(Reading time: 20 - 39 minutes)

ஆதித் கையில் உள்ள அந்த பொறுக்கியின் மொபைலை நட்டுக்குத்தலாய் பிடித்து அவனின் மண்டையில் அதை வைத்தே நட்நட் என்று அடித்தபடி, “நீ மினிஸ்டர் பையன்னா இருந்தா பொறுக்கிவேலை பார்த்த உன்னை சும்மா விடச் சொல்கிறாயா..?”

உன்னை விடமாட்டேன். உன் மொபைலை இனி உனக்கு கொடுக்கவும் மாட்டேன் என்னடா செய்வ? என்றவன் அந்த மொபைலை அழகுநிலாவிடம் கொடுத்து நீ போ என்று கூறினான்.

அவன் சொன்னதை இயந்திரம் போல் செய்த அழகுநிலா, திரும்பி அவனை பார்த்துக்கொண்டே சென்றாள் .

அதிர்ந்த பாவனையுடன் அவனை பார்த்துக்கொண்டே செல்லும் அழ்குநிலாவை பார்த்துக்கொண்டே ஒரு கையால் அந்த பொறுக்கியை அடக்கியபடி மற்றொரு கையால் தனது பாக்கெட்டில் இருந்த போனில் அந்த ஹோட்டலின் ரிசப்சனை தொடர்புகொண்டு ஆதித் பேசினான் .

வெளியில் வந்த அழகுநிலா அதிர்ச்சி விலகாமல் தன் கையில் உள்ள மொபைலை கூட யாரும் பார்க்காதவாறு தன் துப்பட்டாவினுள் மறைத்தபடி தனது இருக்கையில் அமர்ந்தாள்

அவளின் முகம் பார்த்த சுமதி, என்னடீ! இவவளவு நேரம் ரெஸ்ட் ரூமில் என்ன பண்ணின. ஜூஸ் கரையை கூட துடைக்காமல் ஏன் இப்படி பேய் அறைந்தமாதிரி வந்திருக்கிற என்று அவள் கேட்கும் போது ,

வெளியில் இருந்து அந்த ஹோட்டலின் யூனிபார்ம் அணிந்த செக்யூரிட்டீஸ் இரண்டு பேர் வேகமாக ரெஸ்ட்ரூம் விரைந்து சென்றதை பார்த்த அழகுநிலா சுமதியின் கேள்விக்கு ஒன்றுமே பதில் கூறாது ரெஸ்ட்ரூம் பக்கமே வெறித்துப் பார்த்தாள்.

அவள் அதிர்ச்சியுடன் ரெஸ்ட்ரூமை பார்த்துக்கொண்டே இருப்பதையும் அங்கு செக்யூரிடீஸ் விரைவதையும் பார்த்த அந்த பொறுக்கியுடன் வந்த மற்ற மூன்றுபேறும் ஏதோ விபரீதம் நடந்ததை யூகித்து டேபிளை விட்டு வேகமாக எழுந்து வெளியே ஓடினர்.

ரெஸ்ட்ரூமிற்குள் இருந்து அந்த பொறுக்கியை தரதரவென்று வெளியே இழுத்துவந்த அந்த செக்யூரிட்டீசிடம் விடுங்கடா என்னை என் மேல கை வைத்தது என் அப்பாவுக்குத் தெரிந்தால் உங்களை ஒரு வழி பண்ணிவிடுவார் என்று அவனின் கத்தலை யாரும் அங்கு பொருட்படுத்தவில்லை.

அவர்களின் பின் ஒரு நிமிடம் கழித்து வெளியில் வந்த ஆதித் எதுவுமே நடக்காதவாறு அசால்டாக முதலில் அவன் எவ்வாறு ஹோட்டலுக்குள் மிடுக்காக வந்தானோ! அதே போல் வந்தவன், அழகுநிலா அங்கு இருப்பதை கண்டுகொல்லாதவாறு தனது கிளைன்டிடம் போனவன் ஸாரி! கொஞ்சம் லேட்டாயிடுச்சு... என்று கூறியபடி அவர்களுடன் இயல்பாகப் பேச்சில் இணைந்துகொண்டான்.

அழகுநிலாவிற்கு அதற்கு மேல் அங்கு உட்காரவோ இயல்பாக இருக்கவோ இயலவில்லை. அவளின் பார்வை ஆதித்தையே நிமிடத்திற்கு ஒரு முறை நன்றி கூறுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஆதித்தோ தன்னுடன் வந்தவர்களுடன் தனது பிசினெஸ் சம்மந்தமாக மிகவும் தீவிரமாக் பேசிக்கொண்டிருந்தவன், பேசியபடியே அவர்களுடன் வெளியேறி சென்றும் விட்டான். தான் ஒரு பெண்னின் இக்கட்டான சூழ்நிலையில் உதவியதையோ? அவளின் மேல் ஓர் பார்வையோ செலுத்தாமல் எதுவும் நடவாதவாறு அங்கிருந்தவாறு அழ்குநிலாவை சட்டை செய்யாமல் எழுந்து சென்றேவிட்டான்.

அதன் பின் அழகுநிலாவும் தனது தோழி சுமதியிடம் தனக்குத் தலை வலிப்பதாக் கூறி கிளம்பிவிட்டாள். எதுவோ சரியில்லை என்பதனை உணர்ந்த சுமதியும் அவளிடம் ஒன்றும் கூறாமல், விசுவை கூப்பிடு அவளை பத்திரமாக் ஆட்டோ பிடித்து ஏற்றி விடச் சொன்னாள்.

எப்பொழுதும் ஆண்களைவிட பெண்களே நுன்னுணர்வு கொண்டவர்கள் எனவே சுமதி அழகியின் மகிழ்ச்சி துடைத்த முகமும் ,அதன் பின் ஹோட்டலில் நடந்த சம்பவமும் அழகி திரும்ப திரும்ப ஆதித்தை பார்த்த பார்வையும் எதுவோ ஒன்று நடந்துள்ளது என்பதனை யூகித்துக்கொண்டாள்.

மேலும் அதை அழகி எதோ காரணத்திற்காக எல்லோர் முன்பும் தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறாள் என்பதையும் உணர்ந்தே அவளை போக அனுமதித்தாள். அழகியிடம் ஹஸ்டல் போனதும் எனக்கு போன் செய்துவிடவேண்டும் என்று திரும்பத்திரும்ப கூறி விடை கொடுத்தாள்.

----தொடரும்----

Episode 02

Episode 04

{kunena_discuss:1144}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.