(Reading time: 23 - 45 minutes)

"ம்.. ஆறுமுகம்.. சமோசா கேங்க்.. கொயட் இண்ட்ரெஸ்ட்டிங்க்.. பார்ப்போம்.. போட்டு இருக்கிற போதையில் குப்பறயடிச்சி விழாமல் இருந்தால் சரிதான்.." சற்று சத்தமாகவே சொல்லியவன் தன் நடையை வேகப்படுத்தினான்.

ஆறுமுகம் பேசியது அட்சரம் பிசகாமல் இவர்கள் மூவர் காதிலும் விழவும், அவ்வாலிபன் தங்களைப் பார்த்துக் கிண்டலடிப்பதையும் கண்டு கொதித்தெழுந்தனர்.. பொங்கிச் சிலிர்த்ததென்னவோ பானுவும், மோஹியும்தான்.. சுந்தரியோ இன்னும் சிலை மாதிரி நின்றிருக்க அவள் உடம்பு தள்ளாடிக் கொண்டிருந்தது..

"சூரி.. என்னடி மச்சி..?.. அவன் அப்படிச் சொல்லிட்டுப் போறான்?.. என்ன நினைச்சிருக்கான்.. பெரிய கொம்பனோ?.. ஹேய் சூரி.. நீ ஏன்பா இப்படித் திகைச்சி நிக்கறே?.. நீ சரியில்ல?.. என்னாச்சு?.. ஏன் உன் உடம்பு தள்ளாடுது?.. என்னடி ஜுரமா?.." என மோஹிதா சுந்தரியின் கழுத்தில் கையை வைக்க..

அப்பொழுதான சுரணை வரப் பெற்ற சுந்தரி.. "ப்ம்ச் அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமூ.. இன்னிக்கு என் டேப்லெட் எடுக்க மறந்திட்டேன் போல.. லோ பி.பி. விடு எல்லாம் சரியாயிடும்.." என்றவள்..

"நான் வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிறேன்.. நோ மூட் டு அட்டெண்ட் கிளாஸ்.." என அவர்களிடம் சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

"ஹலோ.. மச்சி அப்போ எங்களுக்கு மட்டும் தனியா மூட் முளைச்சி வருமாக்கும்.. வாடி உனக்குக் கிளாஸ் வேண்டாம்னா எங்களுக்கும் நோதான்.. உங்க வீட்டுக்கே முதல்ல போகலாம்.. சாயங்காலம் நாங்க வீட்டுக்குப் போனா போதும்.." என அவளுடன் இணைந்து கொண்டார்கள்.

தங்கள் வண்டியை எடுப்பதற்காகக் கல்லூரி பார்க்கிங்கு சென்றவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.. கல்லூரியைக் கட் அடிப்பது அவர்களைப் பொருத்தவரை எந்தத் தப்பும் இல்லை.

மைதியாக வீட்டை அடைந்தவர்களை ஆச்சர்யமாகப் பார்த்து கதவைத் திறந்தார் சண்முகசுந்தரியின் அன்னை தமயந்தி.

"என்ன பாப்பா.. இன்னிக்கு சீக்கிரமாவே வந்திட்டீங்க?.. காலேஜ் இல்லையா?.."

ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் சண்முகசுந்தரி.. உடன் வந்த தோழிகளுக்குத்தான் தங்கள் நண்பியின் நடவடிக்கை ஒரு மாதிரியாக இருந்தது..

"என்னாச்சும்மா.. சுந்தரிக்கு கோபமா?.." எனச் செய்கையால் தமயந்தி வினவ..

"அதெல்லாம் இல்லை ஆன்ட்டி.. சூரிக்குக் கொஞ்சம் தலை சுத்தல்.. பிபி டேப்லெட் போட மறந்திருப்பா போல இன்னிக்கு.. அதான் வீட்டுக்குப் போகலாம்னு வந்துட்டோம்.."

"ஓ.. இது ஒண்ணு இந்தப் பொண்ணுகிட்ட.. சின்ன வயசுலேயே தலை சுத்தல் பாருங்க.. தன் உடம்பைப் பேணத் தெரிய வேண்டாமா?.. எல்லாம் அவங்க அப்பாவைச் சொல்லணும்.. எல்லாத்துக்கும் ரொம்பத்தான் இடம் கொடுத்தா.. நேரத்துக்குச் சாப்பிட்டு, தூங்காம.. ராத்திரியெல்லாம் கண் விழிச்சி அந்தப் போன்ல என்னதான் பண்ணுவாளோ?.. தூக்கம் இல்லைன்னா இப்படித்தான்.. டாக்டர் சொன்னாலும் கேட்கமாட்டா.. சரிம்மா.. நீங்களும் அவளோட கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க.. நான் இப்ப எதையாவது சொன்னா வள்ளுன்னு எறிஞ்சி விழுவா?.. ஹாங்க்.. மோஹி.. கொஞ்சம் அவளுக்குப் பார்த்து மாத்திரையைக் கொடுங்கம்மா.." என்றவர் தன்நறைக்குள் புகுந்து கொண்டார் தன் செல்ல மகளின் ஆரோக்கியத்தை இன்னும் கவனமாகப் பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி.

ஏற்கனவே கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டிருந்த சண்முகசுந்தரியைப் பார்த்தவர்கள்..

"ஹேய் சூரி.. முதல்ல உன் மாத்திரையை முழுங்குடி.. உங்கம்மா பாவம் டென்ஷனாயிட்டாங்க.. நீ திட்டுவன்னு இங்கே வரலை அவங்க.." எனப் பானு சொல்ல..

"இல்லடி.. இப்ப்ப பரவாயில்லடி.. வந்தவுடனேயே மாத்திரை எடுத்திகிட்டேன்.. ஐயாம் ஓ.கேப்பா.. நீங்களும் இப்படிப் படுங்க.." எனக் கட்டிலில் அவர்களுக்கு இடம் விட்டு நகர..

பிறகென்ன.. அடுத்த இரண்டு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை சமோசா குழுவினருக்கு.. அரட்டை.. அரட்டை..அரட்டை.. அப்படி என்னதான் பேசுவார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

“மச்சி நேத்திக்கு அந்த உர்ராங்க் உடானை சூப்பரா கலாய்ச்சடி”, என்று மோஹிதா எதையோ நினைத்து சிரிக்க ஆரம்பித்தாள்..

கல்லூரியில் ஒரு பந்தா பார்டி இருந்தான்..குமார் என்று அவன் பெயர். எப்போதும் பந்தாவாகத் திரிவதே அவன் வேலை. இதில் உர்ரென்று முகத்தை வைத்துக்கொள்வான்.

அன்று காலையில் காலேஜில் நுழைந்ததுமே சுந்தரி முடிவு கட்டிவிட்டாள் அவனை ஒரு வழி செய்ய வேண்டும் என்று.

அவர்கள் இருந்த வழியாய் அவன் போனபோது..அவனை அழைத்த சுந்தரி..”குமார்.. என் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்க முடியுமா”, என்று முகத்தை அப்பாவியாய் வைத்தபடி கேட்க,

அவனோ சீனியர் கெத்தில், “ஓய் நாட்.. நாங்கள்ளாம் பி.ஜி…முடிச்சு போயிடுவோம்..அப்புறம் எங்கே உன்னையெல்லாம் மீட் செய்ய முடியும்”, என்று சூப்பராய் போஸ் கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.