(Reading time: 21 - 41 minutes)

கண்டிப்பா அண்ணா அதுக்கு மேலேயும் இருக்கலாம்..நம்ம புராணப்படி புல்லாகி பூண்டாகி காயாகி கனியாகிநு வரிசைப்படுத்துரோம் சைன்டிவிக்கா பாத்தா நாம முற்பிறவில குருவியா மயிலா மரமா பூவா பட்டாம்பூச்சியா ஏன் உருவமேயில்லாம பேயா கூட அலைஞ்சுட்டு இந்த உடம்புக்குள்ள வந்துருப்போம்..

மை காட்..இதெல்லாம் சாதாரண ஒருத்தர்கிட்ட போய் சொன்னா பைத்தியம்நு சொல்லுவாங்க அதனாலதான் கடவுள் நம்மளோட ஒவ்வொரு பிறவியோட நியாபகங்களையும் அங்கேயே மறக்க வச்சுட்றாரு..அதெல்லாம் நியாபகத்துல இருந்தா மனுஷங்களோட வாழ்க்கையே நரகமாயிருக்கும்..

ஹா ஹா உண்மைதான்..தன் வாழ்க்கை பூரா முன்ஜென்ம ஆராய்ச்சில கழிச்ச சைன்டிஸ்டையே நம்ம மக்கள் நம்பல..அப்பறம்ல தனி மனுஷனா நாம சொன்னத நம்புவாங்க..

அது யாருங்க???-சிவா..

அவர் பேர் ஸ்டீவன்சன்..வெர்ஜீனியா யூனிவர்சிட்டில வேலை பாத்துட்டு இருந்தவரு..எங்களமாறி ஹிப்னோதெரபி பத்தி படிக்குறவங்களுக்கெல்லாம் அவரோட தீசிஸ் எல்லாம் தான் ஓலைச்சுவடி மாதிரி..கிட்டதட்ட 40 வருஷம் அவரு முன்ஜென்மத்தை பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காரு..அப்போ ஒரு தடவை பக்கத்து கிராமத்துல இரண்டு வயசு பையன் ஒருத்தன் சம்மந்தமேயில்லாம ரெண்டு பேர் பேரை சொல்லிட்டு இருந்துருக்கான்..அவன்கிட்ட ஸ்டீவன்சன் விசாரிச்சப்போ தன் பேரு இப்ராஹிம்நும் அவன் க்ரீத்ங்கிற கிராமத்துல வாழ்ந்ததாகவும் 1949ல் காய்ச்சலால இறந்துட்டதாகவும் சொல்லிருக்கான்..அவனோட மனைவியும் பையனும் இன்னமும் அங்க வாழ்றதாகவும் அவங்கள பாக்கனும்னும் சொல்லிருக்கான்..அவன் சொல்ற பகுதி பக்கத்துல தான் இருக்குநு தெரிஞ்சு அவரும் அங்க கூட்டிட்டு போனா அவன் சொன்ன எல்லாமே சரியா இருந்துருக்கு..தன்னோட பால்ய சிநேகிதனையும் அவன் மனைவி பேரையும்தான் சொல்லிட்டே இருந்துருக்கான்..அவனை டெஸ்ட் பண்ணதுல அவனோட முன்ஜென்மம் பத்தின 57 கேள்விகள்ல 51 கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லிருந்தானாம்..மிச்ச 6 கேள்வி கூட அவன் சின்ன பையன்ங்கிறதால அவ்வளவு தெளிவா இல்லாம போய்ருக்கலாம்நு சொன்னாராம்..

