(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 03 - தீபாஸ்

oten

ந்த வொய்ட் கலர் பி எம் டபில்யூ காரின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடிய வேலாயுதம், நேரா வீட்டிற்குப் போ முருகா என்று கூறினார் தனது ட்ரைவரிடம். ஆனால் அவருக்கு வீட்டிற்கு செல்லவே விருப்பம் இல்லை. தன் மகன் மாதேஷ் கடந்த இரு மாதம் முன்பு சென்னை போனதில் இருந்து அவருள் கவலை குடியேறிவிட்டது .

இங்கிருக்கும் காட்டன் மில்லையும், பண்ணை தொழிலையும், ஊட்டியில் இருக்கும் எஸ்டேட்டையும், தனது கோவையின் மிகப் பெறும் ஜவுளிகடலையும் மாதேஷ் கவனித்துக்கொள்வான் நாம் சென்னையில் உள்ள ஜவுளிகடயையும் தன் நண்பருடன் பாட்னராக சேர்ந்து ஆரம்பித்த மில்லையும் பார்த்துக்கொண்டு ஜானகிக்கு கடைசி காலத்திலாவது நிம்மதியை கொடுக்குமாறு சென்னையில் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். எனது நினைப்பில் இப்படி இடி விழுந்துவிட்டதே என்று மருகியபடி உட்கார்ந்திருந்தார். மேலும் இன்று காலையில் ஜானகி தனக்கு போன் செய்து மாதேஷுக்கும் ஆதித்துக்கும் இடையில் மோதல் வராமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியதில் இருந்து அவரின் கவலை மேலும் அதிகரித்தது .

கார் வீட்டினில் வந்து நின்றது கூட உறைக்காமல் விழிமூடி அமர்ந்திருந்தவரின் பக்கம் இருந்த கதவை திறந்த முருகன், ஐயா... வீடு வந்துருச்சு என்று பயபக்தியுடன் கூறினான் .

வீட்டினுள் வந்த வேலாயுதத்திற்கு அங்கிருக்கும் ஹால் சோபாவில் அமர்ந்து அவரது மாமியார் தனது பேரன் மாதேஷுடன் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை அவரின் முகபாவனையில் இருந்தே தெரிந்து கொண்ட வேலாயுதம் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் சென்றவரின் மனம் கொந்தளித்தது .

தன் பிள்ளை மாதேஷை தூண்டிவிடுவதே இந்த கிழவிதான் என்ற கடுப்பு அவருக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவரால் தன் மாமியாரை கேள்விகேட்க முடியாது ஏனெனில் தனது மனைவிக்கு தன் அம்மாவின் மீதும் மாதேஷுக்கு பாட்டி மீதும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு. அவரை குற்றம் சாட்டுவதுபோல் ஓர் பார்வை பார்த்தாலே வீட்டில் தன் மனைவியும் மகனும் பிரச்சனை செய்துவிடுவார்கள் என்ற பெருமூச்சோடு ரெப்ரஸ் ஆகி பாத்ரூம் விட்டு வந்தபோது அவரது மனைவி மஞ்சுளா அவர்களின் அறைக்குள் வந்தவள் இப்போதான் வந்தீங்களா? நான் தோட்டத்துப்பக்கம் இருந்தேன். வாங்க சாப்பிட என்று கூப்பிட்டாள்.

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவரின் முன் தட்டை வைத்து சப்பாத்தியையும் குருமாவையும் எடுத்து வைத்துக்கொண்டே, நான் கொஞ்ச நேரம் முன்புதான் மாதேஷுடன் பேசினேன். அவனும் அவன் ப்ரண்டும் சேர்ந்து சென்னையில் புதிதாக எதோ கம்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று ஓரிடத்தில் இடம் பார்த்திருகிறார்கலாம் அதுக்கு பணம் ஏற்பாடு செய்யச் சொன்னான் என்று கூறினாள்

அவள் கூறியதும் தனக்குள் ஏற்பட்ட கோபத்தை தண்ணீர் குடித்து தனித்தவர் “இப்போ இங்க இருக்கிற தொழிலையே துறையால பார்க்க முடியல”, “முதலில் இங்க இருகிறத வந்து பொறுப்பு எடுத்து கவனிக்கச் சொல். பிறகு புதுசு ஆரம்பிப்பதை பத்தி யோசிக்கலாம்” என்றார்.

