(Reading time: 18 - 35 minutes)

அதனை அசால்டாக பாவித்த விஷ்ணுவின் தோலில் கை போட்டு பேச்சுவாக்கில் வர்ஷாவை விட்டு தள்ளி கூட்டிச் சென்றவனை என்ன சொன்னானோ தெரியவில்லை அதன் பின் அங்கே அவனை காணவே இல்லை

மேலும் அவளின் பெண் தோழிகள் ஆதித்திடம் அறிமுகத்திற்காக கை கொடுத்து குலுக்க முனைந்தபோது அதனை கவனியாததுபோல் பாவனை செய்து சிறு தலை அசைவுடன் அவர்களின் அறிமுகத்தை ஏற்றுக்கொண்டான். அவ்வாறு அவன் தன்னுடன் கை குலுக்குவதை தவிர்த்ததை ரோசி தனக்கு  அவமானமாக மனதினுள் எடுத்துக்கொண்டாள் .

ரோசி செல்வந்தன் வீட்டு சீமாட்டி, அவளும் வர்ஷாவைவிட பகட்டான ஆடைகளும் வைரங்களிலும்  தன்னை அழங்கரித்து வந்தாலும்  வர்ஷாவின் அழகுமீதும், அவளிடம் ஆண்கள் காண்பிக்கும் ஆர்வமான பார்வையின் மீதும் பொறாமை உண்டு மேலும் ஆதித்துடனான வர்ஷாவின் காதலை தெரிந்தபின் மேலும் அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

கடந்து இருமுறை ரோசி பார்டியில் மாதேஷை  பார்த்தாள். மாதேஷ், ரோஸி அப்பாவின் நண்பரின் மகன். தனது தந்தையின் ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் மாதேஷை சந்தித்திருகிறாள்

மாதேஷின் செல்வச் செழுமையை அறிந்தவள் ரோஷி. அவனின் தோற்றத்திலும் கலகலப்பான் பேச்சினாலும் முன்பு அவனை பார்க்கும் போது ஓர் ஈர்ப்பு அவளுக்கு ஏற்பட்டிருந்தாலும் அதனை சென்னை வந்ததும் மறந்துவிடுவாள். ஆனால் இப்பொழுது அவனை சென்னை பார்டியில் பார்த்ததும் அவன் தன்னிடம் சிரிக்க சிரிக்க பேசியதும்   அவளுக்கு  மகிழ்ச்சியை கொடுத்தது வர்ஷவிடம் உனக்குமட்டும் தான் பெரிய பிசினெஸ் மேன் கிடைத்தானா எனக்கும் சுமார்டான செல்வந்தன் கிடைத்திருகிறான் பார்! என்று அவளிடம் மாதேஷை அறிமுகப் படுத்திவைத்ததாள்.

பாவம் ரோஷி அறியவில்லை, மாதேஷ் ரோஷியிடம் நெருங்கி பழகியதே வர்ஷவை அவள் மூலம் அனுகத்தான் என்பது அவளுக்குத் தெரியாமல் போனது .

ஆதித் நான் எப்பொழுதும் மாடர்னாதான் ட்ரெஸ் பண்ணுவேன் என்றாள் வர்ஷா. மேலும்  உங்களுக்கு ஒன்று தெரியுமா ஆதித், என்னுடைய காஸ்டியூமுக்கு ஓர் ரசிகர் பட்டாளமே இருக்கு. உங்களுக்குத்தான் என் ட்ரெஸ்ஸிங்சென்ஸ் பிடிக்கவில்லை. நீங்க என்னை இது போடாதே அது போடாதே என்று சொல்வது போல் நானும் உங்களை சொன்னால் உங்களால் ஏத்துக்கொள்ள முடியுமா? என்றாள் .

