(Reading time: 20 - 39 minutes)

இவ்வளவு நேரம் கேட்டும் பதில் சொல்லவில்லை என்ற எண்ணத்தில் அவளது அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு “கீர்த்தி.. மனசுலையே வச்சிருக்குரதால சோகம் குறையாது.. என்ன நடந்ததுன்னு சொல்லு.. இல்ல நான் விரேன்னுக்கு போன் பண்ணி கேட்பேன்...” என்றுவிட்டு அவனுடைய எண்ணை அழுத்தப் போனாள்.

அவளது கையில் இருந்து சட்டென வாங்கிக்கொண்டவள், “ஏய் அவருக்கே ஒன்னும் தெரியாதுடி..” என்று இருவருக்கும் நடுவில் வைத்துவிட்டாள். சில மணி துளிகள் அமைதியாக வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தவள் மெதுவாக துவங்கினாள். “அன்னைக்கு கடத்திட்டு போகும் மயங்கினது தான்.. முழுச்சு... முழுச்சு பார்க்கும் போது...” என்று சொல்ல முடியாமல் கண்ணீர் வழிவதையும் பொருட்படுத்தாமல் சொல்ல துவங்கினாள்.

அவள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தவள் கீர்த்தியின் துயரை தாங்க முடியாமல் அவளை தழுவிக்கொண்டாள். ஆனால் மனதின் வலி குறைந்தபாடில்லை கீர்த்திக்கு தன்னிலை மறந்து நிறுத்தவும் மறந்து தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தாள். அனைத்துக்கொண்டிருந்த மித்ராவும் அழுதிட திடிரென ஏதோ விழும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர். அதிர்ந்த கோலத்தில் நின்றுக்கொண்டிருந்தனர் பெற்றோர்கள் இருவரும்... பெற்றோருக்கு தெரிந்துவிட்ட அதிர்ச்சியில் கீர்த்தி முழிக்க, அறைவாசளிலேயே அமர்ந்து அழ துவங்கிவிட்டார் அருணா...

வாய் பொத்தி அதிர்ச்சி தாளாமல் விசும்பி அழுதவர், கத்தி அழ துவங்கினார் “ஐயோ... என் புள்ள வாழ்க்கையே போச்சே... எது நடக்ககூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்துருச்சே... எத்தனை சாமியை கும்பிட்டேன்.. எல்லா என்னை ஏமாத்திருச்சே... இதுக்கு தானே வெளிய அனுப்பாமல் பார்த்து பார்த்து வளர்த்தேன்...” என்று தலையில் அடித்துக்கொண்டு நெஞ்சில் இருந்த பாரம் எல்லாம் கத்தி அழுவதில் போகாதோ என்பதற்கு ஏற்ப அழுதார்.

விடே இடிந்துப் போனது போலத்தான் இருந்தது.. குன்றலில் தேம்பி தேம்பி கீர்த்தி அழ, மித்ராவிற்கு மற்றவருக்கும் தேற்றும் எண்ணமே இல்லை அவர்களும் சேர்ந்து அழுதனர். தாய் சோர்ந்து போனாலும் தந்தை கலங்கி பார்த்திராத வீடு, இப்போது தந்தையும் அழுவதை பார்த்து செயலற்று இருந்தது. தலையில் கைவைத்து அறை வாசலில் அமர்ந்துவிட்ட இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை.

எவ்வளவு நேரம் அழுதார்களோ அவர்களுக்கே தெரியாது... காரிருள் அறையையும் சூழ்ந்துக்கொண்டது... மித்ரா... அழுதழுது சோர்ந்து போயிருந்த கீர்த்தியின் முதுகை தடவியவாறு கொஞ்சம் தன்னை தேற்றிக்கொண்டாள்.

