(Reading time: 18 - 36 minutes)

உனக்காக் நான் கேட் அருகில் காத்திருக்கலாம் என்று பார்த்தாள் புதுஇடம் தனியா நிக்க ஒருமாதிரி இருந்தது சோ உள்ள வந்துட்டேன். அடியே அழகி இங்க இன்னும் நம்மளமாதிரி  மூணுபேர் இன்னைக்கு ஜாய்ன் பண்ண வந்திருகிறாங்க அவங்க கூடத்தான் என்னை உட்கார வச்சிருக்கிறாங்க, நீ மொதல்ல உள்ள வா, மத்தத பிறகு பேசிக்கலாம் என்றாள் சுமதி

சுமதியும் அழ்குநிலாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் அழகுநிலா  தமிழ்வழிகல்வியை பள்ளிகூடங்களில் படித்தவள் கல்லூரியில் சேருவதற்கு ஏற்ற நல்ல மதிப்பெண்களுடன் தேர்ந்து கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள்

முதல்நாள் கல்லூரியில் காலையில் உள்ளே வந்ததும் அழகிக்கு தனது வகுப்பறை எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு அங்கிருந்த ஓர் மாணவியிடம் அக்கா  பர்ஸ்ட் இயர் பி ஈ கம்யூட்டர் சைன்ஸ் கிளாஸ் எங்க இருக்கிறது என்று கேட்டாள்

அப்பொழுது அந்த பெண் மேலும் கீழும் அழகியை பார்த்தபடி பர்டன் ப்ளீஸ் என்று கேட்டாள். அவளின் கேள்வியை பார்த்ததும் அச்சோ இவ என்ன பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவிடம் நயன்தாரா கேட்டதுபோல் பர்டன் பர்டன் என்று கேட்கிறாளே என்ன பண்ண நம்ம பீட்டர இவகிட்ட அவுத்துவிடவேண்டியதுதான் என் இங்கிலீஸ் சரியா தப்பான்னு இவளை வச்சு ட்ரயலை  ஆரம்பிச்சுட்டப் போச்சு  என்று நினைத்தபடி அவளிடம் பேச ஆங்கில வார்த்தைகளை மனதிற்குள் கூட்டினாள்

அப்பொழுது அவளின் அருகில் இருந்த விசு, நீங்கலும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா நானும் உங்க கிளாஸ் தான் வாங்களேன் எனக்குத் தெரியும் போகலாமா என்றான்.

ஏனோ பார்த்தவுடனே அவனின் குழந்தைதனமான முகமும் பேச்சும் மேலும் தான் ஆங்கிலத்தில் பேச தயங்கிய நேரத்தில் ஆபத்துப் பாண்டவனாக தன்னை காப்பாற்றிய விசு மீது ஓர் தோழமை உண்டானது நம் அழகு நிலாவிற்கு  .  

விசு, பயந்த அமுல்பேபி போன்ற முகத்துடன் கண்ணில் கண்ணாடியுடன் பார்க்க பயந்த சுபாவம் கொண்டவனை போல் இருக்கவும் அன்று மதியம்  சீனியர் மாணவர்கள்  அவர்களின் கெத்தை அந்த பயந்தாங்கொள்ளியிடம் காண்பிக்க முயன்று கொண்டு இருந்தனர்.

விசு அழுவதுபோல் அவர்களின் முன் நின்று கொண்டிருந்தான் அந்தனை பார்த்த நம் அழகுநிலாவிற்கு காலையில் தனக்கு உதவிய விசுவின் அருகில் சென்று என்ன ராகிங்கா இப்போதெல்லாம் ராகிங் செய்தால் அது சட்டப்படி குற்றம் என  உங்களுக்குத்தெரியாதா? அதென்ன அப்ரானி ஒருத்தனை பார்த்ததும் உங்க வீரத்த காட்டவேண்டும் என்று  தோணுதா? அப்படி காட்ட வேண்டும் என்றால் இதோ வருகிறார் பாருங்க நம்ம ப்ரொபசர் அவர் முன்னாடி காட்டுங்க உங்க வீரத்தை என்று தொலைவில் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த இன்று காலையில் தங்கள் வகுப்புக்கு பாடம் எடுக்க வந்த ஆசிரியரை காண்பித்தாள்.

