(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 04 - ஸ்ரீலக்ஷ்மி

SS

 

நாம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருந்தாலே போதும் இன்னல்கள் நேராது..!! சிந்தித்துச் செயலாற்றுங்கள்..!!’

******************

"டியே பன்னு.. என்னடி யோசனைப் பலமா இருக்கு?.. உன் மூஞ்சியே சரியில்ல?.."

"ஏய் சூரி.. நானும் பார்க்கிறேன் என்னமோ தெரியலை காலையில உங்க எதிர்வீட்டுக்குச் சாமான் இறங்கினதுலேர்ந்து இவளுக்கு என்னவோ ஆயிடுச்சுடி.. என்னைத்த பார்த்துப் பயந்தான்னு தெரியலை?.. பாரு என் வண்டிப் பின்னாடி உட்கார்ந்து எப்பவும் சைட் அடிச்சிட்டே அறுத்துத் தள்ளிட்டு வருவா.. இன்னிக்கு என்னவோ வாயைத்  திறக்கலை.." மோஹிதா ஆரம்பிக்க..

"ஏன் மச்சி ஒருவேளை ஏதாவது மோஹினிப் பிசாசு அடிச்சிருக்குமோ?.. ஆனா எனக்கு ஒரு டவுட்டுடி.. மோகினியெல்லாம் ஆம்பிளைகளை அதுவும் இளசானக் கன்னிப் பசங்களை டார்கெட் பண்ணுமாம்.."

"இருக்கலாம் மச்சி.. ஆனா இவளையெல்லாம் மோகினிப் பார்க்காது.. இவ சைஸுக்கு பிரம்மராட்சன்தான் பார்க்கும்பா.. பாரு எப்படி நல்லா வனப்பா உக்கார்ந்திருக்கா.. இப்படிப்பட்ட ப்ளம்ப்சைத்தான் மச்சி ஆம்பிளைப் பிசாசுங்கப் பார்க்குமாம்.. ஊர்ல எங்கப் பாட்டியம்மா சொல்லியிருக்கு.." மோஹிதா சிரித்தாள்.

"அதென்ன ப்ளம்ப்ஸு மச்சி.. நோ நோ.. அதெல்லாம் தப்பான எக்ஸாம்பிள் மோஹி குட்டி.. இவளெயெல்லாம் சின்னச் சைஸு ப்ளம்சோட கம்பேர் பண்ணா என்னாகிறது.. ஆத்தாடி இது அடுக்குமா..கொஞ்சம் பெரிய சைஸு பம்பிளிமாஸுடி மச்சி.." என்று பகபகவென இளித்த சண்முகசுந்தரியை ஒரு மாதிரியாகப் பார்த்தனர் அங்கே மரத்தடியில் மதிய உணவுக்காக அமர்ந்திருந்த மற்ற பிற மாணவமணிகள்.

அவர்களால் பார்க்க மட்டும் தான் முடியும்.. பின்னே அவளை எதிர்த்து யாராவது வாயைத் திறக்க முடியுமா?.. அக்கல்லூரியின் கேங்க் லீடர் அவளல்லவா?.. 'சமோசா' கேங்கை எதிர்த்து விரல் அசைத்தாலே அவர்கள் விரல்களுக்குக் 'கேரண்டி' இல்லை என்ற பொழுது இப்பொழுது நாராசமாய்ச் சிரிக்கும் சமோசா குழுவின் தலைமையாளினியைச் சும்மா பார்க்கத்தான் முடியும்.

மற்றவர்கள் பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்தவித லட்சியமும் இல்லை.. எவரையும் கண்டுகொள்ளும் மூடிலும் அவர்கள் இன்று இல்லை.

"இல்லடி மோஹி.. இவளுக்கு இன்னிக்கு ஏதோ ஆகிடுச்சு.. இல்லைன்னா இவளைக் கலாய்ச்ச நம்மளை இந்நேரம் விட்டு வைச்சிருப்பாளா?.. நீயே சொல்லு.."

"அதான் மச்சி எனக்கும் ஒண்ணுமே புரியலை.. என்னாடி ஆகித் தொலஞ்சது இவளுக்கு.. இப்படி டல்லடிக்கிறா?.." மோஹிதா தலையைத் தட்டி இல்லாத மூளையைக் கசக்கிப் பிழிய..

