(Reading time: 23 - 45 minutes)

"காமிச்சா.. என்னடி ஆகும்?.. அந்தப் பய நம்ம பன்னைக் கண்டு மயங்கிடுவானோ?.. ஓ..இதான் அழகுல மயங்குறதோ?.." என்றபடி மோஹிதாவும் எழ.. ஒன்றும் புரியாமல் சுந்தரி என்னதான் சொல்லவருகிறாள் என்று பார்த்துவிடுமோமே எனப் பானுவும் எழுந்து கொள்ள..

"மயங்கிடுவானா பயப்புள்ள.. அடி ஆத்தி.. அதான் இல்ல.. இத்தனை நாளா இந்த மூஞ்சியையா சைட் அடிச்சோம்ன்னு அப்படியே மயங்கி செத்தில்லப் போவான்.. அப்புறம் பன்னு அவன் ஏன் என்னைப் பார்த்தான்னு யோசிக்க வேண்டாம்ல.." என்று சிரிக்காமல் சொன்ன சண்முகசுந்தரியை..

"அடிக் கழுதை.. காட்டெருமை..அவ்வளவு கொழுப்பாடி உனக்கு.. என் மூஞ்சியைப் பார்த்தா செத்தா போவான் அவன்.. இருடி நீ இப்ப எங்கிட்ட செத்த.. சங்குடி மாமூ உனக்கு.." பன்னு என்கிற பானு, சுந்தரியை எச்சில் கையோடு துரத்த..

அப்படியே டிபன் டப்பாவைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தாள் சண்முகசுந்தரி.

தன் நண்பிகள் இருவரும் துரத்திக் கொண்டு ஓடுவதைக் கண்ட மோஹிதாவும் அவர்கள் பின்னால் விரட்டிக் கொண்டு ஓட..

தன் வகுப்பறையை நோக்கி காரிடாரில் ஓடிக் கொண்டிருந்த சண்முகசுந்தரி சட்டெனக் கண்கள் இருள, வேகம் தடைபெற சற்றே தள்ளாடி தன் முன்னால் வந்து கொண்டிருந்த உருவத்தின் மேல் மோதி நின்றாள் நிலைகுலைத்து.

"ஹேய் பார்த்துப் பார்த்து.. மெதுவா.. ஆர் யூ ஓ.கே?.." தன் கணீர் குரலில் கேட்டவன், சட்டெனச் சண்முகசுந்தரியை பிடித்து நிறுத்தினான் கோட், சூட் அணிந்திருந்த அந்த அழகிய வாலிபன். திடீரென்று தன் மேல் விழுந்த பஞ்சுப்பொதியின் கனத்தில் அவனுமே ஆடிப் போனான்..

"சா.. சாரி சார்.." சுந்தரி திணறித் தயங்கி மயங்கி ஓர் மார்க்கமாய் அவனைப் பார்த்து தன் அத்தனை பற்களையும் காண்பிக்க.. சட்டென..

"ஹலோ மிஸ்.. திஸ் இஸ் காலேஜ்.. ப்ளேகிரௌண்ட் இல்ல நீ இப்படி ஓடிப்பிடித்து விளையாட.. அப்படியே உங்களுக்கு விளையாடணும் தோணினா அதான் பெரிசா கட்டிவைச்சிருக்காங்க இல்ல.. அங்க போக வேண்டியதுதானே..” என்றான் கடுப்பாக.

அவள் சொக்கும் விழிகளை நேராகப் பார்த்தவன் அதில் என்ன கண்டானோ, தன்னைச் சமாளித்துக்கொண்டு.., சட்டென விரைத்து நின்றான்

"சே.. கலி முத்திடுச்சி.. என்ன பெண்ணோ?.. பட்டபகல்ல.. டிரக் அடிக்ட்.. இவங்களெயெல்லாம் எப்படிக் காலேஜ்ல.. சே.." மெல்ல முணுமுணுத்தவன்..

