிய செய்தி ஜானகிக்கு வருத்தத்தை கொடுத்தது இருந்தாலும் அண்ணனை பார்த்தியா ஆதித். எப்படி இருக்கான் உன் அண்ணன் தானே அவன் உன்னிடம் வம்பிழுத்தால் நீ ஒதுங்கி போய்விடு என்று கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதும் என்ன அண்ணனா? நான் உங்கள் புருசனையே அப்பான்னு கூப்பிடுறது இல்லை, இந்த லட்ச்சனத்தில் எனக்கு அவன் அண்ணனாம்...? அவன் என்னுடைய எதிரி! நான் முன்னாடி படிச்சுக்கிட்டு இருந்தேன் அதனால் என்னால் உங்களை தனியா கூப்பிடுப் போய் வைத்துக்கொள்ள முடியவில்லை .

இப்பொழுது அப்படியில்லை உங்கள் மகன் பிக்பிஸ்னெஸ்மேன்  அவர் உங்களுக்கு வாங்கி கொடுத்திருக்கும்  இந்த வீட்டைவிட மூன்று மடங்கு பெரிய லக்சூரியஷான பல வீட்டை உங்களுக்கு நான் வாங்கி வச்சுருகிறேன் நீங்கதான் வர மாட்டேங்கிறீங்க.

உங்க புருசனின் அந்த மகன் என்னிடம் திரும்ப வம்பிழுத்தால் அவனை உண்டு இல்லை என்னு ஆக்கிவிடுவேன். உங்களையும் என்னோடு நான் வாங்கியிருக்கும்  வீட்டிற்கு கட்டாயம் கூடிப்போய்விடுவேன் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.