அருணாவை அருள் சமாதானம் செய்தார்... மெதுவாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவர் “அருணா... எழுந்திரி.. எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்ல கூட தோன்றாமல் உதடுகள் ஒட்டிக்கொள்ள, “பிள்ளைங்க அழுது பாரு... நம்ம இப்படி இருக்கலாமா... எந்திரி..” என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

மனம் தேறினால் தானே அழுகையை நிறுத்த.. கண்கள் உயர்த்தி கீர்த்தியை பார்க்கும் போதெல்லாம் நெஞ்சை அடைத்தது. எழுந்து சென்று கீர்த்தியை இறுக அனைத்துக்கொண்டவர்... மெதுவாக அவளது கண்களை துடைத்துவிட்டு மீண்டும் அடக்கமாட்டாமல் “என் புள்ள எவ்வளோ கஷ்ட்ட பட்டிருக்கும் அந்த பாவிங்ககிட்ட..” என்று இறுக்கமாக அணைத்துக்கொண்டு அழத்துவங்கிவிட்டார்.

“அருணா...” என்று தந்தை அருணாவின் தோளை ஆதரவாக தடவிக்குடுக்க... மேலும் மேலும் அழுகை தான் வந்தது அருணாவிற்கு.    

“சண்டாளைங்க... நல்ல சாவே வராதுங்க அவனுங்களுக்கு... என் புள்ள கஷ்ட்ட பட்டதை விட  ஒரு பங்கு அதிகமாகவே அவங்க படுவானுங்க...” என்று அழுது தீர்த்தார். கை வளையத்திற்குள் இருந்த கீர்த்திக்கு வெகு நாளுக்கு பின்பு கிடைத்த ஆதரவோ இல்லை பாரம் விலகிய உணர்வோ... சத்தியெல்லாம் தீரும் வரையில் அழுது முடித்தாள். அவள் சோர்ந்து விழுவதை கண்டுவிட்டு தான் சுற்றியிருப்போர் அனைவரும் சுதாரித்ததே...

கண்களை துடைத்துக்கொண்டவர், “மித்ரா... கீர்த்திக்கு போய் எதாவது குடிக்க கொண்டு வா...” என்று கூறினார். அவள் இடத்தை விட்டு எழும்பொழுது தான் பார்த்தாள் ஏதோ ஒரு அழைப்பு தானாக துண்டிப்பதை.. கொஞ்சம் கண்களை சுருக்கிக்கொண்டு கையில் தொலைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்தவள் எண்ணையும் எவ்வளவு நேரம் அது அழைப்பில் இருந்தது என்றும் பார்த்தால். அப்போது தான் திடிக்கிட்டு போனாள், “அழைப்பேன் அழைப்பேன்...” என்று கூறியவாறே விரேனுக்கு அழைப்பு விடுத்துவிட்டதை... இதை கீர்த்தி பார்த்தால் வேதனை படுவாள் என்று உணர்ந்து.. ஒரு நிமிடம் அவனை அழைத்து பேசிவிடலாமா தெரிந்து கொண்டது போல காட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொல்ல தோன்றியது, பின்பு சங்கடமாக தோன்றிவிட முதலில் கை பேசியில் இருந்து அந்த அழைப்பை ஹிஸ்டரியில் இருந்து மட்டும் எடுத்துவிட்டாள்.

ஒரு நீண்ட பெருமூச்சினை எடுத்துக்கொண்டவர், கண்களை துடைத்துக்கொண்டு “நான் போய் சமைக்குறேன்.. நீ படுத்துக்கோ...” என்று இப்போது அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்துவிட்டு வேலையை துவங்கினர். இருவரும் சென்றது தந்தை அவளது தலையை கோதியபடி அருகிலேயே அமர்ந்திருந்தார். என்னதான் அவளுக்கு முன் எல்லாம் பழையபடி மாறியதுப் போல அனைவரும் எழுந்துவிட்டாலும் நிற்கையில் நடக்கையில் என்று எல்லா செய்கையின் போதும் கீர்த்தியின் நினைப்பாகவே இருந்தது மூவருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.