(Reading time: 21 - 41 minutes)

17. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

எனதுயிரே.. எனதுயிரே..

எனக்கெனவே நீ கிடைத்தாய்..

எனதுறவே எனதுறவே

கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்

சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே, கரும் பூக்களே

நீளுமே, காதல் காதல் வாசமே....

எனதுயிரே எனதுயிரே...

எனக்கெனவே நீ கிடைத்தாய்...

எனதுரவே எனதுரவே

கடவுளைப் போல் நீ முளைத்தாய் 

இனி இரவே இல்லை கண்டேன்

விழிகளில் கிழக்கு திசை..

இனி பிரிவே இல்லை அன்பே, உன்

உளறலும் எனக்கு இசை

 

உன்னை காணும் வரையில், எனத

வாழ்க்கை வெள்ளை காகிதம்..

கண்ணால் நீயும் அதிலே

எழுதி போனால் நல்ல ஓவியம்..

சிறு பறவையில், ஒரு வார்த்தையில்

தோன்றுதே நூறு கோடி வானவில்... 

றுநாள் எழுந்தும் எழாதவளாய் சென்று கார்த்திக்கின் அறைக் கதவை தட்டினாள்..தூக்கம் கலைந்தவன் மணியை பார்த்துவிட்டு இவ்வளவு காலையிலேயே யாரா இருக்கும் என்ற யோசனையோடு கதவை திறக்க நைட் பைஜாமாவோடு வந்து நின்றவளை பார்த்து பதறிவிட்டான்..சஹி என்னாச்சு டா??

மாமா நேத்துலேயிருந்து ஒரே டயர்டா இருக்கு ஏன்னே தெரில என்றவள் அவனை தாண்டிச் சென்று கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து சாய்ந்து கொண்டாள்..சிறு சிரிப்போடு அவளருகில் சென்றவன் அவளை பார்த்தவாறு அமர்ந்து அவள் இடைப்பிடித்து தன்புறம் நகர்த்தி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..

சஹி பேபி இதுக்காகவா இவ்ளோ காலைலேயே வந்து சர்ப்ரைஸ் குடுக்குறது..நா தான் நேத்தே சொன்னேன்ல வேண்டாம்நு நீதான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்றேன்னு போன..

பாவமேநு போனேன் மாமா அது இவ்ளோ டயர்டா ஆகும்நு எனக்கென்ன தெரியும்..ஆமா முடிச்சுட்டு வந்து காயத்ரி என்ன சொன்னாங்க..

ம்ம் என்ன சொல்லுவாங்க உங்க தூங்குமூஞ்சி பொண்டாட்டி தூங்கிட்டாங்க உங்க நிலைமை ரொம்ப கஷ்டம்நு சொன்னாங்க என்று பலமாக சிரித்தவனின் கையை இறுக கிள்ளியவள் கிண்டல் பண்ணாத கார்த்திக் அப்பறம் நிஜமாவே கஷ்டபடுவ என அவனை ஏறிட்டுப் பார்க்க

நோ நோ மீ பாவம் என்று தன் தாடையால் அவள் தலையில் இடித்தான்..சரி போ போய் ப்ரெஷ் ஆய்ட்டு வா எதாவது சாப்டு நேத்தே ஒழுங்கா சாப்டலல..என்று அவளை அனுப்பிவிட்டு தானும் தயாராகி வந்தான்.

அப்படி இப்படீயாய் காலை பொழுது கழிய மதிய உணவை முடித்துவிட்டு அனைவரையும் ஓய்வெடுக்க சொல்லிவீட்டு சிவாவுடன் கார்த்திக் கிளம்பினான்..அந்த அருண் வீட்டு தெருவை அடைந்தவர்கள் தங்களுக்குள் செய்ய வேண்டியதை ஒருமுறை உறுதிபடுத்திக் கொண்டு கார்த்திக் அங்கேயே நிற்க சிவா அருண் வீட்டை இருமுறை இங்குமங்குமாய் கடந்துவந்தான் சில நிமிடங்களில் அருண் வெளியே வருவது தெரிய சாதாரணமாய் நடப்பதாய் காட்டிக் கொண்டு நகர்ந்தான்..

என்ன வக்கீல் சார் இவ்ளோ தூரம்???

ஹாய் அருண் சார்..இதுதான் உங்க வீடா??சும்மா போர் அடிக்குதேநு வாக்கிங் வந்தோம் அதுகுள்ள கார்த்திக்கு போன் வந்துருச்சு என கார்த்திக்கை காட்ட அந்தபுறம் திரும்பி அவன் போன் பேசிக் கொண்டிருந்தான்..

ஓ சரி சரி இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டுக்கு வரலனா எப்படி வாங்க காபி சாப்ட்டு போலாம்..

ஐயோ பரவால்ல சார்..நீங்களே வெளில கிளம்பிட்டு இருந்தீங்க எங்களால லேட் ஆக வேணாம்..இன்னொரு நாள் வரோம்..

அட என்ன வக்கீல் சார்..உங்கள கவனிக்குறத விட எனக்கு ஒரு வேலையும் இல்ல வாங்க என கட்டாயப்படுத்த கார்த்திக்கை உள்ளே வருமாறு கைகாட்ட இரு நிமிடத்தில் வருவதாய் அவன் கூற அருணோடு சிவா உள்ளே சென்றான்..

சில நிமிடங்களில் கார்த்திக் வந்துவிட அருண் அவனிடம் என்ன ஆடிட்டர் சார் ரொம்ப பிஸி போல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.