(Reading time: 20 - 39 minutes)

சுற்றி நடப்பவை எல்லாம் தன்னை வஞ்சிக்க மட்டுமே நடப்பவை போல தோன்றும், அனைவரும் பொய்யாய் வாழ்தல் போல, நடிப்பது போல ஆதாயம் தன்னில் இருந்து காண்பது போல சுருக்கமாக தனக்கு மட்டும் குறிவைத்து அனைத்து கெட்டதும் நடக்கவேண்டும் என்று சூனியம் வைத்தது போல உலகம் இயங்குவதாக தோன்றும்.

அப்படிதான் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தோன்றியது. அந்த குடும்பத்திற்கு மட்டும் நடப்பது போல, அந்த காரிருள் பயங்கரத்தில் இருந்து வெளியே வந்தால் தானே வாய்ப்புகள் கண்ணனுக்கு தெரியும். ஆனால் பெருமுயர்ச்சி அன்றி வரவிடாமல் விளையாடி பார்ப்பதே வாழ்க்கை.

இப்படி பட்ட யோசனையில் அருள் மூழ்கி இருக்க, அருணா அருகில் வந்து கொஞ்சமேனும் அவன் சோகத்தை குறைக்க எண்ணி அவனது கையினை பிடித்து மெல்ல வருட, உணர்சிபெற்று திரும்பி பார்த்தார். வார்த்தைகளே இல்லாத சம்பாஷனை நடைபெற்றது இருவருக்கும், ஆறுதல் சொல்ல முடியும் ஆனால் இது மாறும் என்று சொல்ல முடியாதே... கலங்கிய கண்ணுக்குள் இருந்து கண்ணீரை வெளியே விடாமல் கண்களை சிமிட்டியபடி நடப்புக்கு வந்தார். “போய் எதாவது சாப்பிட வாங்கிட்டு வாங்க” என்றார் அருணா. அவருக்கும் சிறிது தன்னை அசுவாசபடுத்திக்கொண்டு எழுந்தார்.

யோசனையில் இருந்து நாம் விடுபட நினைத்தாலும் அது நம்மை விட்டால் தானே நடைமுறைக்கு திரும்ப முடியும்...

போய் வெகுநேரம் ஆகியதை கூட உணராமல் வீட்டில் அங்கும் இங்கும் அருணா சுற்ற, மித்ராவின் அலைபேசி ஒலித்தது...

“ஹலோ..”

“...”

“ஆமா..”

“...”

“ம்மா...”

“...”

“ம்மா... சீக்கரம் வாங்க...” என்று கத்திக்கொண்டே... “எந்த... எந்த ஹாஸ்பிட்டல்” என்று பதட்டமாகவே கேட்டாள். அழுகையுடன் கேட்டுக்கொண்டு பதட்டத்தோடு அன்னையிடம் சென்றவள். “அம்மா... அப்பாக்கு அச்சிடென்ட் ஆகிருச்சாம்...” சொல்லும் வார்த்தையெல்லாம் காற்றில் எங்கோ ஒலிக்கும் ஓசை போலதான் விழுந்தது அருணாவிற்கு.. ஒரு வினாடிக்குள் எல்லாம் தோன்றியது.. இருக்காது அது அவராக இருக்காது... இது நடக்கவில்லை.. இது கனவு எழுந்திரி அருணா.. இது கனவு மட்டும் தான் என்றது உள்ளம்...

“வா மா” என்று சொல்லும் வார்த்தைகள் அரைகுறையாக விழ, அன்னையை உலுக்கி நிலைமையை உணர வைத்தாள்.

உணர்ந்த மறுகணமே... “ஐயோ.. ஆண்டவா ஏன் என் குடும்பத்த இப்படி சோதுச்சு பார்க்குற” என்று புலம்பிக்கொண்டு நடுக்கத்தோடு நிலைகுலைய நின்றார் அருணா..

ஓடிசென்று பர்சினை எடுத்துக்கொண்டு அன்னையை அழைத்துக்கொண்டு செல்ல முற்பட்டவள் யோசித்துவிட்டு “அம்மா அக்கா...” என்று நிற்கவும், அதே நேரத்தில் பதட்டத்தோடு இவள் பேசுவதை கேட்டவள் அழுது புலம்ப நேரமின்றி உடனே இவர்களுக்கு துணையாக யாரை கூப்பிடுவது யார் யார் என்று யோசித்துக்கொண்டு தொலைபேசி எண்ணினை சுழற்றிய போது சிக்கியது விரேனின் அலைபேசி எண். இப்போது இருக்கும் நிலைமைக்கு கேள்விகள் இன்றி நிலைமையை புரிந்துக்கொள்ள அவனால் தான் முடியும் என்று தோன்றிவிட அவனுக்கு அழைத்தாள்.  

அவளது பதட்டமும் அழுகையும் வேகமாக அவனை மருத்துவமனைக்கு வர செய்தது...

“அம்மா... விரேன் நேரா ஹாஸ்பிட்டலுக்கு வருவாம்மா நீங்க அங்க போகும் போது அவனும் இருப்பான்.”

“நீ வரலையா கீர்த்தி..” என்று மித்ரா வருத்தம் குரலில் தெரிய கேட்கவும் ஏனோ இந்த சச்சரவிலும் வெளியே வர முடியாமல் அவளை தாழ்த்தியது வெளி உலக உணர்வு. அவள் மெதுவாக இல்லை என்பது போல குன்றளுடன் தலையை ஆட்டவும், அன்னைக்கு வெறுத்து போய்விட்டது “ஓ.. அப்போ உன் அப்பா ஒண்ணுனா கூட முன்னாடி வர மாட்ட அப்படி தானே... இரு நல்லா இரு..” என்று கணவரின் மேலே உள்ள அன்பில் என்ன வார்த்தைகள் சொல்கிறோம் என்று புரியாமலே தீயில் சுடுபட்ட புண்ணினை மேலும் சுட்டுவிட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டு மேலும் புலம்பியவாறு கிளம்பினார் அருணா... மித்ரா இருபக்க நிலைமையும் கைக்கு அடங்க கூடியவில்லை என்று புரிந்து செய்வதறியாது கீர்த்தியை வருத்ததோடு பார்த்துவிட்டு அன்னையை அணைத்தவாறு அழைத்துக்கொண்டு போனாள்.  

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1082}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.