தனது மகள்களை நடத்துவது போன்றேதான் மருமகள் வளர்மதியையும் ஜெயசுதா நடத்துவாள்.
எல்லோரின் கலாட்டாக்களுக்கு இடையே வேலைப்பளு பெரிதாய் தெரியாது.
நேசமலருக்கு எதையும் செய் என்று அடுத்தவர்கள் சொல்லிச் செய்யப் பிடிக்காது.
அதே போன்று பிடிக்காத ஒன்றை செய்யவே மாட்டாள். அப்படியே செய்ய வேண்டி வந்தால் அழுகையும் ஆத்திரமும் வரும்.
அவளது பிறந்த வீடாய் இருந்திருந்தால் தயக்கமின்றி செய்ய முடியாது என்று சொல்லியிருப்பாள்.
இங்கே அவளை வருத்தவென்றே வரிசை கட்டி அந்த வேலைகள் நிற்கின்றன என்று புரிந்துகொண்டாள்.
அதனால் மறுத்துக்கூற அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. பல்லைக்கடித்துக்கொண்டு முடிந்த அளவு செய்தாள்.
அவள் பொறுமையாய் செய்யச் செய்ய வேலைப்பளு கூடியது.
அவளே முடியாமல் வீட்டை விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடியாதா?”
அவனது கோபத்தை லட்சியம் செய்யாமல் அவள் தலையணையில் தலை சாய்க்கப் போனாள். அவளுக்கு எப்போதடா படுப்போம் என்று உடம்பு கெஞ்சியது.
அவன் அவளைத் தடுத்தான்.
“நான் கேட்டுக்கிட்டேயிருக்கேன். நீ பாட்டுக்கு பதிலே சொல்லாம போனா என்ன அர்த்தம்?”
அவளுக்கு பொறுமை பறந்தது.