(Reading time: 17 - 34 minutes)

எங்கே இருப்பாள் அவள்??? அவளுக்கு என்னை நினைவிருக்குமா??? இந்த கேள்வியே அவனை குடைந்தது.

சரியாய் அந்த நொடியில் அவன் இருக்கையின் அருகே வந்து நின்றாள் அவள்!!! அனுராதா!!!

இதுவரை கண்ணீர் என்பதை அறிந்திராத அழகு கண்களும், அழகான புன்னகை குடிக்கொண்டிருக்கும் இதழ்களும் சராசரிக்கும் சற்றே அதிகமான உயரமும் அவளது அடையாளங்கள்.

அதிர்ந்து நிமிர்ந்தான் அவன். மூட மறந்தன அவன் இமைகள். மை காட்’ அவனையும் அறியாமல் உச்சரித்தன அவன் உதடுகள்.

‘அவள்தானே??????’ என்னவள்தானே  ஆம் அவளேதான்!!!’. அது எப்படி நினைத்தவுடன் வந்து நிற்கிறாள்?

அவன் தாடியும், மீசையும் கண்ணாடியுமாய் இருந்தவனை கண்டிப்பாய் அடையாளம் தெரியவில்லை அவளுக்கு. மூன்று பேர் அமரக்கூடிய அந்த வரிசை இருக்கையில் ஜன்னலின் ஓரத்தில் அமார்ந்திருந்தான் இவன்.

‘ஹேய் எவனோ உட்கார்ந்திருக்கான். இப்போ என்ன செய்ய??? கிசுகிசுத்தாள் அவள் தோழி. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்துக்கொண்டான் ஹரிஷ்.

‘ஸோ... வாட்... இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா??? நான் உட்கார்ந்துக்கறேன். பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..’ சொல்லிவிட்டு அவனுக்கு அருகில் வந்து அமர்ந்துக்கொண்டாள் அனுராதா.

‘வந்து அமர்ந்திருக்கிறாளா??? என்னருகில் வந்து அமர்ந்திருக்கிறாளா என்னவள்??? இது நிஜமா கனவா??? கண் திறந்தால் கனவு மறைந்துவிடுமா??? படபடத்தது அவனுள்ளே.

அவளது பெர்ஃபியூம் வாசம் இதமாய் அவன் நாசி வருடியது. சில நிமிடங்களில் நகர்ந்தது பேருந்து. சில்லென்ற ஏசி காற்று தாலாட்ட துவங்கியது. மெலிதான வெளிச்சத்துடன் கூடிய  இருள் பரவியது பேருந்துக்குள்.

இது கனவில்லை. நிஜம்தான். மெல்ல புரிந்தது அவனுக்கு. அப்படியே ஆனாலும் அவள் என்னை மறந்தே போயிருப்பாள். அவளை நிராகரித்தவன் நான். இப்போது எந்த முகத்துடன் அவளிடம் பேச???’ கண்களை இன்னமும் திறக்கவில்லை அவன்

‘ஆங் நாம ...என்ன பேசிட்டு இருந்தோம்???’ தோழியிடம் கேட்டாள் அனுராதா.

‘அது... வந்து ம்.... ஹரிஷ்..’ இது தோழி

‘ம்...எஸ்.. கண்டிப்பா நடக்கும். நீ வேணும்னா பாரு. இந்த தடவை ஹரிஷ் அவனை ப்ரூவ் பண்றானா இல்லையா பாரு!!! அவன்கிட்டே நிறைய திறமை இருக்கு’ அவள் சொல்ல விலுக்கென கண் திறந்து நிமிர்ந்தான் அவன்.

அணிந்திருந்த கண்ணாடியின் வழி அவனது பார்வை அவளை அவசரமாக வருடியதை அறியவில்லை அவள். ‘‘ஹரிஷ் என்றுதானே சொன்னாள்??? என்னை பற்றித்தானா சொல்கிறாள்??? அவனுக்குள்ளே பேரார்வம்

‘ஆரம்பிச்சிட்டியா உன் ஹரிஷ் புராணத்தை. அவன் இருக்கிற உயரம் என்ன தெரியுமா??? உன்னை அவன் திரும்பிகூட பார்க்க மாட்டான். நீ என்னமோ ஹரிஷ், ஹரிஷ்னு ’ அவள் தோழி சொல்ல

அவன் என்னை திரும்பிகூட பார்க்க மாட்டான்னு எனக்கு தெரியும். இருந்தாலும் அவன் ஜெயிக்கணும்னு நான் எப்பவும் வேண்டிக்குவேன்’ அழுத்தம் திருத்தமாய் சொன்னாள் அவள்.

அவள் வார்த்தைகளில், தவிர்க்கவே முடியாமல் அவனுக்குள்ளே சில்லென்று ஒரு சந்தோஷ சாரல் பாய்ந்தது நிஜம்.

‘என் புரிதல் சரிதானா??? அவள் பேசுவது என்னை பற்றித்தானா???’ இன்னுமும் அவன் கேள்விக்கு சரியான  பதில் கிடைக்கமால் அவன் யோசிக்க உடனேயே வந்தது விடை

அவள் சட்டென உயிர்பித்த கைப்பேசி திரையில் இவன் முகம். வியப்பும், ஆர்வமும் கலந்த பாவம் அவன் முகத்தில். அந்த மங்கலான வெளிச்சத்தில் கைபேசியின் ஒளி அவள் முகத்தில் படர அவள் முகத்தை அணு அணுவாய் படித்துக்கொண்டிருந்தான் அவன். அவன் மீதிருந்த மொத்த நேசத்தின் பிரதிபலிப்பாய் மின்னிக்கொண்டிருந்தன அவள் கண்கள்.

மொபைல்லேயும் இவன்தானா ‘ ஹப்பா... போட்டோவையே இப்படி பார்க்கிறே??? நேர்லே பார்த்தா என்ன செய்வியோ???’ அவள் தோழி கேட்க பட்டென வந்தது இவள் பதில்

‘கண்டிப்பா அவன் முன்னாடி போய் பல்லை காட்டிட்டு நிக்க மாட்டேன்.. நான் எப்பவும் என்னை தாழ்த்திக்க மாட்டேன் டோன்ட் வொர்ரி’ நிதானமான குரலில் உறுதியாக சொன்னாள் அவள். அந்த நிமிர்வான வார்த்தைகளில் சற்றே வியந்தான் ஹரிஷ்.

‘பழைய அனுராதா இல்லை அவள். நிறையவே முதிர்ச்சி வந்திருக்கிறது அவளிடத்தில்’ தோன்றியது அவனுக்கு. அவள் மீது நிறையவே மரியாதையும் பிறந்தது அவனுக்கு.

‘கிட்டதட்ட ஆறு ஏழு வருஷம் ஆச்சு. அவனுக்கு என்னை ஞாபகம் கூட இருக்காதுன்னு எனக்கு தெரியும் பட் அவன் எப்பவும் என் மனசிலே இருப்பான்.. இதை உன்கிட்டே மட்டும்தான் சொல்றேன். காதல் அப்படிங்கிற ஒரு உணர்வை முதல்முதலா எனக்குள்ளே விதைச்சது அவன்தான். இருபது வயசிலே மனசிலே விழுந்த விதை. ஹீ இஸ் மை ஃப்ர்ஸ்ட் லவ் யூ நோ??? ’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.