(Reading time: 19 - 37 minutes)

இல்ல மாப்ள இன்னும் தாமதமாகும் போல தெரியுது நீங்க தேவிகாவ கூட்டிட்டு போய்டுறீங்களா..நா சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வந்துரேன்..

சரி மாமா அதுக்கென்ன நா கூட்டிட்டு போறேன் நீங்க பாத்து வேலையை முடிச்சுட்டு வாங்க..என்று அவரிடம் விடைப்பெற்று நகர்ந்தான்..

கோவிலைவிட்டு வெளியே வர யாரோ வரமாட்டேன் சொன்னதா நியாபகம்??என்றான் நமட்டுச் சிரிப்போடு..

மாமா நேத்தே உங்களுக்குத் தெரியும்னா சொல்லிருக்கலாம்ல..

சும்மா உன்னை சீண்டி பாக்கலாமேநு தான் சொல்லல தேவிம்மா..சரி வா இங்க வந்துட்டு அருவில தலை நனைக்காம போனா எப்படி??

அய்யோ வேணாம் மாமா எனக்கு அருவினாலே பயம்..நீங்க போய்ட்டு வாங்க நா படித்தரைலேயே இருக்கேன்..அவன் எவ்வளவோ கூறியும் அவள் மறுத்துவிட அவன் மட்டும் சென்று வந்தான்..சற்றுநேரம் ஆடையை காய வைப்பதற்காக அங்கிருந்த பாறையில் அமர கார்த்திகேயன் தன் பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்..பிரித்துப் பார்த்தவளுக்கு கண்கள் விரிந்ன அழகான வைலட்நிற பட்டுப்புடவை..மாமா..

எப்படியிருக்கு தேவி??நம்ம நிச்சதார்த்தத்துக்கு வாங்கினேன்..இந்த கலர் உனக்கு ரொம்ப எடுப்பாயிருக்கும்நு பட்டுச்சு அதான் கையோட வாங்கிட்டேன்..சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துரு தேவிம்மா எப்போடா அந்த நாள் வரும்நு காத்து கிடக்குறேன்..

ஏன் மாமா என்ன உனக்கு இவ்வளவு பிடிச்சுருக்கு ..நா உனக்காக எதுவுமே பண்ணதில்லையே??

தேவிம்மா ஏன் எதுக்கு பிடிச்சதுநு தெரிஞ்சு வர்றது கண்டிப்பா உண்மையான அன்பாயிருக்காதுடா..எனக்கு நீ நீயா இயல்பா வெகுளியா அந்த சிவனை உயிரா நினைச்சு வாழற விதம் இல்ல சாமிக்கு சொந்த பொண்ணு இருந்துருந்தாகூட இந்தளவு இருப்பாளாநு நினைக்குற அளவுக்கு அவர் மேல பாசம் வச்சுருக்கியே அதுவாகூட இருக்கலாம்..ஆனா இப்போ இந்த நொடி என் வாழ்க்கை மொத்தமும் நீ மட்டும்தான் இருக்க..என் று அவள் கையை ஆதரவாய் பற்ற..

மாமா என கண்கலங்க கைப்பற்றியவள் அவனின் அதட்டல் பார்வையில் கண்ணீரை அடக்கியபடி சட்டென ஏதோ தோன்ற தன் கழுத்தில் இருந்த டாலரை கழற்றி அவனின் செயினில் கோர்த்து அணிவித்தாள்..

ஏ தேவி என்ன இதெல்லாம் ஒழுங்கா உன் கழுத்துல போட்டுக்கோ..

மாமா இனி இது உன்னோடது..நா உன்கூட இருக்கேனோ இல்லையோ இது உன்கூடவே தான் இருக்கனும்..

இப்போ நீ என்ன எப்படி கூப்ட பாத்தியா நா சொன்னேன்ல சாமிய மாறி என்னையும் ஒருநாள் உரிமையோட கூப்பிடுவநு சொன்னேன்ல..இப்போதான் உண்மையாவே நீ என்ன மனசார ஏத்துகிட்டமாறி இருக்கு..என்றவனை பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்தியவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்…அன்றைய பொழுது தான் தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத சந்தோஷமான நாளாக இருப்பதாய் உணர்ந்தாள்..மதியத்திற்குமேல் அங்கிருந்து அவர்கள் கிளம்ப கிளம்பும் நேரத்தில் கார்த்திகேயன் அவளிடம்,தேவி ஒரு வேலையா மதுரை வரை போறேன்..வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும் தேவி..

என்ன மாமா தீடீர்நு சொல்ற??

இல்ல தேவி ஏற்கனவே முடிவு பண்ணதுதான் மதுரை பக்கத்துல நமக்கு கொஞ்சம் தோப்பு தொரவு இருக்கு அதோட பொறுப்பை அங்க ஒருத்தர்கிட்ட குடுத்து அவரு பாத்துட்டு வராரு..வருஷத்துல ஒருதடவை இந்தமாறி அங்க போய் கணக்கு வழக்கு பாத்துட்டு வருவேன்..அதுவும் இந்த மாசத்துலதான் விளைச்சல்அதிகம் இருக்கும் அதனால எப்பவுமே நா அங்க போய் கொஞ்சம் கவனிச்சுப்பேன்..சீக்கிரம் வந்துருவேன் தேவி வந்தவுடனே நாள் பாத்து கல்யாண தேதி குறிச்சுடுவோம் சரியா??என்றவாறு சோர்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்த அரைகுறை மனதோடு சம்மதித்து தலையசைத்தாள்..

கார்த்திகேயன் ஊருக்குச்சென்று இருதினங்கள் ஆகியிருந்தது.தேவிகாவிற்கு அவனை மறுபடியும் எப்போது பார்ப்போம் என்றிருந்தது…அவன் நினைவிலேயே களைத்து மெலிந்து காணப்பட்டாள்அன்றும் அவ்வாறு இரவு தூக்கத்தை தொலைத்தவள் காலையில் தாமதமாய் எழுந்து வர சாமி பூஜையறையின் முன் படுத்திருந்தார்..பதறிப் போய் அவர் அருகில் சென்று அவரை எழுப்ப சோர்வாய் எழுந்து அமர்ந்தார்..

என்ன சாமி என்னாச்சு உடம்பு எதுவும் முடிலயா??நா பயந்தே போய்ட்டேன் என்னனு சொல்லு சாமி??

தேவிகா காலைலயிருந்து மனசே சரியில்லம்மா..ஏதேதோ கனவு என்னப்பன் சிவன் என்கிட்ட சொல்றான் இந்த பாவிக்கு அது புரியமாட்டேங்குதும்மா..மனசெல்லாம் படபடப்பாவே இருக்கு.இப்படி இருந்ததேயில்ல தேவிகா..ஏதோ தப்பா படுதும்மா..

சாமி இந்தா முதல்ல தண்ணி குடி ஒண்ணுமில்ல சாமி எதையாவது நினைச்சுட்டே படுத்திருப்ப அதான் எதாவது கனவா வந்திருக்கும்..வீணா போட்டு குழப்பிக்காம போ கோவிலுக்கு கிளம்பு என்றவள் விபூதியை அவர் நெற்றியில் இட்டு அனுப்பி வைத்தாள்..அவரும் ஏதோ நினைவோடு அங்கிருந்து நகர்ந்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.