"விடு மச்சி விடு.. ரொம்ப யோசிக்காதே.. அப்புறம் மூளைச் சூடாகிக் கலங்கிப்போயிடும்ல.. இன்னும் கொஞ்சம் நாள்ல கேம்பஸ் செலக்ஷன் வரப்போகுதாம்.. அந்தச் சோடாபுட்டி சோமப்பா காலையில சொன்னானே.. கொஞ்சம் நிதானிச்சுக்கோ மோகிகுட்டி.." என்ற சண்முகசுந்தரி..

"நண்பி மோஹி.. பன்னின் மனதை யாம் அறிவோம்.. யாமிருக்கப் பயமேன்.." தன் இரு கைகளையும் தூக்கி அருள் பாலித்து..

"பன்னும்மா.. என்னடா ராசா.. இவ்வளவு சோக ரசம் புழியறே?.. பாரு தங்கம்.. நானும், மோஹியும் எவ்வளவு கஷ்டப்படறோம்.. உன் கண்ணுக்குத் தெரியலையா?.. நீ வாயைத் திறக்காமா உம்முன்னு எங்கம்மா கொடுத்த மஷ்ரூம் பிரியாணியை இப்படி மொக்கினா எப்படிப்பா கண்ணு.."

அத்தனை நேரமாக வாயைத் திறக்காமல் தன் கடன் பணிச் செய்வதே எனக் கருத்தாய் உணவை வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்த பன் என்று செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட சாந்திபானு மெல்ல வாயைத் திறந்தாள்.

"ப்ம்ச்.. ஏண்டி பக்கிங்களா?.. கொஞ்சமாவது மூளைன்னு சாம்பல் நிறப் பொருள் உங்க தலையில இருந்தா இப்படிப் பேசுவீங்களா?.. என்னடி ரெண்டு பேரும் இப்படித் திருட்டு முழி முழிக்கிறீங்க?.. அம்மா கொடுத்த வெங்காயப் பக்கோடா மொத்ததையும் நீங்களே முழுங்கிட்டீங்களா?.. பாவிங்களா?.. எனக்குத் தெரியும்டி.. சான்ஸ் கிடைச்சா விடமாட்டீங்களே?.. நல்லா அமுக்குவீங்களே?.. பகாசுரிங்களா?.."

"ஹா.. ஹா.. மச்சி.. அப்பாடி ஃபார்ம்முக்கு வந்துட்டா நம்ம பன்னு.. ஹா ஹா.. மோஹி.." எனக் கைக்கொட்டிச் சிரிக்கத் தொடங்கினாள் சத்தமாகச் சண்முகசுந்தரி.

"பக்கிங்களா.. நிறுத்துங்கடி.. உங்களை.." பானு முறைக்க..

"விடுடி மச்சி.. இதெல்லாம் நம்ம சமோசா கேங்குக்கு ஒரு பொருட்டா?.. பக்கோடாக்காக நம்ம ஃப்ரென்ஷிப்பைப் பலிபோடாதே பாப்பா.."

"பாப்பாவாடி.. பீப்பா.. ஹாஹா.. சூரி அது பலி இல்ல.. பாகுபலிடி.." மோஹிதாவும் ஆர்ப்பரித்துச் சிரிக்க.. அவர்கள் இருவரையும் வெட்டவா குத்தவா என முறைத்துக் கைகளைப் பிசைந்தாள் பானு.

"ஷ்.. மோஹி.. திஸ் இஸ் டூ மச்.. இப்படியெல்லாம் சிரிக்கக் கூடாதும்மா.. நம்ம ஃப்ரெண்டிஷிப் மூழ்காதக் கப்பல்ப்பா.. இப்படியெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் தாக்கிட்டா.. பார் பக்கத்தில உட்கார்ந்திருக்கப் பக்கியெல்லாம் பாகுபல்லி கணக்குல மொறைச்சி மொறைச்சிப் பார்க்குதுங்க.. எப்ப நாம அடிச்சிப்போம்னு.. இவங்க காத்திருக்காங்க நாம் சண்டைப் பிடிப்போம்னு.. இந்த மேட்டரை விடுங்க.. நம்ம பன்னு ஏன் காலையில இருந்து சோகமா இருந்தான்னு நான் அந்த ரகசியத்தைச் சொல்லவா.." குசுகுசுத்தாள் சண்முகசுந்தரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.