(Reading time: 23 - 45 minutes)

பானு எல்லாவற்றையும் சட்டென மறந்து தன் நண்பி என்ன சொல்லப் போகிறாள் என ஆர்வமாகப் பார்க்க.. மோஹிதாவோ சண்முகசுந்தரியை புரியாமல் குழப்பமாகப் பார்த்தாள். அப்படி என்ன அவளறியாத ரகசியம்.. அந்த அதிசயம்..' மீண்டும் தலையைத் தட்டிக் கொண்டாள் இல்லாத மூளையைக் குழப்பிக் கொண்டு.

"அதுவா.. இன்னுமா உனக்குப் புரியல மச்சி.. மூளையெல்லாம் கசக்காதேன்னு நானும் தலையா அடிச்சிக்கிறேன்.. நீ கேட்க மாட்டே போல.. உன் தலையெழுத்து அப்படித்தான்னா என்னால ஒண்ணும் பண்ணமுடியாது.. அதுக்கும் உன் முட்டைக் கண்ணை முழிச்சித் தலையைப் சொறியாதே.. அப்படியே ரா ரா ரேஞ்ச் ஜோ மாதிரி இருக்கு இந்த ரேஞ்சுக்கு நீ மூளையைக் கசக்கினா அது தேய்ஞ்சி ஒண்ணுமில்லாமப் போகுது.. அப்புறம் கேம்பஸ் செலக்ஷன்.. புஸ்ஸுதான்.. வேலையில்லேன்னா.. என்ன பண்ணுவாங்க உங்க வீட்டில.. நல்ல பெங்காலி பயில்வானாப் பார்த்துக் கல்யாணம் கட்டி.. என்னாடி முறைக்கறே.. அதான் ரெடியா இருக்கானே.. நல்லா மீனைப் பொறிச்சி உன் மாம்ஸ் வாயில அடைப்பியாம்.."

என்று கையை பழைய நம்பியார் ஸ்டைலில் தேய்த்தபடி தன் முப்பதியிரண்டு பல்லைக்காட்டி இளித்துச் சிரித்த சூரியை முறைத்துத்தான் பார்க்க முடிந்தது மோஹியால்.. மோஹிதாவிற்குக் கல்கத்தாவில் முறைமாமன் காத்திருப்பதைத்தான் இந்த லட்சணத்தில் சண்முகசுந்தரி கலாய்த்து வைத்தாள்.. அதுவும் அவன் குத்துச்சண்டைப் பயில்வான் என்பது வேறு கூடுதல் விஷயம்.. அவளிடம் வாயைக் கொடுத்துப் பிழைக்க முடியாதுதென்று நன்கு தெரிந்திருந்தபடியால்..

"ச்சு.. என் மாமனுக்கு மீனை வைப்பது இருக்கட்டும்.. நீ முதல்ல விஷயத்துக்கு வாடி.. என்னப்பத்தையை ஆராய்ச்சியை அப்புறம் வைச்சிக்கலாம்.. முதல்ல பன்னு ரகசியத்தைச் சொல்லுடி சண்முகசு.....ந்தரி.." பதிலுக்குப் பல்லைக் காட்டினாள் மோஹிதா.

"உம்.. சொல்லத்தாண்டி நினைக்கிறேன்.. ஆனாப்பாரு.. அந்த ஆளு ஏன் டி அப்படி முறைச்சி முறைச்சிப் பார்க்கிறான்.."

"ஏய் வேணாம்.. இப்போ மரியாதையா மேட்டரை எடுத்து விடு.. இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. இப்படிப் புரியாமப் பேசற வேலையெல்லாம் இங்க வேணாம்.." மோகி சுந்தரியின் கழுத்தை நெறிக்க வர..

"ஷ்.. முதல்ல தள்ளுடி.. ஏற்கனவே எனக்குக் கண்ணெல்லாம் கட்டுது.. எங்கம்மா என்னத்தைப் போட்டுப் பிரியாணி வைச்சாங்களோ?.. தூக்கம் ஆளைச் சுத்துது.. பாரு சுத்துதே சுத்துதே பூமின்னு, என் கண்ணெல்லாம் மயங்குதுடி.."

