(Reading time: 19 - 38 minutes)

மெல்ல அலைபேசியை எடுத்தவளுக்கு திரையில் புது எண் தெரியவும் மீண்டும் திகிலாக இருக்க, எடுப்போமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து கடைசியில் எடுத்தாள்....

“ஹலோ...” என்று மறுமுனையில் பெண்மணியின் குரல் கேட்கவும் தான் நிம்மதியாக இருந்தது அவளுக்கு.

“ஹலோ...”   

“ஹப்பாடா.. எடுத்தியே.. என்னம்மா?? ஊருக்கு போனதும் என்ன பத்தி யோசிக்குறதே இல்லையா.. மறந்துட்டியா???”

மறுமுனை யார் என்பதை உணர்ந்ததும் சிறிது ஆறுதலாக இருந்தது அவளுக்கு.. “அதெல்லாம் இல்ல... எப்படிம்மா இருக்கீங்க???” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டே பேசினாள். ஆனால் குரல் நன்றாக காட்டிகுடுத்தது... “என்ன அழுதுகிட்டு இருக்க போலயே..”

“இல்ல.. இல்லையேம்மா...”

“பொய் சொல்லாத கீர்த்தி... நல்லா தெரியுது..”

அவர் கேட்கவும் இன்னும் அழுகை தொடர, “அப்பாவுக்கு அச்சிடென்ட்ம்மா...”

“கேள்விபட்டேன்... இப்போ பரவால்லன்னு சொன்னாங்க.. ஆனா நீ அதுக்கு அழுகுர மாதிரி தெரியலையே.. ஹாஸ்பிட்டல்க்கு போன் பண்ண மாதிரியும் தெரியலையே...”

மறுமுனை அமைதியாகவே இருக்கவும்... “பாரு கீர்த்தி... இது ஒரு பகுதி தான்.. ஆனா இதுவே வாழ்க்க இல்ல.. அதை முதல உன் மூளைக்கும் மனசுக்கும் சொல்லு... நீ இப்போ செய்யுறது சரியான்னு யோசி.. உன் அப்பாவுக்கு அடிபட்டிருக்கு.. அப்போ நீ எங்க இருக்கணும்.. உன் நிலைமை எல்லாருக்கும் தெரியும் தான் ஆனா.. நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும்...” என்று கூறவும் அமைதியாகவே கேட்டுக்கொண்டு இருந்தாள்.

விமலாவும் தனது அறிவுரை கேட்டுக்கொள்கிறாள் என்று உணர்ந்து கொஞ்சம் பேச்சினை சகஜமாக்கிக்கொண்டு பேசினார்.

“சரிம்மா நான் அப்பறம் பேசுறேன்... எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு.. சரியா...”

“சரி ஆன்ட்டி...” அவள் பதில் பேசியது திருப்தியாக இருந்தாலும் பேசும் தோணி.. ஏனோ சரியாக படவில்லை... இவளிடம் பேசிவிட்டு விரேனுக்கு அழைத்தார்.

“விரேன்...”

“சொல்லுங்கம்மா... பேசுனீங்களா... என்ன சொன்னா??”

“ஏன்டா பதட்டப்படுற...”

“ம்ம்ம்ம் சரி சொல்லுங்க...”

“பேசுனே.. ஒன்னும் தப்பா நடக்கலை சொல்ல போனால் தனிமையில இருந்தாலும் தற்கொலைக்கு முயற்சி பண்ணிகுற அளவுக்கு அவளோட மனசு இடம் தரலை.. சோ அந்த அளவுக்கு சேப் தான்...”

“ஏம்மா இழுக்குறீங்க...”

“அதுக்கில்ல.. என்னதான் பேசினாலும் கூடவே நிறைய பேரு எடுத்து சொன்னாலும் அது 2 விதத்துல முடியலாம்... ஒன்னு... நல்ல விதமா புரிஞ்சுகிட்டு முயற்சி பண்றது... இன்னொன்னு...”

“இன்னொன்னு...”

“இவங்க எல்லாருக்கும் நம்ம நிலைமை புரியலை... அறிவுரை சொன்னால் பட்ட காயம் மாறிடுமா... நம்ம அளவுக்கு துரதிஷ்டவாளி யாருமே இல்ல... அப்படின்னு நெகடிவ் திங்கிங் அதிகமா மாறலாம்...”

“என்னம்மா சொல்றிங்க...”

“இப்படியும் நடக்கலான்னு சொல்றேன் விரேன்... இதுதான் நடக்கும்னு சொல்லல... கூடவே கொஞ்சநாள் இருந்து பார்த்துக்கணும்... மனநிலை மாறிகிட்டே இருக்கும்... நீ வேற அவளோட அப்பாவுக்கு அடிப்பட்டிருக்குன்னு சொல்ற... ம்ம்ம்ம்... சரி நீ பேசாம அவளோட தங்கச்சியவாது கூட போய் இருக்க சொல்லு.”

“சரிம்மா..” என்று அழைப்பை துண்டித்துவிட்டு மித்ரா அருணா இருவரிடமும் இதை பற்றி கூறாமல்.. “சரி ஆன்ட்டி நேரமாச்சு.. நீங்களும் மித்ராவும் வேணும்னா வீட்டுக்கு போங்க நான் பார்த்துக்குறேன்..”

“இல்லப்பா.. நான் இவர் கூடவே இருந்துக்குறேன்.. இங்க தான் ஒருத்தர் தங்கலாம்னு சொல்லிட்டான்களே.. நீ வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ.. கீர்த்தியை வேற தெரியாம திட்டிட்டேன் என்ன பண்றாளோ... மித்ரா நீ வீட்டுக்கு போ.. அவளுக்கு கொஞ்சம் துணைக்கு இரு..”

மறுப்பேதும் சொல்லாமல் சரி என்றுவிட்டு கிளம்பினாள்.

“மித்ரா இரு எப்படி போவ..”

“ஆட்டோல...”

“மணி என்னாச்சு தெரியுமா.. இங்க இருந்து உங்க வீடு தூரம் வேற.. நான் கொண்டு போய் வேணா விடவா என்று அருணாவை பார்த்தான்... அவன் மீது ஏற்பட்டு இருந்த நம்பிக்கையில்.. “சரிப்பா.. பத்திரம்... வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு மித்ரா.. நீயும் தாப்பா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.