“ஓ.. நீ..அந்த மாதிரி கேசா.. சே.. கண்டபடி போதை மருந்தை எடுத்துகிட்டு எவன் கிடைப்பான்னு மேல விழற வேலையெல்லாம் இங்கே வேணாம்.. ஜஸ்ட் வாட்ச் யுவர் ஸ்டெப்ஸ்.. யூஸ்லெஸ் கேர்ள்.." எனக் கோபமாகத் திட்டிவிட்டு நகர்ந்தவனை வாயைப் பிளந்து பார்த்தாள் சண்முகசுந்தரி.

அவளுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வந்த சாந்திபானுவும், மோஹிதாவும் தங்கள் தோழி யாரோ ஓர் கம்பீரமான, கவர்ச்சிகரமான ஆடவன் மீது தடுமாறி விழவும் சட்டெனப் பின் தங்கி சற்றுத் தூரத்திலேயே நின்று விட்டனர்.

அவர்கள் தயங்கி நின்றதற்குக் கண்டிப்பாகக் காரணங்கள் இருந்தன.. வாட்டசாட்டமான, கம்பீரமான அழகான வாலிபன் மீது விழுந்தவளைக் கண்டவர்கள் அவளுக்கு உதவும் பொருட்டு, முதலில் அவள் அருகே செல்லக் காலடி எடுத்து வைத்த பொழுதே அந்த இளைஞனுடன் வந்து கொண்டிருந்த ப்யூன் ஆறுமுகத்தைப் பார்த்து விட்டனர்..

கோட், சூட்டுடன் வந்தவன் கண்டிப்பாக யாராவது பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் ப்யூனுடன் எதற்காக வர வேண்டும் என்றே தயங்கி ஒதுங்கி நின்றனர்.

அதற்கேற்ப அவ்விளைஞனும், சண்முகசுந்தரியை தாங்கிப் பிடித்து, ஏதோ கோபமாகச் சொல்வது தெரியப் பயந்து பின் வாங்கினர்.. அவன் அங்கிருந்து அகல்வதும், பின் முகத்தைச் சட்டென இயல்பாக வைத்துக் கொள்வதைக் கண்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. மெல்ல தங்கள் தோழியை நோக்கி நகர..

சுந்தரியோ தலை கிறுகிறுக்கச் சற்றே தள்ளாடியவள் தன்னைச் சுதாரித்து அங்கிருந்து சென்று கொண்டிருந்தவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"சூரி.. ஆர் யூ ஓ.கேப்பா?.. என்னாச்சு?.. ஏன் இப்படிப் பேயடிச்சா மாதிரி நிக்கறே?.. அந்த ஆள்.. அவர் யாருடி?.. என்ன சொன்னான்?.. ஏன் முகமெல்லாம் வேர்த்து கொட்டியிருக்கு?.." மோஹிதா தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டு படபடக்க.. சாந்திபானுவும், சுந்தரியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

சுந்தரியோ இவர்கள் அருகில் வந்தது கூடத் தெரியாமல் வேக நடையில் செல்பவனைக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க..

"சார்.. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும் சார்.. அந்தப் பொண்ணு அப்படித்தான்.. வேணுமின்னே விழுந்திருக்கும்.. இப்படித்தான் சார் அந்த ‘சமோசா கேங்கு’ கலாட்டா பண்ணுவாங்க.. நீங்க என்னமோ சொன்னாப்பல இருந்தது.. பார்த்து பேசுங்க சார்.. அதுங்க யாருக்கும் பயப்படாது.. சரியான டெரர் பார்ட்டி.. கொஞ்சம் தள்ளி நின்னா உங்களுக்குப் பெட்டர்.. இல்லை ஆளை கவிழ்த்துடுவாங்க.." என ஆறுமுகம் சத்தமாகவே அவர்கள் காதில் விழுமாறு சொல்ல.. உடன் நடந்தவனோ அவனிடம் தலையாட்டியபடி பின்னால் திரும்பி ஏளனமாகத் தன் மேல் விழுந்தவளை திரும்பிப் பார்த்து விட்டு..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.