(Reading time: 18 - 35 minutes)

ஆதித் பார்பதற்க்கே விரும்பாத மாதேஷை   கடந்த இருமுறை தான் கலந்து கொண்ட பிசினஸ் பார்ட்டிகளில் பார்த்தான். மேலும் மாதேஷின் பார்வை வர்ஷாவையே சுத்திவருவதையும் கவனித்தான்.

வர்ஷா  பிறக்கும் போது வறுமையில் இருந்த அவள் குடும்பம் அவள் வளரவளர அவள் தந்தையின் தொழிலும்  சேர்ந்து வளர்ந்து அப்பர் மிடில்கிளாஸ் குடும்பமானது. அவள் தந்தைக்கு அவள் பிறந்தபின், தன் வறுமை ஓய்ந்து செல்வம் பெருக ஆரம்பித்தது, தன் மகளின் யோகம் தான் என்ற எண்ணம் காரணமாக அவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து ஓர் இளவரசியைப் போல் வளர்த்துவந்தார்.

நாகரீகமான உடை அணிவதிலும் நண்பர்களுடம் பார்டிகளில் கலந்து கொள்வதிலும் அதிக விருப்பம் உடையவளாக வர்ஷா இருந்தாலும் இதுவரை காதல் என்று எந்த ஆண்கள் வந்து ப்ரபோஸ் பண்ணினாலும் நீ எனக்கு இணையா? என்ற ஓர் பார்வையோடு விலக்கிவைத்துவிடுவாள்.

ஆனால் முதல் முதலில் ஆதித்தை பார்த்தவுடனே அவனின் கம்பீரமான் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டாள் பின் தனது நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள் பிரமிப்புடன் அவனின் வளர்ச்சியை பற்றியும் அவனின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை கிடைப்பதே சாதனை போல் பேசியதை பார்த்தவுடன் அவனை ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவனை காதலிக்க ஆரம்பித்த பிறகு அவளை பொறாமையாக அவளது நட்புவட்டம் பார்க்கும் போது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின் அவன் உடைவிசயத்திலும் இரவு பார்டிகளில் நண்பர்களுடன் கலந்துகொள்வதையும் ஆண் நண்பர்களுடன் கை குலுக்குதல் போன்ற செயல்களுக்கு ஆட்சேபம் எல்லாம் பார்க்கும் போது அவளுக்கு கலக்கமாக இருந்தது.

இதுவரை அவளை யாரும் இதுசெய்யாதே அது செய்யாதே என்று கட்டுப்படுத்தியதில்லை மேலும் அவள் உடுத்தும் உடையில் அவளது அழகு கண்டு மற்றவர்கள் பொறாமை படவேண்டும் என்றும் விரும்புபவள் அவள் அதற்காக பல ஆயிரம் ரூபாய்களில் அவள் ஆசையாக பார்டிகளுக்கு போடுவதற்கென்றே வாங்கி போடும் உடைகளை பார்த்து ஆதித் அவளை ரசிப்பதை விட்டு அவளை குறை கூறுவதை அவள் விரும்பவும் இல்லை.

வர்ஷாவின் முகத்தில் எரிச்சலோடு ஆதித்தின்  அருகில் அவனது காரில் அமர்ந்திருந்தாள். ஆதித்தின்  முகம் இறுக்கமாக இருந்தது எத்தனை தடவைதான் உனக்குச் சொல்வது வர்ஷா  இப்பொழுது நீ போட்டிருக்கும் உடை நாம் இருவர் மட்டும் தனித்திருக்கையில் என்றால் ஒகே. ஆனால் பார்டிக்குப் போய் இந்த உடையணிந்து நீ வந்தது தான் என் முதல் பிரச்சனை,

இரண்டாவது பிரச்சனை, யார் கூடவேண்டுமென்றாலும் கைகுலுக்கி சிரித்து பேசுவது ,அதென்ன முன்னபின்னதெரியாதவன் கூட உனக்கென்ன பேச்சு என பொரிந்தான்

அவன் அவ்வாறு கூறியதும், “ஐ டோன்ட் லைக் யுவர் ஹார்ஷ் வேர்ட் ஆதித்” என்றவள் ஜஸ்ட் ஒன் ஹேன்ட் ஷேக்குக்கு நீங்க ரொம்ப  அலட்டிகிறீங்க ஆதித் என்றாள்.

அவன் ஒன்றும் எனக்குத் தெரியாதவன் கிடையாது என் பிரண்ட் ரோசிக்கு தெரிந்தவன் தான். அவள் தான் எனக்கு மாதேஷை  அறிமுகப்படுத்தினாள் என்றாள்.

வர்ஷா  மிக அழகாக இருந்தாள். மேலும் அந்த அழகை எந்தெந்த வகையில் எல்லாம் மெருகேற்றமுடியுமோ அவை அத்தனையும் செய்து தன்னை பார்ப்பவர்கள் தங்களை அறியாமல் அவளை மறுபடி திரும்பி பார்க்கும் வகையில் பேரழகியாகவும் அந்த அழகை படம் பிடித்துக் காண்பிக்கும் வகையில் உடையும் அணிந்திருந்தாள் .

அவள் அவ்வாறு கூறியதும், “நோ வர்ஷா” முன்னாடி நீ எப்படியும்  இருந்திருக்கலாம், இப்போ! இந்த ஆதித்தோடவள் நீ, அவ்வளவு சுலபமாக யாரும் உன்கிட்ட நெருங்கி பழகுவது எனக்குப் பிடிக்காது அதை நான் அலோ பண்ண மாட்டேன் என்றான்.

அவன் சொன்னதை அவள் உணர்ந்தே இருக்கிறாள். முன்பு மாதிரி இவளின் நட்பு வட்டத்தில் உள்ள ஆண்கள் அவளிடம் சகஜமாக  பேசுவதில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறாள் வர்ஷா

இதற்கு முன் தனது நண்பர்களுக்குள் நடந்த பார்டிகலில் அவர்களுக்கு முன் தன் காதலன் “பிக் பிசினெஸ்  அண்ட் ஹேன்ட்சம் மேன்” என்று காண்பிப்பதற்கு ஆதித்தை தன்னுடன் வருமாறு அழைத்திருந்தாள்.

அவனுடைய பிஸி பிசினெஸ் செட்யூலும் அவனது திமிரையும் எளிதாக அவனை யாரும் பார்த்துவிட முடியாது என்பதனை அவளது நட்பு வட்டம் உணர்ந்திருந்தாலும் நான் கூப்பிட்டால் அவன் வருவான் என்று அவர்களிடம் காண்பிப்பதற்காகவே  அவனை கூப்பிட்டாள்

அவள் நினைத்தது போல் அவன் வந்தது எட்டாகணியான அவனை தன் கடைகண் பார்வையில் எட்டிபிடித்துவிட்ட அவளை பொறாமையாக பார்த்தார்கள்தான். ஆனால், அவன் வந்த பிறகு அவள் நினைக்காத சிலதும் நடந்தது.

பார்டிக்கு வந்தவன் வர்ஷாவின் தோளில் கை போட்டு கொண்டு தன் அருகிலேயே நிறுத்திக்கொண்டான் எதிரில் இருந்த அவளின் ஆண் நண்பர்களுடன் கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாலும் பார்வையிலேயே அவர்களை வர்ஷாவுடன் சகசமாக  பேசகூடாது என்று தள்ளி நிற்குமாறு கட்டளையை கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.