(Reading time: 19 - 37 minutes)

16. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க

நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே

பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் 

உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்

 

செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்

கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய

உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்

விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்

உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல

தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

 

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மா கலங்குரா ?

டுத்த இரண்டு நாட்களிலேயே ஊர் பெரியவர்களிடம் திருமண விஷயமாய் பேச எதிர்பார்த்ததைப் போன்றே எதிர்ப்பு வலுக்க கார்த்திகேயன் தன் முடிவில் உறுதியாய் நிற்க அவனையும் சாமியையும் மனதில் வைத்து அனைவரும் அரைமனதாய் ஒப்புக் கொண்டனர்..

வழக்கமான தங்கள் சந்திப்பில் தேவிகாவிடம் விஷயத்தைக் கூற சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்..பயந்துட்டேயிருந்தேன் மாமா..எனக்கு இந்த ஊரும் சிவனும்தான் எல்லாமே இதைவிட்டுட்டு போக வேண்டியிருக்குமோநு கவலை இருந்துட்டேயிருந்தது..எனக்காக இப்படி பாத்து பாத்து பண்றீகளே உங்களுக்கு நா என்ன கைமாறு பண்ண போறேன்னு தெரில மாமா..

என்ன தேவிம்மா நீ பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுற..நாம நமக்காக பண்றோம் இதுல நீ பிரிச்சு பேசாத..ஆனாலும் இதுக்கு பதிலா நீ ஒண்ணு பண்ணணுமே..

என்னனு சொல்லுங்க மாமா உங்களுக்காக உசுரயே கூட தாரேன்..

ஏய் அதெல்லாம் இல்ல ம்ம் நீ இனி என்னையும் சாமியை கூப்பிடுற மாறி நீ வா போநு தான் கூப்டனும்..

அய்யோ தப்பு தப்பு உங்கள எப்படி அதெல்லாம் முடியாது..

முடியும் தேவிம்மா கண்டிப்பா நீ என்ன அப்படி கூப்பிடுவ.. நீ சாமிய அப்படி கூப்பிடும் போதெல்லாம் கொஞ்சம் பொறாமையா இருக்கும்..ரொம்ப உரிமையோட பேசுறமாறி தோணும் அதே நேரம் என்கிட்ட அந்த உரிமையில்லையோநு தோணுது..அதனாலதான் பரவால்ல நீயா கூப்பிடுற வர நா காத்திருப்பேன்..சரி சரி நாளைக்கு நாம பாபநாசம் போய்ட்டு வரலாம் வரியா??

என்ன மாமா திடீர்நு சாமி ஒத்துப்பாரா தெரிலயே??

ம்ம் சரி போ பரவால்ல இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்றவன் மறுபுறம் திரும்பி நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான்..அன் று இரவு வீட்டிற்கு வந்ததும் சாமி அவளிடம்,தேவி நாளைக்கு காலைல விரைசா எழுந்து தயாராய்டு பாபநாசம் வரை போய்ட்டு வந்துருவோம் கோவில் விஷயமா ஒருத்தர பாக்க போனும் நானும் நேரமே போய் டுத்துக்குறேன் என்றவாறு நகர,தேவிகாவிற்கோ ஐய்யோவென்று இருந்தது..அட கடவுளே அவசரப்பட்டு வரலநு சொல்லிட்டோமே மாமாகிட்ட இப்போ என்ன பண்றது??ச்ச எதுக்கெடுத்தாலும் அவசரம் எனக்கு..என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

மறுநாள் சாமியோடு காலையிலேயே தயாராகி சென்றவள் பாபநாசநாதரை மனமாற வேண்டி கண்திறக்கும் போது தூரத்தில் கார்த்திகேயன் அவளைப் பார்த்து கையசைத்தான்..ஒரு நொடி முகம் மலர கையை தூக்க நினைத்தவள் அருகில் சாமியிருப்பதை உணர்ந்து தலை தாழ்த்திக் கொண்டாள்..சாமி வந்த வேலை விஷயமாய் ஒருவரிடம் பேசிவிட்டு நகர தேவிம்மா வந்த வேலை நினைச்சாமாறி முடியாது போலயிருக்கும்மா இப்போ என்ன பண்ணலாம்..சாயந்திரம் ஆய்டும் போலயிருக்கே சீக்கிரமே கல்யாணம் ஆகப்போற பொண்ணு உன்னையும் கூட்டிட்டு வந்துருக்க கூடாதோநு இப்போதான் தோணுது..என்றவாறு கண்களை நகர்த்தியவர்க்கு கார்த்திகேயன் கண்களில் பட்டான்..

மாப்ள நீங்க எங்க இங்க???

ம்ம் சின்ன வேலையிருந்தது மாமா முடிஞ்சுது ஊருக்குதான் கிளம்புறேன்..உங்க வேலை முடிஞ்சுதா வாங்களேன் சேர்ந்நநே போவோம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.