(Reading time: 17 - 34 minutes)

‘அவனுக்கு என்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் எனக்கு அவனை எப்பவும் பிடிக்கும்’ அவள் அழுத்தமாக சொல்ல கொஞ்சம் உறைந்தான் அவன்.

அவளிடமிருந்து அப்படி ஒரு பிடிவாதமான நேசத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னமும் அவளது மனதில் தன்னை சுமந்துக்கொண்டிருப்பாள் என்று அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

‘என் ஹரிஷை ஊரே கொண்டாடணும் அதுதான் இப்போதைக்கு என்னோட வேண்டுதல்’ ‘கைப்பேசியை பார்த்து புன்னகைத்தாள் அவள்.

அவன் உயிரின் அடி ஆழம் வரை பரவியது ஒரு இனிதான ஆனந்தம். அதன் பிரதிபலிப்பாய் அவனது விழி ஓரத்தில் கொஞ்சமாய் கண்ணீர்.

‘உன்னை நிராகரித்தவனடி நான். அதன் பலனாகத்தான் அதன் பிறகு நிறைய அவமானங்களை சந்தித்தேனோ???’ உள்ளம் மருகி கரைந்தது.

சும்மா தூள் கிளப்பணும் சரியா??? எனக்காக!!!’ என்றாள் அவனது புகைப்படத்தை பார்த்து அவள் சொன்னது மெலிதாக கேட்டது இவனுக்கு. இதமாய் ஒரு இளம் புன்னகை அவன் உதடுகளில்.

‘எப்படியடி பெண்ணே என்னை இப்படி காதலிக்கிறாய்???’ தித்திப்பாய் வியந்தான்.  ‘காதலிப்பதை காதலிக்கப்படுவது இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்குமா??? இப்போதுதான் புரிந்தது அவனுக்கு.

ஹேய்... பக்கத்தில் இருக்கறவன் ஏதாவது ப்ராப்ளம் கொடுக்கிறானா???’ திடீரென அவளருகில் இருந்த தோழி மெதுவாய் கிசுகிசுக்க

‘ஹேய்... சும்மா இரு. பாவம் அவர் தூங்கிட்டார் போல, சும்மா எல்லாரையும் தப்பாவே நினைக்காதே..’ சட்டென சொன்னாள் இவள். 

‘தூங்குவதெல்லாம் இன்று நடக்காது ‘ மெல்ல சிரித்துக்கொண்டான் தனக்குள்ளே. பேசியபடியே தோழிகள் இருவரும் உறக்கத்தை தொட்டிருந்தனர்.

கண்ணாடியை கழற்றிவிட்டு உறங்கி இருந்தவளின் முகத்தை நிறைவாக ரசித்தான் அவன்.

ஹீ இஸ் மை ஃப்ர்ஸ்ட் லவ் யூ நோ???’ சொன்னாளே அவள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இவனுக்கு காதலை முதலில் உணர்த்தியவள் அவள்தான். இவனது திறமையை யாருமே பெரிதாக உணரத்துவங்கியிராத நேரத்திலேயே இவனை அங்கீகரித்தவள் ரசித்தவள் இவள்.

‘கண்டிப்பா நடக்கும். நீ வேணும்னா பாரு. இந்த தடவை ஹரிஷ் அவனை ப்ரூவ் பண்றானா இல்லையா பாரு!!! ‘எத்தனை நமபிக்கையடி பெண்ணே உனக்கு என் மீது???

சில நிமிடங்கள் முன்னால் வரை அவனுக்கே அவன் மீது நம்பிக்கை இருக்கவில்லைதான். கடந்த ஒரு மாதமாய் இதே கேள்விகள்தான் அவனுக்குள்ளே உழல்கின்றன.

‘நான் ஜெயித்துவிடுவேனா??? ஒரு வேளை தோற்றுவிட்டால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா??? அது நிச்சியமில்லைதான்.!!!! நான் தோற்றுவிட்டால் அது எனக்கு இன்னொரு அவமானமாகிவிடும்தானே??? அப்பா எப்படி எடுத்துக்கொள்வார்??? ஜெயித்துவிடுவேன்தானே??? நான் என்னை நிரூபித்து விடுவேன்தானே??? இப்படி தனக்குதானே கேட்டுக்கொண்டேதான் சுற்றிக்கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கு என்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் எனக்கு அவனை எப்பவும் பிடிக்கும்’ அவள் வார்த்தைகள் அவனுக்குள்ளே மறுபடி மறுபடி ரீங்காரம்.

‘பிஹேவ் யுவர் செல்ஃப் அனு. லுக். எனக்கு உன் மேலே கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை. புரிஞ்சுக்கோ.’ அன்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி அவளை கடைசியாக தள்ளி நிறுத்திய தினம் இப்போது கண்முன்னே வந்தது.

கண்டிப்பாக அவள் நிலையில் இவன் இருந்திருந்தால், அவள் இவனை வேண்டாமென சொல்லி இருந்தால், இப்படி அவளை நேசித்திருப்பானா என்று சொல்ல தெரியவில்லைதான். இப்படி ஒரு காதல், அதுவும் இத்தனை வருடங்களாய் எப்படி சாத்தியம்??? ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு.

‘நான் உன்னை விலக்கி இருக்கிறேன் ஒரு காலத்தில்!!! நிச்சயமாய் அன்றைய நிலையில் இதை எல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இல்லைதான். ஆனால் இனிமேல் யோசிக்கிறேன். உனக்காக மட்டுமே யோசிக்கிறேன். ஜெயிக்கிறேன்!!! உன் நம்பிக்கையை பொய்யாக்காமல் என்னை நிரூபிக்கிறேன்’ சொல்லிக்கொண்டான் அவன்.

இப்போது புதிதாய் ஒரு உற்சாகமும், வாழ்கையின் மீது ஒரு பிடிப்புமே ஏற்பட்டு இருந்தது அவனுக்கு. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதிலிருந்தே அவள் எங்கே வேலை செய்கிறாள் என்ற விவரத்தையும் அறிந்திருந்தான் அவன்.

அவளோடு சேர்ந்து அவள் மடியிலிருந்த அந்த பூங்கொத்தும் உறங்கி இருந்தது. மெதுமெதுவாய் அவன் மனதிற்குள் நுழைந்து வேர் பிடித்து நிமிர்ந்திருந்தாள் அவள். உறக்கத்தில் அவள் சற்றே திரும்பி சாய அவள் மடியிலிருந்த பூங்கொத்து சரிந்து அவனது மடியில் விழுந்தது.

‘பிரியங்களும்!!! வாழ்த்துக்களும்!!! அனுராதா!!! அழகான கையெழுத்தில் எழுதி இருந்தாள் அவள். குளிர் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவனது உதடுகளில்.

‘வேறு யாருக்காகவோ அவள் வாங்கியதாக இருக்க வேண்டும் அது. இருந்தாலும் என்ன என் தேவதை இப்போது அதை எனக்கு கொடுத்திருக்கிறாள்’ பளபளக்கும் விழிகளுடன் அதை ரசித்தவன் அதை தனது பைக்குள் சொருகிக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.