(Reading time: 5 - 10 minutes)

10. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ற்றைப் பார்வை…

விழி நுழைந்து உயிர் திருடும் பார்வை…

அவள் விழிகள் விரிந்து அவனைப் பார்த்திடுகையில், அவனோ அவள் விழி பேசும் பாஷை புரியாது திணறி நின்றான் எதுவுமே பேச தோன்றாது…

எத்தனை நாட்கள்…. எத்தனை வருடங்கள்…. அவளை சந்தித்திட மாட்டோமா என ஏங்கியிருக்கின்றான்… அது இன்று நனவாகி அவன் கரம் சேர்கையில், அவனுக்கோ அவளின் விழிகளை விட்டு பார்வையை அகற்றும் எண்ணம் துளியும் இல்லை…

சில நிமிட அதிர்ச்சியில் அவனை நிமிர்ந்து பார்த்திட்ட அவள் விழிகள், சட்டென தன்னுணர்வு பெற, விழிகளை அவனிடமிருந்து வேகமாக விலக்கியவள், அங்கே அதற்கு மேலும் நிற்க இயலாது “எக்ஸ்கியூஸ்மி சார்….” என்றவாறு பரந்தாமனை பார்த்து நடுங்கும் குரலில் சொல்லிவிட்டு கிட்ட்த்தட்ட ஓடினாள் அங்கே இருந்து…

அவள் செல்வதையே இமைக்காமல் பார்த்திருந்தவனின் தோளில் தட்டி அவனை சகஜ நிலைக்கு மாற்றினார் பரந்தாமன்…

அந்த ஒற்றை தொடுகை அவனுக்கு இதமளித்தது அந்நேரத்தில்…

“அவ மாறுவா ப்ரசன்… கவலைப்படாத…” என பரந்தாமன் மெல்ல கூறிட,

“ம்ம்…” என தலையாட்டியவன், வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு ரித்தியிடம் திரும்ப,

அதற்காகவே காத்திருந்தது போல், ரித்தி அவனை தன் கைகளில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை வைத்து அடிக்க, அவனும் சிரித்துக்கொண்டே அதை வாங்கினான் உடனேயே…

“சனிக்கிழமை தானடா உங்கிட்ட கேட்டேன்… பாவி… இப்படி திங்கட்கிழமை என் முன்னாடி வந்து நிக்குற?...”

“அதான் நான் சொன்னேன்ல ரித்தி….”

“கிழிச்ச… நீயெல்லாம் ஒரு அண்ணன்…. போ… பேசாத…”

சிறு பிள்ளை போல் அவள் முகம் தூக்கி வைத்துக்கொண்டு திரும்ப,

“அய்யோ ரித்தி என்ன இது?... இது ஆஃபீஸ்… இப்படி குழந்தையாட்டம் இருக்குறீயே…”

“போடா உங்கூட சண்டை சண்டை தான்… பேசாத நீ…”

“ரித்தி… நல்ல வேளை, ஸ்டாஃப்ஸ் எல்லாரும் அந்த பக்கம் நிக்குறதால, ப்ரசன் வாங்குற அடி எல்லாம் அவங்க பார்த்துருக்க வாய்ப்பில்லை… ஷப்பா… அந்த வகையில சந்தோஷம்…”

பரந்தாமன் கிட்ட்த்தட்ட மூச்சுவிட,

“எல்லாம் உங்களை சொல்லணும் சார்…” என்றார் அவள் அவர் புறம் திரும்பி சற்றே கோபமாக…

“ஏன்ம்மா… நான் என்ன பண்ணினேன்?...”

“என்ன பண்ணலை?... ஒரு வார்த்தை சொன்னீங்களா?... என் அண்ணன் இங்க வர்றதைப் பத்தி…”

“நான் என்னம்மா செய்யட்டும்… அவன் தான் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான்… நானும் சரின்னு சொல்லிட்டேன்…”

“போங்க சார்… நீங்களும் சேர்ந்து எங்கிட்ட இருந்து மறைச்சிட்டீங்க…” என்றவள் நினைவு வந்தவளாக

“நீ பாட்டுக்கு இப்படி திடீர்னு வந்து குதிச்சிருக்குற… பாரு அவ கோச்சிக்கிட்டு போறா… அவளை எப்படிண்ணா நான் சமாளிக்கிறது?..”

தன் போக்கில் புலம்பியவள், மீண்டும் கோபத்துடன் ப்ரசனை நோக்கித் திரும்ப, அவளைத் தடுத்தாள் ஸ்வேதா பட்டென…

“ஏய்… ரித்தி… உனக்கென்ன லூசு பிடிச்சிட்டா?... எதுக்குடி இப்படி அவர் மேல கோபப்படுற?... அதான் மாமா வந்துட்டார்ல… இன்னும் உனக்கு என்ன பிரச்சினை?...”

“எது மாமாவா?..................”

ரித்தி விழிகளை உருட்டி கேட்க,

“ஆமா சந்தாக்கா எனக்கு அக்கா… அப்போ இவர் எனக்கு மாமா தான?....” என்றாள் ஸ்வேதா இலகுவாக…

“ஓ…. அப்படி வர்றீங்களா நீங்க?...”

“ஆமா ஆமா…”

“சரி… கோரஸ் எல்லாம் நல்லா தான் போடுற… பட் இப்போ அவளை எப்படி சமாதானப்படுத்துறது?...”

ரித்தி ஸ்வேதாவிடம் கேட்டுக்கொண்டிருக்கையிலே, “அத நான் பார்த்துக்குறேன்…” என்ற ப்ரசன் அடுத்த நிமிடம் அங்கே நிற்கவில்லை…

“ஹேய்… அண்ணா…” என கத்திய ரித்தியின் வாயை உடனே பொத்தினாள் ஸ்வேதா…

“நீ உன் திருவாயை மூடு கொஞ்ச நேரம்… மாமா போய் பேசட்டும்… அதான் சரி வரும்….” என ஸ்வேதா கூற, பதிலுக்கு அவளை முறைத்த ரித்தி, ஸ்வேதா சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பதனை உணர்ந்து அமைதியானாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.