(Reading time: 12 - 24 minutes)

"உங்க கங்கா மாதிரியே இருக்கேனா?"-மெல்லிய குரலில் கேட்டாள் மாயா.(தனது கடந்தக்கால வாழ்வினை அவளிடம் பரிபூரணமாய் கூறி இருந்தான் ருத்ரா)அவனது இதழ்கள் வார்த்தைகளை உதிர்க்க மறுத்தன.தனது பார்வையின் தாக்கத்தால்,அவளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் ருத்ரா!!மெல்ல அவளது இதழ் நோக்கி குனிந்தவன்,அவளது கேள்விக்கான பதிலை அவளிடத்தில் பதிவு செய்தான்.

மாயா எப்படி உயிர்ப் பிழைத்தாள்?எது அவளை மீண்டும் மீட்டெத்து வந்தது என்னும் வினா தோன்றுவது இயல்பே!!அன்று மலை முகட்டிலிருந்து சரிந்த கார் ஆழமாய் செல்லாமல் 100 அடி தொலைவிலே பாறையின் இடுக்கில் வளர்ந்த பெரும் விருட்சத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது!!தேடினார்கள்.மாயாவின் மரணத்திற்கு தடயம் தேட களம் இறங்கிய விமானம்,உயிருடன் அவளை கொணர்ந்தது.உயிரற்ற உடலாய் நின்றிருந்தவனின் துயர் துடைக்க, எழுந்த விமானத்தில் திக்கற்ற நிலையாய்,மரணத்தின் விளம்பை தொட முயன்றவளை தடுத்து எழும்பியது அவ்விமானம்!!!

(மனிதனின் கடமைகள் பூர்த்தியாகாமல் அவர்களால் என்றும் தனது வாழ்வினை தியாகிக்க இயலாது!)

நீண்ட நேர நெருக்கத்தினை மனமின்றி தியாகித்தனர் இருவரும்!!மாயாவின் விழிகளில் ஏனோ நீர்த் திவலைகள் ஒன்றுக் கூடி இருந்தன.

"ஏ...என்னாச்சு?"-அவள் சற்றும் சிந்திக்காமல் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.காரணம் ஏதும் அவளும் அறிந்திருக்கவில்லை.ஒருவேளை மாண்டுப் போன அவள் சரித்திரம் அறிந்தவர்கள் அறிய வாய்ப்புண்டு!!

"மாயா!"

"ம்.."-அவளது விசும்பல் தெளிவாய் அவனுக்கு கேட்டது.

"என்னாச்சும்மா?"

"ஒண்ணுமில்லை!"-அவளது விழிகளை உற்று நோக்கினான் ருத்ரா.அதன் தீக்ஷணம் தாளாதவள் தன் சிரத்தினை தாழ்த்திக் கொண்டாள்.

"நான் இருக்கேன் செல்லம்!எப்போதும் உன் கூடவே இருப்பேன்.உன்னை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது!"-என்றப்படி அவள் கண்ணீரை துடைத்தான் ராணா.முகத்தின் சோகம் விலகி கதிரொளியாய் புன்னகை உதித்தது அவளிடத்தில்!!

"சரி...போகலாமா??"

"ம்...போகலாம்!"-அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,தன் தோளோடு,அவளது தோள் உரச,அங்கு ஓர் நெருக்கத்தினை உருவாக்கினான்.

ஒரு குறித்த தூரம் வரை அவன் நெருக்கத்தினை விலக்காதவள்,குறித்த தூரத்தில் தயங்கி விலக,புருவங்களை கேள்வியாய் சுருக்கினான் ருத்ரா.

அவன் கேள்வியை ஊகித்தவள்,மெல்லிய குரலில்,

"அம்மா!"என்றாள்.குழப்பம் முழுதும் அகன்று குறும்பான நகை பூக்க,அவளைவிட்டு முன்னேறினான் ருத்ரா.தாயிடம் விடைப்பெற்று அவனுடன் தனிமையில் பயணித்த நேரங்களில்,சாலைகள் நீளாத என்ற எண்ணம் அவளுக்குள்!அவளுடன் கழிக்கும் பொழுதுகள் இப்படியே உறையாத என்ற தாபம் அவனுக்குள்!!எத்தனையோ போராட்டங்கள்,யுத்தங்கள் கடந்தன....ஆனால்,அவன் காதலித்தது இந்த மாயாவை அல்லவே..!மீண்டும் அவள் உயிர்தெழ மாட்டாளா என்ற ஏக்கம் ஒரு பக்கம்!ஒருவேளை உயிர்பெற்றால்,மீண்டும் தன்னைத் தானே தண்டித்துக் கொள்வாள் என்ற அச்சம் ஒரு பக்கம்!எண்ணற்ற சிந்தனைகளை தன்னகத்தே வைத்திருந்தவன் மெல்ல அவள் புறம் திரும்பினான்.அவளோ எக்கவலையோ இன்றி சாலையை நோட்டமிட்டு கொண்டிருந்தாள்.தன்னையே அறியாமல் அவனது கை நீண்டு அவளது கரத்தினைப் பற்ற,அவளது கவனம் நொடி பொழுதில் ருத்ராவின் பக்கம் கவரப்பட்டது.

"என்ன?"

"லவ் யூ மாயா!"-அந்தக்கண்கள்,அந்தச் சொற்கள் இரண்டிலும் ஒரு ஒலி மறைந்திருந்தது.அதை அவளால் ஊகிக்க இயலவில்லை.ஒருவேளை அவன் மாயாவாய் இருந்திருந்தால் ஊகித்திருந்திருப்பாள்.காரணம்,அந்த வலிக்கான காரணங்கள் அவள் நினைவுகளில் இருந்து அதிகாரப்பூர்வமாய் நீக்கப்பட்டன.மெல்லியப் புன்னகையை உதிர்த்தவள்,அவனது அகண்ட தோளினை தன் வாசஸ்தலமாக்கிக் கொண்டாள்.

"பார்ப்போம் கல்யாணத்துக்கு அப்பறமும் இந்தக் காதல் இப்படியே இருக்கான்னு!"-குறும்புடன் கூறினாள் அவள்.

"ஏன் இருக்காதுன்னு நினைக்கிறீயா?"

"குறைய வாய்ப்பிருக்கு!"

"ஏன்?அதை எப்படி அதிகமாக்கணும்னு உனக்கு தெரியாதா?"-என்றவனின் கூற்றில் அவளது இதயத்துடிப்பு உச்சத்தைத் தொட்டு அவளுக்குள் ஒருவித பூரிப்பை அளித்தது.

பேசியப்படி இல்லம் வந்தடைந்த இருவரில் ஒருவனை விட்டு,உடன் வந்த பெண்ணை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் மித்ரா.

"அக்கா...!"

"ஆரம்பித்துவிட்டாங்கடா!"-முகம் சுழித்தப்படி முன்னேறினான் ருத்ரா.

"எப்படி இருக்க மித்ரா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.