(Reading time: 18 - 36 minutes)

தன் அண்ணியின் கையில் இருந்த ஏழுமாத மருமகனை பார்த்து ராசுக்குட்டி டாட்டா உனக்கு மொதமாச சம்பளத்தில நெறைய பொம்மை வாங்கிட்டு வர்றேன்.... “அத்தைக்கு டாட்டா சொலுடீ செல்லம்” என்று கூறினாள். அவள் கூறியது புரியாவிட்டாலும் தன் பேர் சொல்லி அத்தை அழைத்ததும் தன் பொக்குவாய் மலர சிரித்தான் .  அவள் அண்ணன் பைக்கை எடுத்தான்

துரைமாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியின் அருகில் உள்ள குட்லாடம்பட்டி என்ற கிராமத்துப் பெண் தான் நம் நாயகி அழகுநிலா அவள் ஊரில் குட்லாடம்பட்டி அருவியும் கிராமத்துக்கே உண்டான இயற்கை அழகும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் இருப்பினும் இன்று வளர்ந்து வரும் நாகரீகம் காரணமாக அவள் ஊரின் மக்களும் விவசாயத்தை மறந்து வொய்ட் காலர் ஜாப் மோகத்தில் பட்டணத்தை நோக்கி சென்றவண்ணம் இருந்தனர்.

அப்படி பட்டணத்தில் வேலை பார்க்கும் இளசுகள் ஊர் திருவிழாவிற்கு வரும் போது அவர்களின் மாற்றத்தை கண்டு, இவளுக்கும் பட்டணத்தில் படித்து பெரிய வேலைக்குப் போய் தன் அம்மாவையும் அண்ணனையும் சொந்தக் கார் வாங்கி அதில் கூட்டிச் செல்லவேண்டும்  என்ற ஆசை  சிறு வயதில் இருந்தே உண்டு.

துறுதுறுப்பும் அழகும் அருகில் உள்ளவர்களைத்  தன் கலகலப்பான பேச்சால் வசீகரிக்கும் தன்மையும்  வாய்ந்தவள் அழகுநிலா. தன்னுடைய அழகை பற்றி அறியாதவள் கல்லூரிக்குச் சென்றபின்பே சுடிதார் போடுவதற்கு அம்மாவிடம் கொஞ்சி கெஞ்சி கேட்டு வாங்கி போட ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் அம்மாவிற்கு அவளை தாவணி சேலையில் பார்க்கத்தான் பிடிக்கும். இந்த குழாய் மாட்டி மேல போடும் சொக்காயை அவள் விரும்பாவிட்டாலும் இன்றைய காலக்கட்டத்தில் அந்த வடக்கு இந்திய உடை நம் தமிழ் நாட்டு கிராமப்பபுரங்களிலும்  கலந்து விட்டதால்  தான் மட்டும் தன் மகளை சுடிதார் போடக் கூடாது என்று சொன்னால்  தன் மகளுக்கு மனதில் ஏக்கம் வந்துவிடுமோ என்ற காரணத்திர்க்காக மட்டும் சுடி போட அனுமதி கொடுத்தாள் .

அழகுநிலா  நீண்ட மீன்போன்ற அழகான கண்களும்  இயற்கையாகவே திரட்டிங் பண்ணாமலே வில்போன்ற அமைப்புள்ள நீண்ட புருவமும் கண் இமையில் உள்ள முடி கூட அழகாக வளைந்து புருவத்தை தொடுவதுபோல் இருக்கும்  கண்ணுக்கு மையிட்டு,  பார்க்க வசீகரமாகவும், கண்மணிகளில் நிரந்தரமாக காணபபடும் துறுதுறுப்பும் அமைப்பான அளவான நீண்ட மூக்கும் அதில் இருக்கும் ஒற்றைகல்  மூக்குத்தியும் ,சாயம் பூசாமலே இளரோஜா வண்ணத்தில் ஆரோக்யமான அமைப்பான அழகான உதடுகளும் வட்டமும் இல்லாது நீளமும் இலாது அழகான முகமும் உடலில் தேவையில்லாத இடத்தில் எந்த சதையும் இல்லாவிட்டாலும் கன்னம் மட்டும் ஆப்பிள் போல் உருண்டும், சந்தனநிற கன்னம்  சற்று ரோஸ் கலர் கலந்தும் இருக்கும் தன் மகளின் அழகை பார்க்க பார்க்க  அந்த அம்மன் போன்ற அழகுடைய தன் மகளை காண காண அவ்வளவு பூரிப்பாக இருக்கும் ராசாத்திக்கு .

ஆனால் அவளின் துடுக்குத்தனமான பேச்சும் முயல் குட்டி போன்ற துறுதுறுப்பும் அழகும் கண்டு பொத்தி பொத்தி வளர்க்க தோன்றும், அவளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்யும் வரை தன் சிறகிற்குள்ளேயே தன் மகளை பொத்தி வளர்க்க ஆசைப் பட்டாள் ஆனால் அவள் எவ்வளவுதான் பிடித்து பதுக்கப் பார்த்தாலும் இளங்கன்றாய் துள்ளி ஓடும் அழகியின் ஓட்டத்தை அவளால் நிறுத்தமுடியவில்லை.

இதோ எப்பொழுதும் போல் இன்றும் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேலைக்கு போகிறேன் என்று சென்னை கிளம்பிவிட்ட தன் மகளை வழியனுப்பிவிட்டு, மதுரை மீனாட்சி தாயே..... என் மகளை எந்த பிரச்சனையும் அன்டாதவாறு காப்பாத்து தாயரே... என்ற வேண்டலுடன் நின்றாள்.

அந்த பெரிய பில்டிங் முன் நின்று அதை நிமிர்ந்து பார்த்த குமரேசனுக்கு தன் தங்கை இதில் வேலைக்கு சேர்வதை நினைத்து பெருமையாக இருந்தது அழகியோ தன்னுடைய மொபைலில் இருந்து தன் தோழி சுமதிக்கு  அழைத்தாள்.

சுமதி நான் வாசலில் இருக்கிறேன் நீ வந்துவிட்டயாடீ? எங்க இருக்க? யார் கூடவந்த? என்று தொடர்ந்து கேள்விஎழுப்பினாள் அழகி.

அவள் கூறியதற்கு எதிர்புறம் குறைந்த வால்யூமில் அடியே கேள்விக்கு பிறந்தவளே நான் வந்து பதினைப்ந்து நிமிஷம் ஆகிடுச்சு.உள்ளதான் உட்கார்ந்திருக்கிறேன் என்றாள்.

அதற்கு அழகி ஏன் சுமதி நான் வருகிற வர கொஞ்சம் வெய்ட் பண்ணியிருக்கலாம்ல  எனக்கு கொஞ்சம் பயமா இருக்குது. நீ கூட இருந்தா உள்ள வருவதுக்கு  கொஞ்சம் தைரியமா  இருந்திருக்கும் என்றாள்.

அவள் கூறியதும் ஏன் அழகி இப்படி பயப்படுற இங்கிலீஸ் பேசமட்டும் உனக்கு ஏன் தான் இன்னும் உதறல் எடுக்கோ? உன்னால் மேனேஜ் செய்ய முடியும் அழகி.

நான் என் பெரியப்பாவோடு வந்தேன் அவருக்கு எதோ அவசர வேலை போல அதனால் என்னை உள்ளே விட்டுட்டு போகலாமுன்னு கூட வந்தார். அந்த ரிசப்சனில்  உள்ள லேடி வெளியாட்களை உள்ளே விட மாட்டேன்னு சொல்லி என்னை மட்டும் விட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.