(Reading time: 19 - 37 minutes)

அந்த சத்ததில் அரைமயக்கத்தில் அப்படியே அவள் தரையில் விழ பின்வந்த அருணாச்சலம் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டதால் அப்படியே பதுங்கி மறைந்துவிட்டான்..

கார்த்திகேயனோ தன்னவளை அந்த கோலத்தில் கண்டு நொறுங்கிவிட்டான்..தான் நிச்சயத்திற்காய் வாங்கியிருந்த வைலட் நிறப் புடவையில் ரத்தம் கொட்ட சரிந்தவளைப் பார்த்தவனுக்கு பூமி காலின் கீழ் நழுவுவதாய் தோன்றியது..சாமியோ பித்துபிடித்தவராய் கண்கள் அவளையே பார்த்திருக்க ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்..அவளருகில் சென்று அவளை அள்ளி தன் மடியில் கிடத்தியவன் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப அரைகுறையாய் கண்களைத் திறந்தவள்..மாமா என அவன் சட்டையை கையில் பிடித்துக் கொண்டாள்..மாமா நா யாருக்கும் எந்த தீமையும் நினைச்சதில்ல எனக்கு ஏன் மாமா இப்படி நடந்துச்சு..என்ன நீ எவ்ளோ காதலிக்குறநு எனக்கு தெரியும் உன்கூட வாழ எனக்கு குடுத்து வைக்கல மாமா..என்ன மன்னிச்சுரு மாமா..என்று திக்கி திணறி முடிப்பதற்குள் மூச்சிழுக்க மறு கையால் சாமியை பற்றியவள்,அப்பா!!!!! என்றழைக்க சாமியோ கதறிவிட்டிருந்தார்..என்ன பெத்தவங்ககூட இந்தளவு பாத்திருந்திருப்பாங்களாநு தெரில அந்தளவு உன் வாழ்க்கையே எனக்காக கொடுத்துட்டீயேப்பா..என்னைக்குமே நா ஒரு அனாதைநு நினைச்சதேயில்ல அந்தளவு நீ என்ன பாத்துகிட்ட ஆனா உன் கடைசி காலத்துல உன்ன பாத்துக்காம நா போகபோறேன் என்னை மனிச்சுருப்பா என்றவள் கண்களில் நீர் வர சாமியோ அய்யோ என் பிள்ளைக்கு இந்த நிலைமையா இததான் அந்த கடவுள் எனக்கு சொல்ல நினைச்சானா இது தெரிஞ்சுருந்தா என் உயிர எடுத்துக்கோநு சொல்லிருப்பேனே..தாயீ  தேவி என்ன விட்டுறாதம்மா என்னை அனாதை ஆக்கிராதம்மா என் பேரன் பேத்தியோட என் மக சந்தோஷமா வாழறத பாக்கனும்னு ஆசைப்பட்டேனே இந்த கோலத்தை பாக்கவா வேண்டினேன் என தலையில் அடித்துக் கொண்டார்..

தேவிம்மா என்ன நடந்ததுநு சொல்லும்மா??யாரு உனக்கு இந்த கொடுமையை பண்ணாநு சொல்லு என கார்த்திகேயன் கேட்க அவளின் கண்களோ ரத்தச் சிவப்பாய் மாறியிருந்தது..வேண்டாம் மாமா நா சொல்லமாட்டேன்..நா உன்கூட சேரக்கூடாதுநு தான் இப்படி பண்ணிணான் நா இத்தனை வருஷமும் அந்த சிவனை வழிபட்டது உண்மைனா உன் மேல வச்சுருக்க அன்பு உண்மையானதுனா நானே திரும்ப வருவேன் மாமா உன் கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டியா அந்த கேடுகெட்டவனை அழிப்பேன்..அதுவரை அவன் யாருநு உனக்கு தெரியகூடாது..இந்தப் பிறவில எப்படி நீ என்னை எனக்காக ஏத்துகிட்டியோ அதே மாதிரி அடுத்தபிறவியிலும் நீ என்ன ஏத்துப்ப அதுக்கப்பறம் நான் உன்ன தேவிகாவா சந்திப்பேன் இது நா கும்பிடுற சிவன் மேல சத்தியம் என அவன் கழுத்து டாலரில் கைவைத்த அடுத்த நொடி கண்மூடினாள்..

