(Reading time: 13 - 26 minutes)

கைகால் உதற அங்கிருந்து சென்ற சுப்ரியா அந்தப் பையனிடம் என்ன சொன்னாளோ ஏதோ.. அவன் கையை உயர்த்திப் பின் பக்கமாய்த் தம்ப்ஸப் காண்பித்தவன், ஃபோனில் யாரிடமோ இரண்டு நிமிஷம் பேசிக் கொண்டிருந்தவன், சட்டென்று திரும்பி இவர்கள் புறம் நடந்தான்.

அருகில் வந்தவனைக் கண்டதும், கை கால் ஓடவில்லை மூவருக்கும்.

அடுத்தச் சில நொடிகள்.. ஒன்றும் புரியவில்லை சமோசா கேங்குக்கு.. சரமாரியாக அவர்களைக் குரல் உயர்த்தாமல் திட்டியவன் கடைசியாய் அவர்களுக்குப் பனிஷ்மெண்ட்டாய் மேலே சொன்ன அனைத்தையும் தந்தவன்.. அடிஷனல் போனஸாய் பேச்சுச் சுவாரஸ்யத்தில் இலையையும் கிளைகளையும் தன் காலருகே ஒடித்துப் போட்டுக் கொண்டிருந்த சுந்தரியை கேவலமாய்ப் பார்த்து..

"இதோ பார்.. இந்த மாதிரி செடி கொடிகளை ஒடிப்பதே தவறு அதில் குப்பையைக் காலடியிலேயே போட்டு வைத்திருக்கிறாயே.. டிஸ்கஸ்டிங்க்.. உங்கம்மா உன்னை எப்படி வளர்த்திருக்காங்கப் பாரு.. அங்கே மணி உன்னோட கஸின் தானே.. அவளுக்கு இருக்கும் பொறுப்பில் பாதியாவது உனக்கு வேண்டாம்.. சே.. என்ன பொண்ணு நீ.. மேக்கப் போடவே உனக்கு நேரம் போதாது போல.. இன்னும் இரண்டு நாள் தரேன் உனக்கு.. நான் சொன்ன எல்லாத்தையும் செஞ்சு முடிக்கணும்..", என்று இழுத்தவன்..

"அடுத்து.. நெக்ஸ்ட் பத்து நாளும்.. வாசலில் கேட்டுக்கருகே இருக்கும் டஸ் பின்னை பார்த்து வாட்ச்மேன் எதிரில் நீ சல்யூட் வெக்கணும்.. வெச்சிட்டுக் கிளாசுக்குப் போகலாம்.. உன் டிபார்ட்மெண்ட் ஹெட் கிட்டே சொல்லிட்டேன்.. இனி இந்த மாதிரி நடக்கறவங்களுக்கு இதான் பனிஷ்மெண்ட் இந்தக் காலேஜில்..", என்று சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் சென்றான் சிங்காரவேலன்.

சேவ்எர்த் என்று வெள்ளை எழுத்துப் பளீரிட்டது பச்சைச் சட்டையில்.

சிறிது நேரம் ஈயாடவில்லை மூவர் முகத்திலும்..

மோஹிதா தான் முதலில் சுதாரித்தாள்,

"வெச்சிட்டான்யா வெச்சிட்டான்.. செஞ்சிபுட்டானே சிங்காரவேலன் என்னடி..இப்படி செஞ்சுட்டான்.. நம்மை நிக்க வெச்சு செஞ்சிட்டாண்டி.. என்ன செய்யுறது இப்போ..",என்று கேட்கவும்..

சாந்திபானுவோ ஒரு படி மேலேபோய், "வேற என்ன சொன்னதைச் செய்யறது.. நாமல்லாம் மியாவ்னு வாயை மூட வேண்டியதுதான் இனி.. பாஸ் என்ன இப்படி மலைச்சுபோயிட்டே.. எதாவது சொல்லு மாமூ.. நாட்டாமைத் தீர்ப்பை மாத்திசொல்லு..", என்று தூண்டிவிட்டாள்.

"என்னடி.. என்னத்தைச் சொல்ல.. அதான் தெளிவாச் சொல்லிட்டானே.."

