(Reading time: 21 - 41 minutes)

அப்படிலா ஒண்ணுமில்ல சார் இப்டி கண்டினியுவஸ் லீவ் நா எடுத்தாதில்ல அதான் மத்தபடி வேலையெல்லாம் கம்மி தான்…

சும்மா விளையாட்டு கேட்டேன் சார் இந்தாங்க காபி எடுத்துக்கோங்க..

காபியை அருந்தியவாறே வீட்டை சுற்றி கண்களை சுழற்றியவன்,உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு பாத்து பாத்து கட்டிருக்கீங்க..

உண்மைதான் இங்க இருக்குற ஒவ்வொரு கல்லும் எங்க தாத்தா பர்மால போய் சம்பாதிச்சது..வீடு இந்த தெருவுல ஆரம்பிச்சு அடுத்த தெருல தான் முடியுதுனா பாருங்களேன்..வாங்க வீட்டை சுத்தி காட்றேன் என்று பெருமை பீத்தியவாறே வீட்டை சுற்றிக் காட்ட தொடங்கினான்…மாடிக்குச் சென்றவர்கள் அங்கிருந்த ஹால் முழுவதும் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்தவாறு நடக்க கார்த்திக் சட்டென ஒரு படத்தின் அருகில் நின்றான்..அதன் கண்ணாடி உடைந்திருக்க கார்த்திக் அந்த முதியவரையே பார்த்தவண்ணம் நிற்க அருண் அவனருகில் வந்து நேத்து எதோ பட்டு கண்ணாடி உடைஞ்சுருச்சு கார்த்திக் சார் மாத்த சொல்லிருக்கேன் ஆள் வர்ற நேரம்தான்..

அதில்ல சார் இவரு பாக்க உங்களமாறியே இருக்காறே???

ஹா ஹா சார் பயங்கரமான ஆளு நீங்க கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே ஆனா என்ன நா தான் அவரை மாதிரி இருக்கேன்..எங்க தாத்தா இவரு பேரை தான் எனக்கு வச்சுருக்காங்க அருணாச்சலம்..நா தான் சுருக்கமா அருண்ணு வச்சுகிட்டேன் என்று பேசிக் கொண்டே போக கார்த்திக்கோ கோபத்தின் உச்சியிலிருந்தான் என்றால் சிவா கொலைவெறியோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தான்..அதற்குமேல் அவர்களால் சாதாரணமாய் இருக்க முடியாது என தோன்ற ஏதேதோ காரணம் சொல்லி அங்கிருந்து வெளியே வந்துவிட்டனர்..அந்நேரம் சரியாய் கார்த்தியின் மொபைல் சிணுங்க எடுத்துப் பார்த்தவன் கௌரியின் அழைப்பை பார்த்து ஏற்று பேசினான்..

யாரு கார்த்திக்???

கௌரி தான் சிவா காயத்ரி வந்துருக்காங்களாம் நா இங்க வாய்க்கால் பக்கத்துல வர சொல்லிருக்கேன் பேசிட்டே போய்டுவோம்..என்றவாறு அவளுக்காக காத்திருந்தனர்..

ஹாய் அண்ணா..

வாங்க காயத்ரி..இது சிவா சஹானாவோட அண்ணா…

ஓ ஹலோ..அண்ணா நேத்து உங்ககிட்ட பேசுற நிலைமைல நாயில்ல நீங்களும் கேக்குற நிலைமைல இல்ல..அதான் இப்போ பேசலாமேநு வந்தேன்..அக்சுலா இது கொஞ்சம் சென்சிஸிடிவ்வான விஷயம் தான்..மொதல்ல உங்களுக்கு இது எந்தளவு சாத்தியம்நு நம்புறீங்க???

