(Reading time: 23 - 45 minutes)

போட்டோ எடுத்துவிட்டு..”சூப்பர்னு சொல்ல முடியாட்டாலும் பரவாயில்லை சுமார் மூஞ்சி குமாரு..என்ன என் ஃப்ரெண்டு ஃபாரெஸ்டுலே ஒரு பைசனோட ஃபோட்டோ எடுத்து எஃப். பில போட்டா.. நான் எங்க இங்கே பைசனைத் தேடுறது.. கொஞ்சம் உர்ருன்னு திரியற சிம்பன்ஸி மாதிரி நீ தெரிஞ்சியா.. அதான்.. எடுத்துக்கிட்டேன் உன் கூட..தாங்க்ஸ் குமார்…இன்னிக்கே அப்லோட் செஞ்சிருவேன்..”, என்று சிரிக்காமல் கூறிவிட்டு அங்கிருந்து அடுத்த கணம் மாயமாய் மறைந்தாள்.

பாவம் அந்த குமார்..

இப்போது அதை நினைத்து இடி இடியென்று சிரித்தார்கள் தோழிகள்..

"சூரி.. ஒண்ணுக் கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே?.." மோஹிதா மெல்ல இழுக்க..

'இதென்ன புதுசாக இவள் பெர்மிஷன் எல்லாம் கேட்கிறாள்' என்று தன் புருவங்களை உயர்த்தினாள் சண்முகசுந்தரி.. இதெல்லாம் அவர்கள் இயல்பில்லையே.. தங்களுக்குத் தோன்றியதைப் பேசுவதுதானே சமோசா கேங்கின் வழக்கம்.. மற்றவர்கள் மனமெல்லாம் பார்ப்பதா.. நோ சான்ஸ்.’

"அதான் மச்சி.. ஏன் அப்படி உன் முகம் மாறிச்சிடுடி.."

"ப்ச்.. என்னடி சொல்ல வர்றே?.. கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேன்?.. விட்டா திரும்பவும் என்னைத் தலை சுத்த வைச்சிடுவப் போல.." சந்தரியின் முகம் மாறியது.. அவளுக்கு மோஹிதா எதைக் கேட்க வருகிறாள் என்று தெளிவாகத் தெரிந்தாலும் ஒத்துக் கொள்ளப்பிடிக்கவில்லை.

"ம்ம்.. எல்லாம் எங்களுக்கும் தெரியும் டி.. அதான் நீ எங்ககிட்ட தப்பிக்க ஓடின.. தள்ளாடி மயங்கின.. அப்போ அந்த ஹாண்ட்சம் உன்னைத் தாங்கிப் பிடிச்சான்.. நீ அவனைப் பார்த்தே.. என்னவோ அவன் சொன்னான்ப்பா.. எனக்குத் தெரியும்.. உன் முகம் மாறிடுச்சு.. அவனும் கடுகடுன்னு இஞ்சித் திண்ண குரங்கு கணக்கா வைச்சிகிட்டான்.. என்னடி சொன்னான்?.. ஏதாவது எசகு பிசகா உன் மேல கையை வைச்சி.. நீ திட்டி.. அவன் முகம் கடுத்து.. ஆனாக்கா ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் மச்சி.. ஆளு சூப்பர் டையக்ராம்தான்டி.."

"ச்சு.. விடுங்கடி.. நீங்க நினைக்கிறா மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல.. மேல விழுந்தேன்னு தாங்கிப் பிடிச்சாங்க.. அவ்வளவுதான்.. காலேஜ் ப்ளேகிரௌண்டு இல்லன்னா கொஞ்சம் சத்தம் போட்டாங்க.. வேற ஒண்ணுமேயில்ல.. எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே தலையைச் சுத்திச்சா.. அதான் முறைச்சிட்டு நின்னேன்.. சரி அந்த மேட்டரை விடுங்கப்பா.. வாங்க அம்மாகிட்டக் கேட்டு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்." என மேலே இது குறித்துத் தனக்குப் பேச விருப்பமில்லை என்பது போல வெளியேறியச் சண்முகசுந்தரியை வியந்து பார்த்தனர் தோழிகள் இருவரும்.

அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தது தாங்கள் அறிந்த தோழி இப்படி எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்று.. 'ஓர் அழகான வாலிபன் மேல் மோதி விழுந்தவள் அதை எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து அவனை ஒருவழியாக்குவாள்.. இப்படி விஷயத்தை ஒதுக்கித் தள்ளுபவள் இல்லையே.. எதையோ மறைக்கிறாளோ?.. இருக்கட்டும் கத்திரிக்காய் மலிந்தால் சந்தைக்குத்தானே'.. தானாகவே பூனை வெளிவரட்டும் என அவர்களும் அவளைத் தொடர்ந்தனர்.

சண்முகசுந்தரிக்கும் அவர்கள் மௌனம் புரிந்துதான் இருந்தது.. அவள் சொல்லியதை அவர்கள் முழுதாக நம்பவில்லையென்று.. ஏனோ அவளுக்கு உண்மையை முழுதாகப் பகிர்ந்து கொள்ளப் பிரியமில்லை.. 'தன்னை ஒருவன் போதை மருந்துக்கு அடிமை என்பது போலப் பேசியதை அவளால் தாங்க முடியவில்லை.. சாதாரணச் சின்னத் தலைச்சுத்தல்.. அதற்கு இப்படி ஒரு பெயரா?.. என்ன ஒரு அவமானம்.. இருக்கட்டும்.. எங்கே போய்விடப் போகிறான்.. ஒரு நாள் இல்லை ஒருநாள் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பம் வராமலா போய்விடும்.. அன்றைக்கு இருக்குடா மவனே உனக்குக் கச்சேரி..' உள்ளுக்குள் அப்போதைக்குப் பொருமத்தான் முடிந்தது.

"என்னம்மா.. எழுந்திட்டீங்களா?.. சம்மு.. இப்ப எப்படி இருக்கு உன் தலை சுத்தல்.. மருந்து போட்டியா?.. இல்லை அப்பா வந்தபிறகு ஒருக்கா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திடலாமா?.. அடிக்கடி இப்படி வருதாடி?.."

"அய்யோ அம்மா.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. இப்போ நல்லாத்தான் இருக்கேன்.. நீ உடனேயே உன் புருஷங்கிட்ட போட்டுக் கொடுத்துடாதே.. அப்புறம் அவரு வேற ஆரம்பிச்சிடுவாறு.. காலையில மாத்திரை எடுக்க மறந்திட்டேன்மா.." சண்முகசுந்தரி அலுத்துக் கொள்ள..

"ஏன் டி சொல்ல மாட்டே?.. நாளை மத்த நாளுல நீயும் என்ன போல இப்படிப் பொண்ணைப் பெத்தா என் கஷ்டம் உனக்குத் தெரியும்.. நாங்க பார்த்துப் பார்த்துச் செய்யறது உங்களுக்குச் சலிப்பாதான்டி இருக்கும்.. பிள்ளைகளை வளர்க்கறது அவ்வளவு சுலபமில்ல.. தெரிஞ்சிக்கோ.."

"ஹேய் மாம்.. கூல்.. எதுக்கு இப்படி அலுப்பு?.. ஐ நோம்மா.. நீங்க என் செல்ல அம்மா.. எனக்குத் தெரியாதா டாடி பத்தி.. சும்மா உங்களை லூலூலாய்க்கு வம்புகிழுத்தேன்மா.. அதுக்குப் போய்.." எனத் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சிய மகளின் கைகளை அப்படியே இறுக்கிக் கொண்டாள் அந்தத் தாய்.

என்னதான் இருந்தாலும் தவம் செய்து வரமாய் வந்தவள் மகவு இல்லையா சண்முகசுந்தரி.. அவர் கண்கள் பழையதை நினைத்துக் கலங்க.. அதை மறைக்க முயன்று, மெல்லப் பேச்சை மாற்றினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.