(Reading time: 23 - 45 minutes)

"சரிசரி.. விடு போதும் செல்லம் கொஞ்சியது.. மோஹி, பானு.. வாங்கம்மா உங்களுக்குப் பிடிச்ச மங்களூர் பஜ்ஜி பண்ணி வைச்சிருக்கேன்.. அத்தோடு சுந்தரி நம்ம பெரியம்மா வீட்டுக்குக் காலையில சாமானெல்லாம் வண்டியில் இறங்கிச்சு இல்லையா?.."

"மாம்.. எத்தனைவாட்டி உங்களுக்குச் சொல்வதாம்.. இப்படி என் பேரை நீட்டி முழக்காதீங்கன்னு.. அதான் கொஞ்சம் முன்னாடி ஷார்ட்டா சம்முன்னு சொன்னீங்களே?.. திரும்பவும் ஆரம்பிக்காதீங்க.. இட் இரிடேட்ஸ் மீ.."

அதைப்பற்றி எல்லாம் தமயந்திக்குக் கவலையில்லை.. அவரைப் பொருந்தவரை அவள் சுந்தரிதான்.. உரிமையாய் அந்த வீட்டின் முதல் பெண் வாரிசுக்குப் பெரியவர்களால் சூட்டப்பட்ட பெயர்.. சிலசமயங்களில் ‘சம்மு’ என்று செல்லமாய் அழைத்துத் தன் பாசத்தைக் காண்பித்தாலும் சுந்தரி எனச் சொல்லி அழைப்பதையே அவர் விரும்பினார்.

"இப்போ அதுவா முக்கியம்.. நம்ம பெரியம்மா வீட்டுக்கு.." என மீண்டும் தொடங்க..

"அம்மா.. அவங்க என்னோட பெரியம்மா.. உனக்கு ஓரகத்தி.." கால்களை உதைத்துத் தன் எதிர்ப்பைப் பலமாகக் காட்டினாள் மகள்.

“என்னது ஓரேகத்தியா?.. அதென்ன?”

"அட விடுவியா.. அதெல்லாம் ஒரு ஃப்ளோவில வந்திருச்சு.. அதாண்டி உன்னோடு பெரியம்மா வீட்டு அவுட் ஹவுஸுக்கு ஒரு தம்பி வாடகைக்கு வந்திருக்காம்.. நான் அங்க போனனா.. அந்தத் தம்பி புதுக்குடித்தனம் தொடங்கிச்சின்னு பால் பாயாசம் வைச்சி எங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டிச்சு.. செம டேஸ்டுடி.. அதான் நான் குடிக்காமா உனக்கு ஸ்வீட் பிடிக்கும்னு அப்படியே நம்ம வீட்டுக்கு எடுத்து வந்தேனா.. அந்தத் தம்பி எந்த ஊரு தெரியுமா?.. எங்க அம்மா ஊரு பக்கத்தில.. அத்தோடு அவரு ஏதோ சொன்னாரே.. காலேஜ்ஜில லெக்சரும் கொடுப்பாராம்.. உங்க காலேஜ்.." கதை சொல்லத் தொடங்கினார் தமயந்தி.

"அம்மா.. இப்ப என்ன சொல்ல வர்றீங்க.. போதும்மா.. யார் யார் வீட்டுக்கு வந்தா நமக்கென்ன.. என்ன பண்ணா நமக்கென்ன.. பால்பாயசம் கொடுத்தாங்களா கொடுங்க.. அதைக் குடிச்சிட்டுக் கருத்தைச் சொல்லறோம்.. அப்படியே அந்தப் பஜ்ஜியை கொஞ்சம் கண்ணுல காட்டுவீங்களாம்.. சும்மா மொக்கைப் போட்டுக்கிட்டு.."

இயல்பான தன் துடுக்குத்தனத்துடன் எதைப்பற்றியும் கேட்டுக் கொள்ளாமல் தன் நண்பிகளுடன் வார்த்தையாடத் தொடங்கினாள் சண்முகசுந்தரி.

அவளின் வயசு அப்படிப்பட்டது.. தன் தாய் என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்டுக் கொண்டிருக்கலாம்.. எதுவும் லட்சியமில்லை.. யாராய் இருந்தால் நமக்கென்ன என்ற போக்கு.. கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டிருந்தால் பின்னாளில் எவ்வளவோ அனர்தனங்களைத் தவிர்த்து இருக்கலாம்.

"என்ன பிள்ளைங்களோ?.. எதையும் காது கொடுத்துக் கேட்காதுங்க.. இந்தாங்க சாப்பிட்டு உங்க ஊர் வம்புகளை வைச்சிப்பீங்களாம்.." என்று தட்டு நிறையப் பஜ்ஜியையும், சின்னச் சின்னக் கப்புகளில் பாயசத்தையும் வைத்து விட்டு அங்கிருந்து வாசல் பக்கம் நகர்ந்தார் தமயந்தி.

சற்று நேரத்தில் சிற்றுண்டியை உண்டு முடித்தவர்கள் நாளை செய்ய வேண்டியதைப் பட்டியலிட்டுக் கொண்டனர்.. பின்னர்த் தோழிகளுக்கு விடைகொடுக்க வெளியே வந்த சண்முகசுந்தரி தன் தாய் யாருடனோ கை அசைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு நிமிர்ந்துப் பார்க்கக் கண்கள் தெறித்து விழும் போலானது..

'இவன்.. இவன்.. காலையில் என் மேல் மோதி.. இல்லையில்லை.. நான் அவன் மீது மோதி..'

"ஹேய் மச்சி.. இவந்தானடி அவன்.. காலையில் நீ மோதி.." மோஹிதா மெல்ல தன் தோழியின் விலாவில் இடித்தாள்.. பானுவோ வாயைப்பிளந்து எதிர் வீட்டு ஆணழகனை வெறித்துக் கொண்டிருக்க..

"ம்.. அப்படித்தான் நினைக்கிறேன்.. யாராய் இருந்தால் நமக்கென்ன?.. நாளை ஃப்ரெஷ்ஷர்ஸ் வராங்க இல்ல.. அதுக்குத் தயாராய் இருங்கடி.." என்று கெத்தாகச் சொன்னவள் தோழிகளுக்குத் தலையாட்டி விட்டுக் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

'வா ராசா வா.. நீ இங்கதான் வசமா வந்து மாட்டி இருக்கியா?.. எலி வலைக்குள் சிக்கினப் புலியே?.. ச்சே.. புலி வலைக்குள் சிக்கின எலியே?.. சீ.. ஏதோ ஒண்ணு.. புலியா?.. டேய் நீ எலிடா?.. என்னையா சொன்னே?.. டிரக் அடிக்டாடா நான்?.. இரு உன்னை.. நீ பெரிய இவன்.. உன் மேல் நாங்க விழுந்தோமாம்?.. ஆளும் மீசையும்.."

ஆட்டம் தொடங்கிவிட்டது.. இனி அடுத்து என்ன?.. காலம் பதில் சொல்லுமா?..

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1138}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.