இது ஒரு எக்சாம்பில் தான் இதுமாதிரி அவரு 3000 முன்ஜென்ம கேஸ்களை பாத்திருக்காரு..அதுல அவங்க இறந்ததா சொல்ற காரணத்தையும் போஸ்ட்மார்ட்டம் ரீப்போர்ட்டையும் வச்சு தன்னோட ஆராய்ச்சியை சம்மிட் பண்ணாரு ஆனா அதை பல டாக்டர்கள் ஏத்துக்கவேயில்ல..அவரு இறக்குறதுக்கு முன்னாடி பைல் வைக்குற அலமாரியை வாங்கி அதுக்கு ஒரு பூட்டு ரெடி பண்ணாராம் பர்டிக்குலர் வேர்ட் போட்டாதான் அது திறக்குமாம்..அந்த பார்ஸ்வேர்ட்டை யார்ட்டையுமே சொல்லாம தன்னோட மறுபிறவில தானே வந்து அந்த பூட்டை திறப்பேன்னும் அப்போ இந்த உலகம் முன்ஜென்மத்தை பத்தி நம்பும்நும் சொல்லிட்டு இறந்துட்டாரு..பட் இன்னைக்கு வரைக்குமே அது திறக்கப்படாம தான் இருக்கு..

வாவ் க்ரேட் மா எவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்க..கேக்க கேக்க வாயடைச்சு போய்ட்டோம்..-கார்த்திக்..

தேங்க்ஸ்ண்ணா எதுக்காக நா இவ்ளோதூரம் உங்களுக்கு எக்ஸ்ப்லைன் பண்றேன்னா இதெல்லாமே நார்மலா ஹிப்னோதெரபில நடந்தது இல்ல நடக்குறது பட் உங்க விஷயத்துல எல்லாத்தையும் தாண்டி இது இப்படிதான் நடக்கனும்னு கடவுளால நிச்சயிக்கபட்டு நடக்குதுநு தோணுது..ஒரு டாக்டரா இப்படி பேச கூடாதுதான் இருந்தாலும் அதான் உண்மை..தேவிகா மனசுல நினைச்சது நடந்த அடுத்தநொடி சஹானா முழுமையா சஹானாவா தான் இருப்பாங்க..சோ பயப்படாதீங்க அண்ணா..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அந்த அருணாச்சலம் யாருநு கண்டுபிடிங்க..அவனின் முற்றுபுள்ளி நீங்களா இருக்குற பட்சத்துல சஹானா பழையபடி மாறிடுவாங்க..

அக்சுவலா அந்த அருணாச்சலம் இங்கதான்ம்மா இருக்கான்..

வாட்???தென் பைன் இதுக்கு மேல நா சொல்றதுக்கு ஒண்ணுமேயில்ல..அவனை நீங்க பாக்குற அளவுக்கு கடவுளோட ஏற்பாடு இருக்குண்ணா இதுக்கப்பறம் நடக்க வேண்டியதும் கணிக்கப்பட்டுருக்கும்ண்ணா..எல்லாத்தையும் மீறி என் உதவி எப்போ தேவைப்பட்டாலும் சொல்லுங்க நிச்சயமா நா வரேன்..

தேங்க் யூ சோ மச் காயத்ரி நீங்க பண்ண உதவியை நாங்க என்னைக்கும் மறக்கமாட்டோம்..-சிவா..

பரவால்ல அண்ணா..இப்படி ஒரு காதலுக்காக என்ன வேணா பண்ணலாம்..நா கிளம்புறேன் டைம் ஆச்சு என்று புன்னகையோடு விடைப் பெற்றாள்..

வீட்டிற்குள் நுழையும்போது சஹானா கையில் காபியோடு ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள்..இவர்களை கண்டதும் கார்த்திக்கின் மீது காரப் பார்வை வீசியவாறே காபியை பருக சிவா கார்த்திக்கிடம்,இருக்கு இன்னைக்கு உங்களுக்கு ஆப்பு இருக்கு..

ஏன் சிவா நீங்க வேற??

ம்ம் என்ஜாய கார்த்திக் நா வரல இந்த விளையாட்டுக்கு மாட்டினா ஒரு வழி ஆக்கிடுவா என்றவாறு ஷரவந்தியை தேடி உள்ளே ஓடிவிட்டான்…

ஹலோ சஹி பேபி என்றவாறு அவளருகில் அமர்ந்தான்..கார்த்திக் அடி வாங்காம ஓடிடு..நா கோவமா இருக்கேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.