அவள் அவ்வாறு சொன்னதும் ஓர் புருவத்தை உயர்த்தி சவால் விடுவதுபோல் ஓர் பார்வையை அவள் மீது செலுத்தியவன் நீதான் சொல்லியிருக்க  “ஐம் அட்மைர் யுவர் டிரஸ்ஸிங் சென்ஸ்”என்று கூறியவன்

இந்த உடை உன் அழகு மொத்தத்தையும் கடை பரப்பி காண்பிப்பதால்தான்  இது வேண்டாம் என்கிறேன் வர்ஷா .நாகரீகமான உடை உடுத்துவதை நான் ஆட்சேபிக்கமாட்டேன் ஆனால்  நாகரீகம் என்ற பெயரில் இதுபோன்ற ஆபாசமான உடையை நீ  அணிவதை இனி நான் அனுமதிக்க மாட்டேன் உன் அழகு எனக்கு மட்டும் தான் பார்க்க, அனுபவிக்க யு காட் இட் என்றான் .வர்சாவுக்கு  அவன் கூறியவிதம் பெறும் கோபத்தை கொடுத்தது.

அதன் பின் அவள் முகத்தை திருப்பிக்கொண்டு அவனுடன் பேசாமல் உட்காந்து இருந்தாள் .அவனும் அவளை சமாதானப் படுத்த முனையவில்லை அவள் வீட்டின் முன் அவன் காரை நிறுத்தியதும் இறங்கப் போனவளின் கை பிடித்து தன் கோர்ட் பாக்கெட்டினுள் கை விட்டு அவன் மும்பையில் அவனது நண்பனுக்கு அவன் கட்டிமுடித்த நட்ச்சத்திர ஹோட்டலின் திறப்புவிழாவில் கலந்துகொள்ள போகையில் அங்கிருந்து அவளுக்காக வாங்கிய டைமென்ட் பெண்டன், ஸ்டட் அடங்கிய பேழையை அவளிடம் கொடுத்தான்.

கீழே இறங்கப் போனவள் அவன் தன் கையில் கொடுத்ததை திறந்து பார்த்ததும்  கண்கள் அதன் அழகில் மயங்கியது. அவன் மீது இருந்த கோபம் மறைந்தது. சூப்பரா இருக்கு ஆதித். உங்களுக்கு நல்ல ரசனை எவ்வளவு அழகா எனக்காக பார்த்து செலக்ட் பண்ணிருக்கீங்க சோ....ஸ்வீட்ஸ் என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவ்வளவு நேரமும் இவளை பார்க்க ஆசையாக இதை   வாங்கி கொண்டு ஓடிவரும் நேரத்தில் என்னை இப்படி மூட் அவ்ட் பண்ணுமாறு நடந்து கொண்டாளே என்று கோபத்தில் இருந்தவன், இயந்திரம்போல் அவளுக்கு வாங்கியதை அவளிடம் கொடுத்தான். 

அவள் முகம் மலர்ந்து தன் கன்னத்தில் முத்தமிடவும் பதிலுக்கு அவனும் அவளை கோபம் மறைந்து அவள் உதட்டில் முத்தமிடப்போகையில் ம்...கூம் என்று அவன் முகத்தினை தடுத்தவள், அங்கெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான் இப்பொழுது என்று தன் கன்னத்தை காட்டியவள் இங்கே! என்று சிரிப்புடன் கூறினாள்.

ஆனால் அதிலும் அதிரடியாக அவன் நினைத்ததையே சாதித்தவன் ஓகே பை பேபி என்று அவளுக்கு அவள் புறம் இருந்த கதவினை எட்டி திறந்து விட்டான் .

அவள் இறங்கும் போது வீட்டிற்குள் வாருங்களேன் ஆதித். அம்மா, அப்பா உங்களை பார்க்கணும் என்றார்கள் என்றவளிடம்

ம்..கூம் என்று தலையசைத்து மறுத்தவன்,  வர்ஷு நான் இபொழுது செய்துகொண்டிருக்கும் ப்ராஜெக்ட் முடிந்ததும் அம்மாவுடன் வந்து நம் கல்யாணத்தை பற்றி பேசவருகிறேன் என்றவன் பை ஸ்வீட்டி என்றவன் சென்றுவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.