உண்மைய சொல்லனும்னா இதெல்லாம் பொய்னுதான் நினைச்சுட்டு இருந்தோம் ஆனா என் கண்ணு முன்னாடி சஹானா நடந்துகிறதெல்லாம் பாத்தப்பறம் எப்படிம்மா நம்பாம இருக்க முடியும்…

ம்ம் கரெக்ட்தான் ஏன்னா இவங்களோடது ரொம்ப ரேர் கேஸ்..யூஷுவலா முன் ஜென்ம நினைவுகள் மனுஷனோட 2லிருந்து 4 வயசுகுள்ள தான் வரும்..ஏன்னா குழந்தைகளோட அந்த வயசுல அவங்களோட மூளை வேகமா செயல்படும்..அதுக்கப்பறம் அவங்களோட மனசு முழுவதுமா இந்த வாழ்க்கைல ஈடுபட ஆரம்பிச்சுரும்..அப்படி அவங்களுக்கு நியாபகம் வர்றதுல பெரும்பாலும் அவங்களோட குடும்ப உறுப்பினர்கள் தாம் எப்படி இறந்தோம் இதெல்லாம் தான் முக்கியமா நினைவுக்கு வரும்..சோ நார்மலா இந்த ஹிப்னோதெரபி எதுக்காக யூஸ் பண்ணுவோம்நு பாத்தீங்கனா பார் எக்சாம்பில் பாரின்ல ஒரு லேடிக்கு தண்ணீர பாத்தாலே கண்ணீர் வருமாம் பயமா இருக்குமாம் அப்போ அவங்க டாக்டர் எடித்நு ஒருத்தர போய் பாக்கும் போது அவரு அவங்கள ஹிப்னோதெரபி மூலமா பாஸ்ட் லைப் பத்தி தெரிஞ்சுக்க பண்ணாரு அப்போ தெரிய வந்தது என்னன்னா அந்த லேடி ஒரு பிறவில குழந்தையா இருக்கும் போது படகு சவாரில இருந்து தவறி ஏரில விழுந்து இறந்துட்டாங்க அடுத்த பிறவில மீனவரா பிறந்து கடல்ல மூழ்கி இறந்துருக்காங்க அதோட தாக்கம்தான் இப்போ இந்த பிறவில அவங்க தண்ணிய பாத்து பயப்படுறதுக்கு ரீசன்..சோ இது தெரிஞ்சப்பறம் எடித் சரியான ட்ரீட்மெண்ட் மூலமா அவங்க ஆள்மனசுலயிருந்து அந்த நினைவுகளை மாத்தினார்..இதெல்லாம் கேக்குறது கதை மாறி கூட இருக்கலாம் பட் இதெல்லாம் உண்மை..இன்னும் ஈசியா சொல்லனும்னா உங்க ரெண்டு பேர்ல யாருக்காவது தூங்கிட்டு இருக்கும் போது உயரமான இடத்துலயிருந்து விழறமாறி தோணி பயந்து எழுந்துருக்கீங்களா அப்பறம் பாத்தா நீங்க உங்க பெட்லயேதான் இருப்பீங்க???

எனக்கு அப்படி தோணிருக்கு காயத்ரி சின்ன வயசுல அடிக்கடி அந்தமாறி வரும் பட் இப்போ கம்மி ஆய்ருக்கு சில நேரம் நிஜமாவே பெடட்ல இருந்தே விழுந்துருக்கேன்…சிவா

கரெக்ட் அண்ணா இப்போ உங்களோட பாஸ்ட் லைப் பாத்தோம்னா கண்டிப்பா ஏதோ ஒரு பிறவில நீங்க ஏதோ ஒரு இடத்துலயிருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம்..ஒரு வயசு வர உங்க ஆத்மாக்கு அது நியாபகம் இருந்து இப்போ அந்த நினைவு மறைஞ்சுக்கும் அதனால தான் அப்படி தோணுறது கம்மி ஆகியிருக்கும்..

காயத்ரி சான்லெஸ்ம்மா நீ சொல்றதெல்லாம் கேக்க கேக்க ஒருமாறி புல்லரிக்குது..அப்போ இந்த ஏழு ஜென்மம்ங்கிறதெல்லாம் உண்மைதானா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.