முடிந்துவிட்டது கார்த்திகேயனின் காதல் வாழ்க்கை சில மாதங்களிலேயே முடிவிற்கு வந்து தன்னவளையும் எமனிடம் கொடுத்தாகி விட்டது..சாமியோ சர்வமும் அடங்கிப் போனார் போய்ட்டா அந்த மகராசி இந்த கிறுக்கன தனியா விட்டுட்டு நிம்மதியா போய்டா..மாப்ள அவளுக்கு பயந்த சுபாவம்நு நினைச்சோமே இப்போ பாத்தீங்களா தைரியமா தனியா நாமள இங்க விட்டுட்டு எப்படி போய்ட்டாநு என பிதற்றியபடியே அந்த இடத்தை சுற்றிவர கார்த்திக்கோ பித்துபிடித்தவனாய் தன்னவளை மார்போடு சேர்த்து கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தான்..சில மணி நேரத்தில்எத்தேச்சையாய் அந்தப்பக்கம் வந்த இருவர் இவர்களைப் பார்த்து அருகில் வர கண்ட காட்சியில் அதிர்ந்துபோய் ஒருவர் ஊருக்குள் சென்று மேலும் இருவரை அழைத்து வந்தார்..

ஊர் மக்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்க சாமியோ நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல் தனியுலகில் தேவிகாவோடு வாழ ஆரம்பித்திருந்தார்..கார்த்திகேயனே தன்னவளுக்கான இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நடத்தினான்..

அழுதழுது ஓய்ந்தாயிற்று பத்து நாட்களை கடந்திருந்த நிலையில் இதற்குமேல் நடந்ததை நினைத்து வருந்துவதைவிட தேவிகா இடத்தில் இருந்து செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற கோவிலை நோக்கிச் சென்றான்..சாமி ஒரு மூலையில் படுத்திருந்தார்..சாமி சாமி நா கார்த்திகேயன் வந்துருக்கேன்..

வாங்க வாங்க என்றவர் எழுந்து அமர அவர் கையைப் பற்றிக் கொண்டான்..சாமி என்கூட வந்துருங்க நாம எங்கேயாவது போய்டலாம்..என்னை உங்க பையனா நினைச்சு என்கூட வாங்க என முடிப்பதற்குள் கண்கள் கலங்க அவரோ,மாப்ள  ஏன் கண்கலங்குறீங்க நீங்க அழறத தேவி விரும்ப மாட்டா..தேவி எங்கேயும் போகல அதோ அங்க பாருங்க வாசல்ல தான் இருக்கா அவளுக்கு வெளியூர்லா ஒத்துவராதுப்பா நா அவள இங்கேயே பத்திரமா பாத்துக்குறேன்..நீங்க நல்லாயிருக்கனும் மாப்ள..உங்களுக்குனு வாழ்க்கைய அமைச்சு சந்தோஷமாயிருங்க பத்து நாளா தேவியும் அதையேதான் சொல்லிட்டு இருக்கா..என்னம்மா பசிக்குதா???இதோ வந்துட்டேன்..மாப்ள தேவிக்கு பசிக்குதாம் நா போய் அவளுக்கு சாப்ட எதாவது குடுத்துட்டு வரேன் நீங்க தைரியமா இருங்க..என்றவாறு வாசலை நோக்கி சென்றவரை ஆற்றாமையாய் பார்த்தான்..அதன்பின் அங்கிருந்த சொத்தையெல்லாம் விற்றுவிட்டு காஞ்சிபுரத்தில் குடியேறினான்..மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தான்..அவர்களையே வாழ்க்கையாய் எண்ணி அவர்களுக்காக உழைத்தான்..தன் இறுதிக்காலத்தில் தன் கழுத்திலிருந்த அந்த டாலரை தன் மூத்த மகனிடம் ஒப்படைத்து கண்மூடினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.