ப்ரொபசரை பார்த்ததும் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டனர் அந்த சீனியர் மாணவர்கள். அன்றிலிருந்து விசுவும் அழ்குநிலாவும் நல்ல நண்பர்களாகினார்கள்

விசு படிப்பில் கெட்டியாக் இருந்தான். அழகு நிலாவும் நன்றாகப் படிக்க கூடியவள் ஆனாலும் அவள் வளர்ந்த சூழ்நிலையும் படித்த பள்ளிகூடங்களிலும் ஆங்கிலம் பேசக்கூடிய வாய்ப்பு இல்லாததால் புதிதாக அங்கிருந்த மொழி பிரச்சனை அவளுக்கு பயத்தைக் கொடுத்தது

ஆனால் விசு அவளுக்கு புரியும் படி தெளிவாக் ஆங்கிலத்தில் அவளுக்கு பேசவும் படிப்தற்கும் புரிந்துகொள்ளவும் உதவி செய்தான்.

புத்திசாலியான அழகியும் அதை உடனே புரிந்து கொண்டதால் விசுவுக்கு அவளுக்கு சொல்லிக்கொடுப்பது எளிதாகவே இருந்தது.

அப்பொழுது அழகு நிலவின் பக்கத்தில் இருக்கும் சுமதிக்கு விசுவின் அறிவும் பொறுமையாக அழ்குநிலாவை எளிய ஆங்கிலம் மூலம் பேச வைத்த பாங்கும் அவளைக் கவர்ந்தது

மேலும் அழ்குநிலாவின் துருதுருப்பும், நகைசுவைத்தன்மையும், பாசாங்கு இல்லாத இயல்பான பேச்சும், நடத்தையும் சேர்ந்து அவளை கவர்ந்ததால் அவளும் அவர்களின் நட்பு வட்டத்துக்குள் தன்னை இணைந்துக் கொண்டாள்.

சுமதி படிப்பில் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் அவள் அம்மா அப்பாவும் கவர்மென்ட் எம்ப்ளாயி ஆக இருந்ததும் அவள் ஊட்டி ஹாஸ்டலில் தனது பள்ளிபடிப்பை முடித்திருந்ததாலும் நல்ல ஆங்கிலப் புலமை பெற்றிருந்தாள்.

எனவே அழகு நிலாவிற்கு ஆங்கில அறிவை அவர்களிடமிருந்தும் சுமதி கல்வியறிவை, அழகு மற்றும் விசுவிடமிரிந்து கூட்டாக பரிமாறி தங்களின் நட்பையும் வளர்த்துக் கொண்டனர்

இதற்கிடையே சுமதிக்கும் விசுவிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. காம்பஸ் இண்டர்வ்யூவில் அழ்குநிலாவிற்கும் ,சுமதிக்கும் ஒரே இடத்தில் வேலைகிடைத்தது ஆனால் விசுவிற்கு வேறு ஓர் இடத்தில் இருவரையும் விட அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது.

போனை வைத்ததும், உன் கூடப் படிச்ச உன் தோழி பிள்ளை சுமதியும் இங்கதான் வேலைக்கு சேரப்போவதாக சொன்னாயே அழகி அவ கூடவா பேசின என்று குமரேசன் கேட்டான்

ஆமாம் அண்ணே.! அவள் வந்து கால்மணி நேரம் ஆச்சாம். அவள் பெரியப்பா வீட்டில் இருந்துதான் வேலைக்கு வரப்போறதா சொல்லியிருந்தாள் இப்பவும்  அவங்கதான் வந்து விட்டுட்டு போயிருக்காங்க. உள்ள அவங்களை விடலயாம் அதே போல் உன்னையும் உள்ள விட மாட்டாங்க அண்ணே, நீ அதனால் ஊருக்கு கிளம்பு. நான் வந்தமாதிரி ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டலுக்கு போய்விடுவேன். நாளையில் இருந்து ஆபீஸ் பஸ்சில் போய்விடுவேன் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.