(Reading time: 19 - 37 minutes)

கார்த்திக் விறுவிறுவென வெளியே வந்துவிட்டான் மூச்சடைப்பதாய் தோன்றியது அத்தனையையும் நினைக்க நினைக்க இதயத்தின் படபடப்பு அடங்க மறுத்தது..ஷரவன் அவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட அதை குடித்து தன் படபடப்பை அடக்க முயற்ச்சித்தான்..சில நிமிடங்களில் காயத்ரி வெளியே வர அவள் கண்களுமே நீர் படர்ந்திருந்ததாய் தோன்றியது..ரொம்ப தேங்க்ஸ் காயத்ரி என்றவனுக்கு வார்த்தை வெளிளிவர மறுத்தது..ரிலாக்ஸ் அண்ணா..கம் டவுண் நாம எல்லாத்தையும் நாளைக்கு டீடெய்லா பேசுவோம்..டேக் கேர்..அவங்க ரெஸ்ட்ல இருக்காங்க ஒன் ஆர் டூ அவர்ஸ்ல எழுந்துருவாங்க..நா வரேன் எனேறவள் பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டாள்..

அடுத்த சில நிமிடங்களில் சிவா ஷரவந்தியோடு உள்நுழைய மூவரின் முகத்தை பார்த்தே விஷயம் சற்று விபரீதம் எனத் தோன்ற கௌரியிடம் நடந்ததை பற்றி வினவினான்..அவள் மொபைலில் பதிவு செய்ததை காட்டினாள்..பார்த்த இருவருக்குமே என்ன பேசவென தெரியவில்லை ஷரவந்தி அழ ஆரம்பிக்க ஷரவனும் கௌரியும் அவளை சமாதானப்படுத்தினர்..சிவாவோ கார்த்திக்கின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்..அவன் கைகளில் கார்த்திக்கின் கண்ணீர் இருதுளி பட பதறியவனாய் அவனை தேற்றினான்..கார்த்திக் உங்களுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியும்நு தோணல ஆனா ஒண்ணு சொல்றேன் அந்த அருணாச்சலம் இந்த பிறவில யாரா வேணா இருக்கட்டும் அவனுக்கு அழிவு நம்மளால தான் இருக்கப் போகுது அவன் எந்த மூலைல இருந்தாலும் சரி அவனை ஒரு வழி பண்ணாம விடபோறதில்ல..

கண்ணீரை துடைத்தவாறு கார்த்திக் அவனிடம் சிவா அவன் இங்க இதே ஊர்லதான் இருக்கனும் நாம இங்க வந்ததே அவன் நம்ம கண்ணுல படணும்ங்கிற காரணத்துக்காகதான் இருக்கும் அதுவும் போக பெயரை வச்சு எனக்கு ஒரு கெஸ் இருக்கு என அமைதியாக, நால்வரும் அவனை அப்பட்ட அதிர்ச்சியோடு பார்க்க,ஆமா என் கெஸ் கரெக்ட்னா நாம தேடுற ஆள் நேத்து நீங்க இன்ட்ரோ குடுத்தீங்களே அந்த அருண் அவனாதான் இருக்கனும் என அதற்கான காரணத்தையும் கூறினான்..

கார்த்திக் அவனா மட்டும் இருக்கட்டும் ஊர்ல இருக்குற அத்தனை கேஸையும் போட்டு அவன உள்ள தள்ரதுதான் என் முதல் வேலை..ம்ம் கண்டிப்பா சிவா நாளைக்கு எதுக்கும் அவன் வீட்டுக்குள்ள போக முடிஞ்சா போய் செக் பண்ணிருவோம் என கார்த்திக் சிந்தனையில் ஆழ்ந்த அதே நேரம் அங்கு அந்த அருண் தலைக்கேறிய போதையில் தன் பார்ட்னரோடு உளறிக் கொண்டிருந்தான்..

அவ பேரு என்ன ஏதோ சொன்னானே ஆங் சஹானா அவளுக்கு அழகாயிருக்கோம்நு திமிரு..சென்னைல பாத்தப்போவே அவ முகம் ஏனோ அப்படியே பதிஞ்சு போச்சு..தீடீர்நு பாத்தா நம்ம ஊர்லயே வந்து நிக்குறா..ஆனா என்னை பாத்தாலே ஏதோ பாக்ககூடாதவன பாக்குறமாறி மூஞ்சிய திருப்பிக்குறா நா அவள முன்னபின்ன பாத்ததுகூட இல்ல..அப்படியிருக்கும் போது என்ன ஏன் வெறுக்குறாநு தெரில இதே வேற பொண்ணா இருந்திருந்தா அடுத்த செகண்ட் நம்ம பசங்கள விட்டு தூக்கிட்டு வர சொல்லிருப்பேன் அந்த வக்கீலோட தங்கச்சியா போய்ட்டா..இதுல இன்னொருத்தன் அவன் பேருகூட கார்த்திக் ம்ம் அவள கல்யாணம் பண்ணிக்க போறானாம் பெரிய ஹீரோநு நினைப்பு..சிலர காரணமேயீல்லாம பிடிக்காதுநு சொல்லுவாங்க தெரியுமா இதுங்க ரெண்டும் அந்த கேட்டகிரி தான்..இல்லனா பாத்து ரெண்டு நாள் ஆனப்பறமும் இப்படி பொலம்பிட்டு இருப்பேனா..என்று பிதற்றிவாறே கையிலிருந்த கோப்பையை விட்டேறிய அது சுவரிலிருந்த வயதானவரின் போட்டோ மேல் விழுந்து அதன் கண்ணாடி உடைந்து விழுந்தது..

ப்ரெண்ட்ஸ் FB முடிச்சாச்சு..இனி ரிவெண்ஞ்ச் அண்ட் ரொமான்ஸ் தான் பெண்டிங்..அடுத்த எபில மீட் பண்றேன்..

தொடரும்

Ninnai saranadainthen - 15

Ninnai saranadainthen - 17

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.