(Reading time: 13 - 26 minutes)

தவிர அவள் பொறுப்பில் பத்து மரக்கன்றுகளையும் தானமாகத் தரவேண்டும்.. அதுமட்டுமா.. அந்தக் கடைசிக் கண்டிஷன்..’

இவையெல்லாம் எதற்காக?..ஏன் ஏன் ஏன்? மனது குமுறத் தொடங்கியது

சும்மா காலேஜில் ஜூனியர்சைக் கலாய்த்ததற்காக.

கண்களுக்கு முன் சுழல் சுழலாக வட்டமும் சதுரமும் போக, இரண்டு தினங்கள் முன்பு நடந்த நிழ்ச்சி மனதில் ரீலாக ஓடியது சுந்தரிக்கு..

சமோசா கேங்க்.. கல்லூரியின் பின்பகுதியில் புதிதாக வந்த மாணவ மணிகளில் அய்யோபாவமாக நின்றிருந்த சுப்ரியாவை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்..

கேங்க் பாஸ் மாதிரி ஒரு மரத்தின் கீழ் இருபுறமும் உற்ற தோழிகளின் நடுவே நின்றுகொண்டு, "மச்சி.. இந்தச் சுப்பிக் குட்டி பாவம்டி.. ரொம்பக் கலாய்க்க வேணாண்டி.. பாரு மோஹி இப்பவே கண்ணுல ஜலம் வெச்சிணுடுத்து குழந்தை.. சுப்பிக் குட்டி ஏன்மா நீங்க பின்வாசல் வழியா எஸ்ஸாகப் பார்த்திங்க.. நேத்தே உன்னை எங்களைப் பார்க்க சொல்லி விட்டோமில்லை.. ஏன்டிம்மா குட்டி நோக்கு தெரியாதோ?..", என்று வம்புக்கிழுத்து கொண்டிருந்தாள்.

"அக்கா.. அதெல்லாம் இல்லைக்கா.. எனக்கு இந்தக் கேட் வழியா போனாத்தானக்கா எங்காம் பக்கம்.. அதான்.. மத்தபடி அனாவசிய வம்பு வேணாமேன்னு தான் நான் ஒதுங்கிப் போனேன்.. ரேகிங்க்லாம் தப்பு தெரியுமோல்லியோ.. நான் டிபார்ட்மெண்ட்லே கம்ப்ளைண்ட் செய்வேன்..", என்று மெல்ல எகிற தொடங்கினாள்.

அவ்வளவுதான் ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது மோஹிதாவுக்கும் பானுவுக்கும்.. "ஓஹ் அப்படிப் போடறியோ அருவாளை.. நாங்க கூட உன்னைப் போனாபோகுது விட்டுடலாம்னு நினைச்சோம்.. ஆனா இந்த மாதிரியெல்லாம் பேசிட்டு எஸ்ஸாகிடமுடியாது கண்ணு.. நீ எங்க ஜூனியர்.. அதுவும் சேம் டிபார்ட்மெண்ட்.. அவ்வளவு ஈசியா ஓடிருவியா?.. உனக்கு இந்த அதிகப்படியான பேச்சுக்குப் பனிஷ்மெண்ட் தந்தே ஆகணும்..", என்ற சாந்திபானு.

"மாமூ.. இந்த மண்புழுவை என்ன செய்யாலாம்?..", என்று கேலியாய் சுந்தரியைப் பார்க்க,

சுந்தரி தன் காது வளையங்கள் அசைந்தாட மேலும் கீழும் தலையை ஆட்டி யோசித்தவள்..

"சரி..ஐடியா..", என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணுக்குப் பச்சை சட்டையில் தொலைவில் முதுகைக் காட்டியபடி நின்றிருந்த ஒருவனைக் கண்டாள்.. அவன் ஏதோ சீரியசாய் வேறுதிக்கில் பார்த்தபடி நின்றிருந்தான்..

"ஹேய் சுப்பிகுட்டி.. நீ என்ன பண்ணுற.. அங்க ஒரு டையகிராம் நிக்கிது பாரு.. நல்லா வாட்ட சாட்டமாய்.. அதுகிட்ட போயி லவ் ப்ரொபோஸ் செஞ்சிட்டு வரணும்.. இல்லாட்டி.. பாரு..", என்று மிரட்டினாள்..

