(Reading time: 17 - 34 minutes)

காலையில் பேருந்து சென்னையை தொட்டிருக்க ,எல்லா உடமைகளையும் மறந்தே இருந்தாள் அந்த பூங்கொத்தை. அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு இவன் அமர்ந்திருக்க இறங்கி சென்றிருந்தாள் அவனவள்.

ஹர்....ரிஷ்!!! ஹர்ரி...,,,,ஷ்!!!! ஹர்ரி .ஷ்!!! கூடத்தின் உற்சாக கூவல் அவனை தரை இறக்கியது.

‘பார்த்துக்கொண்டிருக்கும்!!! என் பூங்கொத்து என்னை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருக்கும்!!! சொல்லிக்கொண்டான் அவன்.‘

அங்கே அனுராதா தனது பெரியப்பாவின் வீட்டில் இருந்தாள். தாய் தந்தை இருவரும் இல்லாத நிலையில் அவளுக்கு எல்லாமே அவள் பெரியப்பா, பெரியம்மா, அவர்கள் மகன் ஷங்கர், அவனது மனைவி கீதா.

மற்றவர்கள் யாரும் டிவியின் முன் இல்லாதிருக்க அவள் மட்டும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். சிறிது தூரம் நடந்து திரும்பியவன். வெகு அனாயாசமாய் ஹெல்மட்டை கழற்றி அதன் மேலிருந்த தூசியை ஊதினான்..

பல நாட்களுக்கு பிறகு அவனது முக தரிசனம் அவளுக்கு!!! அவளெங்கே அறிந்தாள் சில நாட்களுக்கு முன்னால்தான் கிட்டதட்ட பத்து மணி நேரம் அவன் அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் என!!!

நெடு நெடு உயரமும் தீர்மையான மூக்கும், துறுதுறு கண்களும் அழகன்தான் அவன்!!! ரகசியமாய் ரசித்த அதே நேரத்தில்  

‘எப்படித்தான் இப்படி இருக்கானோ??? கொஞ்சம் கூட டென்ஷனே இல்லாம???’ பரபரத்தது அவளுக்கு.  

இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நடைபெறும் உலககோப்பைக்கான அரையிறுதி பந்தயம் அது.

மறுபடியும் ஹரிஷ்க்கு க்ளோஸ் அப்.. ஹெல்மட்டின் வழியே துருதுருவென தெரிந்தன அவன் கண்கள், ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு ஹரிஷ் கிரீஸ்க்குள் வந்து நிற்க, பௌலர் பந்து வீச தயாராக மைதானத்தில் அப்படி ஒரு நிசப்தம்!!!  

‘ஹரிஷ் அடிச்சிடேன் எனக்காக!!!’ .அவள் மனதிற்குள் சொல்ல அவன் சட்டென திரும்பி கேமராவை பார்த்தது போல் இருந்தது.

‘சும்மா இரு குரங்கு மனமே!!!. ‘அவன் என்னை எல்லாம் எப்போதும் பார்க்க மாட்டான்’  கூவிக்கொண்டாள் தனக்குள்ளே

இன்னும் ஒரே பந்து ஆறு ரன். மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர் பந்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்துக்கொண்டிருந்தான் அவனை நோக்கி.

‘அ...னு...ம்...மா. .இது உனக்காகத்தானடி ’ மனதிற்குள் சொல்லிக்கொண்டு மிக சாதரணமாய் எந்த ஒரு சிரமும் காட்டாத முக பாவத்துடன் ஒரு அடி முன்னால் வந்து ஒரு மட்டை வீச்சு!!!

‘சிக்ஸர்!!!!’  ஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஹூஹூஹூஹூஹூ’ கூவியே விட்டாள் இவள்.

இந்தியா உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்திருந்தது. அது இன்று அவன் அவன் ஆடிய ஆட்டத்தினால் என்பது எல்லாருக்கும் தெளிவாகி இருந்தது.

‘பார்த்துக்கொண்டுதான் இருப்பார் அவரும். கண்டிப்பாய் மகிழ்ந்து போயிருப்பார். ரகசியமாய் பெருமை பட்டுக்கொள்வார்’ அவனுக்குள் இனிப்பாய் ஒரு நிறைவு. கையிலிருந்த மோதிரத்தை நெஞ்சோடு வைத்துக்கொண்டான் அவன்

ஊரே அதிர்ந்தது கும்மாளத்தில் .மற்ற ஆட்டக்கார்கள் அவனை தூக்கிக்கொள்ள மைதானத்துக்குள் ஓடி வந்துக்கொண்டிருக்க ரசிகர்களை பார்த்து உற்சாகமாய் பேட்டை அசைத்தான் அவன்.

டிவி கேமராக்களை பார்த்து மண்டியிட்டான். உதடு குவித்து அவன் பூங்க்கொத்திற்கு என  காற்றில் பறக்க விட்டான் ஒரு முத்தத்தை.

‘என் வெற்றி உனக்கு சமர்ப்பணமடி பெண்ணே!!!’  

அங்கே டி.வியின் முன்னால் உற்சாகத்தில் மூழ்கிக்கிடந்தாள் அனுராதா. அவன் கொடுத்த முத்தம் காற்றில் கலந்து வந்து அவள் கன்னம் தொட்டத்தை அறியாமல்!!!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

முதல் அத்தியாயம் பிடிச்சிருக்கா சொல்லுங்க. விவேக் ஸ்ரீனிவாசன் இந்த வாரத்தோட முடிச்சிடணும்னு நினைச்சேன். கடைசி அத்தியாயம் கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு.. அதனால் இந்த கதையை துவங்கிட்டேன். விவேக் ஸ்ரீனிவாசன் கடைசி அத்தியாயத்தோட சேர்த்து இதோட ரெண்டாவது அத்தியாயத்தையும் வரும் வாரத்திலே கொடுத்திடறேன்.. Thanks a lot

 

தொடரும்......

Episode 02

{kunena_discuss:1147}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.