"மச்சி சூரி.. உன்னையெல்லாம் செஞ்சாங்களா இல்லை பெத்தாங்களா.. யூ இடியட்.. கண்ணா டி கட்டுது.. நல்லா அரைப்படிக்கு முக்காப்படி பிரியாணியை மொக்கினா.. தூக்கம் ஆளைச் சுத்தும்.. இப்போ மரியாதையா விஷயத்துக்கு வரப்போறீயா இல்லையா?.. எல்லாம் இந்த அங்கிளைச் சொல்லணும்.. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு நல்லா ஊட்டி வளர்த்து.." எனப் பற்களைக் கடித்தாள் பானுவும்.

"சொல்லுடி.. எதுக்குடி என்னை வம்புக்கிழுத்த.. அப்படி என்ன ரகசியத்தைக் கண்டுபிடிச்சிட்ட.." பானுவும் விடாமல் மீண்டும் கேட்க..

"அது ஒண்ணுமில்ல பன்னு.. நீ ஏன் இன்னிக்கு ரொம்ப யோசனையா இருந்தேன்னா.. சிம்பிள்.. நம்ம காலேஜ் வாசல் டீக்கடையில ஒருத்தன் தினமும் மொறைச்சிப் பார்க்கறான்னு நீ சொன்னயில்ல?.." சண்முகசுந்தரி ஒரு வழியாய் மெல்ல இழுத்தாள்.

"ஆமாம் இது ஒரு பெரிய விஷயம்.. உலக மகா ரகசியத்தை இவ கண்டுபிடிச்சிட்டாளாம்.. இதுக்கா இத்தனை மொக்கைப் போட்ட மச்சி?.. அதான் ஊரறிந்த விஷயம்மாசே?.. பன்னை அவன் ஏன் முறைச்சிப் பார்க்கறான்னு யாருக்குத் தெரியும்.. சும்மா கும்முன்னு பொண்ணு இருக்கான்னு சைட் அடிச்சிருப்பான்.. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?.."

"ச்சு.. அதெல்லடி விஷயம்.. அவன் தினமும் பன்னை முறைச்சி பார்க்கறான் இல்லை.. இவ அதுக்குத்தான் யோசிச்சு இருப்பா.. ஏன் இப்படிப் பார்க்கறான்னு.. பேசாம இப்படித் தலையைப் பியிச்சி யோசிச்சி முட்டிக்கறத்துக்குப் பதிலா நாளைக்கு அவன் முன்னாடிப் பக்கத்துல போயிட்டு அவ எதுவும் பேசாம திரும்பி வந்துட்டா எல்லாமே சரியாயிடும்.."

"மச்சி.. கொளுத்திற வெய்யில்ல உனக்கு மூளை கீளைக் கலங்கிடுச்சாடி.. எனக்கு மூளை இல்லைன்னவ.. இப்போ நீ தான் புத்தியில்லாமப் பேசறதா நினைப்பா.. அவங்கிட்ட போய் இவ மூஞ்சியைக் காமிச்சிட்டு வரணுமா?.. நல்லா நறுக்குனு நாலு வார்த்தைக் கேட்டாலும் சும்மா இருப்பான்.. இல்லை ரெண்டு அறையாவது விடணும்.. எதுவும் செய்யாமல் இவள் மூஞ்சியைக் காமிச்சிட்டு வந்தா.. அந்தப் பக்கி பருகோ பருகுன்னு இவளைப் பருகி வைக்குமே?.. ஓ.. ஒருவேளை இது ஏதாவது கோர்ட்வர்ட் மாதிரியோ?.." மீண்டும் தன் தலையைத் தட்டத் தொடங்கிய மோஹிதாவை.. பானுவும் இப்பொழுது சேர்ந்து சுந்தரியுடன் முறைத்தாள்.

"அவசரக்கொடுக்கை.. அதில்லைடி.. மாமூ.. அதெல்லாம் கோர்ட் வர்ட் இல்ல.. அப்படி அவ மூஞ்சியைக் கிட்டத்துல கொண்டு காமிச்சா......" மெல்ல இழுத்த சண்முகசுந்தரி தயாராக எழுந்து நின்றுக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.