"அய்யோ அக்கா.. எனக்கு அதெல்லாம் தெரியாது.. என்னை விட்டுடுங்கோ.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை..", என்று பதறினாள் சுப்ரியா..

"ம்ம்..அப்படின்னா நீ கொஞ்சம் அடக்கமா இருந்துருக்கணும்.. நீ எப்படிப்பட்ட பொண்ணும்மா அப்போ.. நீ ரொம்ப நல்லவ.. அப்ப நாங்கள்ளாம் கெட்டவங்களா.. அந்தப் பருப்பெல்லாம் இங்க வேகாது.. செல்லாது செல்லாது.. நாட்டாமை சொல்லியாச்சு, நீ போறே.. அவன் கிட்ட பேசறே.. சரி பரவாயில்லை.. நீ அவனை ப்ரபோஸ் செய்ய வேணாம்.. அட்லீஸ்ட் நான் அவனை லவ் செய்யறேன்னு சொல்லி இந்தப் பூவைக் குடு.. என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோ.. அவன் எங்களுக்குத் தம்ப்ஸப் காமிக்கணும்.. போ இன்னும் என்ன.. அதான் நீ எனக்குத்தானே தூது போகிறே இல்ல.. போ.. சீக்கிரம் வேலையை முடி..", என்றவள்..

திரும்பித் திரும்பி தயங்கியபடி எப்படியும் இவர்கள் விடமாட்டார்கள்.. அந்தச் சீனியரிடம் கொஞ்சம் நைச்சியமாய்ப் பேசி தம்ப்ஸப் காட்டச் சொன்னால் பிரச்சனை முடிந்துவிடும். இல்லாவிட்டால் திரும்பவும் வம்புக்கு இழுப்பார்கள் என்று எண்ணியவள், பச்சை சட்டைக்காரனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்..

"ஏய் நில்லு.. லவ் ப்ரபோசலுக்கு ரோஸ் எங்கேடி..", என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் மரத்தில் பூத்திருந்த பூ ஏதோ ஒரு காட்டுப் பூவைக் கிளையுடன் உடைத்தவள்..,

"இந்தா இதை எடுத்துட்டு போ.. அவன் கொஞ்சம் வளர்த்தியா இருக்கான் இல்லை.. சரியா இருக்கும்", என்று சொல்லி கிளையைக் கொடுத்தாள் சண்முகசுந்தரி.

"சூப்பரப்பு சூப்பரு", என்று ஹைஃபை கொடுத்தார்கள் பன்னும், மோஹியும்..

"எப்புடிடி.. புல்லரிக்குது.. இப்படிப் புதுசு புதுசா பிளான் போடறே.. ரோஸ் இல்லைன்னா கூட.. சூப்பரா சமாளிச்சிட்டே..", என்று இளித்தாள் பானு

தோழிகளைப் பார்த்துத் தெனாவெட்டாய் சிரித்த சுந்தரி.. "இருங்கடி அந்தப் புள்ளைப்பூச்சி போகுது.. ஆனா இவன் எந்த மேஜர்னு தெரியலை.. புதுசா இருக்கிறாமாதிரி இருக்கு.. நமக்கு ஜூனியரோ?.. அதுவும் பச்சை கலர்ல ஷர்ட் வேற.. ஒருவேளாய் ஏதாவது பக்கத்து கிராமமோ.. எதுவானாலும் இப்போ திரும்புவான்ல் அந்தக் கிராமராஜன்..", என்று சொல்லிவிட்டுக் கண்ணடித்தாள்.

“மச்சி இது டூ மச் சொல்லிபுட்டேன்.. அவன் நல்லா உயரமா இருக்கிறான்.. வளர்த்தியா தெரியுறான்.. அவன் நமக்கு ஜூனியரா?.. நிச்சயம் நமக்கு இன்னிக்கு ஆப்போ?..”, என்று இழுத்தாள் பானு..

தோழியை அமர்த்திவிட்டு..”அடங்குடி மக்கா..ஏய் போம்மா.. போ..”, என்று சுப்ரியாவை உந்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.