"ஆமாடி மச்சி.. வெச்சு செஞ்சிட்டான் உன்னை.. போதாததுக்கு உன் பெரியம்மா பொண்ணு மணியை வேற கம்பேர் செஞ்சிட்டான்.. எனக்கொரு டவுட்டுடி.. இவரு அவளை ஒருவேளை லைனடிக்கிராறோ?.." என்று சந்தேகம் கேட்டாள் மோஹி..

ஒருகணம் தன் நெஞ்சில் கையை வைத்த சாந்தி பானுவோ.. "அதை மட்டும் சொல்லாதடி.. என்னால் தாங்க முடியலை.. பாரு என்னோட குட்டி ஹார்ட்டு டப்பு டப்புன்னு தாரு மாறா அடிக்கிறதை.. அவர் என்ன அவ்வளவு லூசா.. இவ பெரியம்மா பொண்ணை லவ் செய்ய.. அது ரொம்ப நல்ல புள்ளைடி சூது வாதெல்லாம் தெரியாது அந்த மணிமேகலைக்கு.. சூதுவாது தெரியாத மணிமேகலை கண்ணு.." என்றாள் ராகமாய்.

இதிலெல்லாம் கவனம் போகவில்லை சுந்தரிக்கு மனதில் ஆத்திரம் அப்பிக் கிடந்தது.. எல்லாவற்றிலும் மணி போட்டியாய் வருவதே வழக்கமாகிவிட்டது.. இதிலுமா.. கூடாது விடவே கூடாது.." என்று நினைத்துக் கொண்டவள்,

"ச்.. எனக்கு மூட் இல்லை வாங்கடி இன்னிக்குப் போதும் வீட்டுக்குப் போயிடலாம்.. பே கேட் பக்கம் வாட்ச்மேன் இல்லை.. நம்ம குட்டிச்சுவரை எகிறிக் குதிச்சிடலாம்..", என்றவள்.. கிளாசைக் கட்டடித்துவிட்டு வீடு திரும்பினாள்.

தோ இன்று அதனாலேயே சீக்கிரம் கிளம்பியவள்... மோஹியுடன் அருகிலிருந்த நர்ஸரி சென்று.. மரக் கன்றுகளை வாங்கி, ஒரு ஆட்டோவில் அனைத்தையும் ஏற்றிக் விட்டுத் தன்னைத் தொடருமாறுப் பணித்தவள், தன் வண்டியில் கல்லூரிக்கு விரைந்தாள்.

பின்னாலிருந்த மோஹிதாவோ, "ஏய் மெதுவாடி.. எதுக்கு இந்த வேகம்.. புரியுது.. நம்ம மேலேயும் தப்பு இருக்கத்தானே செய்யுது.. நாம கொஞ்சம் ஓவராத்தானே நடந்துகிட்டோம்..", என்று அவளைத் தேற்றும் வகையில் பேசினாள் மோஹிதா..

"அதைவிடுடி அது சப்பை மேட்டர்.. ஆனா இந்தக் குப்பைத்தொட்டிக்குச் சல்யூட் அதை நினைக்கவே முடியலைடி.. இன்னிலேந்து பத்து நாள்.. என் கெத்து என்னாகிறது.. பேசாம வாட்ச்மேனை சம்திங் கொடுத்துக் கரெக்ட் பண்ண நினைச்சேன்.."

"அப்புறம் என்னடி.. சும்மா தூள் கிளப்ப வேண்டியதுதானே.. மிளகாய்ப்பொடி தூவுறதிலே நாம எக்ஸ்பர்டாச்சே.. எத்தனை முறை அசைன்மெண்ட் செய்யாமேலேயே செஞ்சோம்னு பஜனைச் செஞ்சிருக்கோம்.", என்று கொக்கரித்த மோஹிதாவை திரும்பிப் பார்த்து முறைந்த்தவள்,

"ஏய்.. முழுக்கக் கேளுடி.. அப்படித்தான் நான் வாட்ச்மேனைக் கேட்டேன்.. அவன் என்ன செஞ்சான் தெரியுமா.. உடனே ஃபோன் போட்டு சாரைக் கூப்பிட்டு வத்திவச்சிட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.