அவர் அவ்வாறு கூறியதும், அவள் மகனுக்கு மட்டும் சென்னையில் புதுசு புதுசா பெரிய பெரிய கம்பெனியெல்லாம் வச்சுக் கொடுத்திருக்கிறீங்கலாமே? அவள் மகன் இப்போ பெரிய ஆளாமே. புறவாசல் வழி வந்தவ மகனுக்கு செய்ய மனசுவந்துருக்கு சொத்து சுகத்தோட முறையா வந்த என் மகனுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்றீங்க என்று ஆத்திரத்துடன் கேட்டாள் மஞ்சுளா

இதுவரை தனது இரண்டாம் சம்சாரம், மகன் பற்றி மஞ்சுளா ஏதாவது சொன்னாள் அமைதியாக் போய்விடும் வேலாயுதம் இன்று ஆதித்துக்கு தான் கம்பெனி ஆரம்பிக்க உதவியதாகக் கூறியதும் கோபத்தில் தன் முன் இருந்த தட்டை தள்ளிவிட்டு எழுந்துவிட்டார்.

அவரின் செயலில் அதிர்ந்து விழித்த மஞ்சுளாவை பார்த்து என்ன சொன்ன ஆதித் கம்பெனி ஆரம்பிக்க நான் உதவினேனா?, செஞ்சுருக்கணும். நீசொன்னது போல் அவன் என்கிட்டே கேட்டிருந்தால் நான் கட்டாயம் செய்திருப்பேன் தான், ஆனால் அவன் என்கிட்டே கேட்க மாட்டான் டீ! அவன் படிப்புக்கு கூட நான் செலவு செய்ததில்லை அதற்கு அவன் விட்டதும் இல்லை, நீயும் உன் அம்மாவும் சேர்ந்து அவனை பார்த்து அவன் மனதை என்றைக்கு உடைத்தீற்களோ, அன்றைக்கு அவன் தன் அம்மாவை கூப்பிட்டு இந்த ஊரை விட்டுப் போய்விட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அவன் ஒரு தடவை கூட என்னை அப்பானு கூப்பிடவும் இல்லை. என்கிட்டே உரிமையாய் எதுவும் கேட்டதுமில்லை

அவன் என் மகன் டீ! ரோசக்காரன் அவன் தானா வளர்ந்த சிங்கம். உன்மகனை போல் ஒன்றும் வெட்டியாய் அப்பன் சம்பாத்தியத்தை செலவழித்து ஊர் சுற்றிக்கொண்டு இல்லை. மாதேஷ் சென்னை போயிருகிறது சரி. ஆனா! முன்ன மாதிரி உன் அம்மா பேச்சை கேட்டு ஆதித்திடம் வம்பிழுத்து சண்டைக்கு போகாமல் இருக்கச் சொல்லு. ஏனென்றால் முன்னாடி ஆதித் சின்னவனாக இருக்கும் போது அப்பா என்று சுத்தி சுத்தி வந்து என் கைக்குள் இருந்தான் அதனால் என்னால் அவனை கட்டுப் படுத்த முடிந்தது

என்னைக்கு அவன் மனதை நீங்க உடைத்து அவனை என்னிடாம் இருந்து பிரித்துவிட்டீற்களோ! இனிமேல் உன் மகன் அவனிடம் வம்பிழுத்தால் அவன் சும்மா விடமாட்டான். என்னால் அவனிடம் இருந்து உன் மகனை காப்பாற்றமுடியாது என்றவர் வேகமாக சாப்பிடாமல் தனது அறைக்கு விரைந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.