(Reading time: 12 - 24 minutes)

வைராக்கியத்தினை நியாயமான அதிகாரங்களுடன் ஒன்றிணைத்தாளே!உண்மையில் வாகை சூடியது மாயா தான்!உபாயம் வேறு இல்லாத நிலையில் அவள் பிடிவாதத்தை உடைக்க,இங்கு சூழ்ச்சியை ஆயுதமாக்கி,அவள் நினைவுகளை அழிக்க வேண்டிய நிலையில் உண்மையில் வென்றது மாயாவின் பிடிவாதமே!!!

நாட்கள் வேகமாக உருண்டோடின...

நான்கு திங்கள்கள் கழித்து...!

"என்னப்பா ருத்ரா?அதிசயமா வீட்டுக்கு வந்திருக்க?"

"அது..மாயா...மாயாவை வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன் அதான்..."-சமாளித்தான் அவன்.

"கல்யாணத்துக்கு இன்னும் 3 மாதம் தானே இருக்கு!ஞாபகமிருக்கட்டும்!"-அவர் புன்னகையுடன் எச்சரிக்க,அவன் முகத்தில் விளக்க இயலாத மாற்றம்!

"உள்ளே தான் இருக்காப்பா!போய் பாரு!"

"சரிங்கம்மா!"-உத்தரவு கிடைத்த ஆனந்தம்,அவனை விரைய வைத்தது!!

"தேவசேனா!ருத்ரா தம்பி வந்திருக்கார் பாரு..!காபி எடுத்துட்டு வா!"-என்ற குரல் கேட்டது.கதவை தட்டாமல் மெல்ல திறந்தான் ருத்ரா!!

"கடவுளே...கடவுளே..கடவுளே..."-என்று முனகியப்படி எதையோ வெறித்துக் கொண்டு மெல்ல பின்னால் நகர்ந்துக்கொண்டிருந்தாள் மாயா.

"என்ன பண்றா இவ?"-என்று அவள் தோள்களில் அவன் கை வைக்க,

"ஈஸ்வரா...!"-என்று அலறியப்படி திரும்பி அவனை அணைத்துக்கொண்டாள் மாயா.ஒருநொடி சிலையாய் உறைந்துப்போனான் அவன்.

"ஏ..என்னடி?என்னாச்சு?"

"கரப்பாம்பூச்சி!காப்பாற்றுங்க!"-என்று சுவரை சுட்டினாள் அவள்.அவன் சுவரைப் பார்த்தான்.கடந்தக்காலத்தில் தான் பழகிய மாயாவா இவள்?என்ற எண்ணம் உண்மையில் அவளை நகைக்க தான் வைத்தது!!

"அது எப்போதோ பறந்துப்போச்சு!"-அவள் அவனை விலகாமலே திரும்பி பார்த்தாள்.

"போயிடுச்சா!"-நிம்மதி பெருமூச்சுடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.சட்டென அவனது நெருக்கம் நினைவு வர,பதறியப்படி விலகினாள் மாயா.

"நீங்க இங்கே என்னப் பண்றீங்க?"

"ஆ...கரப்பாம்பூச்சியை பிடிக்க வந்தேன்."

"விளையாடாதீங்க!"

"நான் விளையாடுறேனா?நீதான் விளையாடுற!வெளியே போகணும்னு சொன்னேன்ல!"

"நான் வரலை!என்னால படத்துக்கு எல்லாம் வர முடியாது!"

"ஏன்?"

"மாட்டேன்!உங்களுக்கு தெரியாதா எனக்கு தியேட்டர் எல்லாம் போய் படம் பார்க்கிற பழக்கம் இல்லைன்னு!"

"உன்னை..."

"அதிசயப்பிறவி நீ!எப்போ பார்த்தாலும் வீடு,கோவில்,கோவில்,வீடு!உனக்கு மித்ரா எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கே!"-அவள் புன்னகைத்தாள்.

"சரி...வா!நம்ம வீட்டுக்குப் போகலாம்!"

"ஏன்?"

"பாட்டியை பார்க்கணும்னு நீதானே சொன்ன?"

"ம்..சரி!அப்போ இருங்க!நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்!"

"எனி ஹெல்ப்?"

"இங்கேயே இருங்க!அதான் பெரிய ஹெல்ப்!"-அவள் உள் அறைக்குள் நுழைந்தாள்.சில நிமிடங்கள் அங்கு பேசாமல் உழன்றுக் கொண்டிருந்தவன் கவனத்தில் மகேந்திரனின் புகைப்படம் தென்பட்டது!!

"ஸாரி சார்!உங்க டைரியை,உங்க நினைவுகள் எல்லாத்தையும் அன்னிக்கு நான் அழித்ததுக்கு!மாயாவுக்கு ஒரு சின்ன கசப்பான சம்பவங்கள் கூட இனி நினைவு வரக்கூடாது!அதனால தான் அன்னிக்கு எல்லாத்தை எரித்தேன்.அவளைப் பற்றி இனி நீங்க பயப்பட வேண்டாம்!அவ என்னுடைய மனைவி!அவளை பாதுகாக்கும் பொறுப்பு இனி எனக்கானது!மாயா உண்மையிலே ரொம்ப க்யூட்!அவ இப்படி வாழணும்னு தானே நீங்க ஆசைப்பட்டீங்க!உங்க ஆசையில இனி எந்தக் குறையும் இருக்காது!"வாக்களித்தான் ருத்ரா.

"ஏங்க...!"-மாயாவின் குரல் ஒலிக்க திரும்பியவன் உறைந்துப் போய் நின்றான்.

"நல்லா இருக்கா?"-அழகிய புடவையில்,நீண்ட கேசத்தினை பின்னி,இயற்கை அலங்காரத்தோடு வந்த நின்ற மாயாவை தரிசிப்பது இதுவே அவனுக்கு முதல்முறை அல்லவா!!தன்னருகே வந்தவளை தனது அணைப்பினுள் சேர்த்தான் ருத்ரா!!

"ரொம்ப அழகா இருக்க!என் மாயாவா இது?"

"ம்...ரொம்ப தான்!"-ஒரு நொடி அவனுக்கு கங்காவின் நினைவு வந்துப் போனது!!

அவ்வேக்கத்தை பிரதிபலித்தது அவன் முகம்!!

அவளது நெற்றியில் தவழ்ந்திருந்த முடிக்கீற்றை விலக்கிவிட்டான் ருத்ரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.