(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 01 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

If I had to choose between loving or breathing, I’d rather use my last breathe to say ‘I love you’.

ழை...

‘காதலின் அடையாளமாய் வெப்பத்தை வாரி வாரி வழங்கிய ஆதித்தன், பின் மனம் வருந்தி தன் பூமிக் காதலியை குளுர்விக்க தன அன்பை மழையின் சாரலாய், தென்றலாய் அள்ளித் தெளித்தான். அன்பின் வெளிப்பாடாய் இருந்த வெப்பத்தை உள் வாங்கிய அதே அளவு காதலுடன் மழையையும் உள் வாங்கிக் கொண்டிருந்தாள், பூமா.

‘ப்பாஆ.......  மை பேபி.. உன்கூட சேர்ந்து நானும் எப்படி உன்ன மாதிரியே யோசிக்கறேன் பார்த்தியா?! எங்க..!? என்கூட இருந்தா தானே நீங்க  பார்க்க.. நான் எப்போதும் உன்னையே பத்திதான் யோசிக்கறேன் பேபி..எங்கே எது யோசிச்சாலும் அது உன்கிட்ட வந்து தான் முடிக்கறேன். I’m missing you badly.  ஆனா பேபி.. என்னே எனது புலமை...!! ச்சே... எனக்குள்ள இப்டி ஒரு கவிஞர் இருக்கறது எனக்கே தெரியாதே...இத இன்னிக்கே  ப்ளாக்-ல போஸ்ட் பண்றேன். எனக்கு தெரியும் நீ எங்க இருந்தாலும் என்னை நோட் பண்ணுவ..’

கோடை மழையில் குளிர்ந்த பூமி, சில் என்ற காற்றை வீசி அடிக்க, அதை அனுபவித்த படியே செகந்திராபாத்(secunderabad) ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தனது மனதுக்குள் பேசியபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான், நமது ஹீரோ ககன் கிஷோர் (Gagan Kishore).  பிரபலமான ACCOR group of  Hotels & Resorts  -இன் ‘The Grand Mercure’ ஹைதராபாத் கிளையை பிரான்சைஸ் (franchise) எடுத்து நடத்தும் ‘வைசராய் (viceroy)’ குடும்பத்தின் வாரிசு. இளமையுடன் இனிமையும் எளிமையும் குழைத்து வார்த்த ஆண்மகன். ‘Cute’ வகையில் சேர்பவன்.

Task Force-இல் கோவா செல்லும் தனது நண்பன் உதய் மற்றும் அவனது டீம் மெம்பெர்ஸ்-ஐ ஸ்டேஷன் சென்று வழி அனுப்பிவிட்டு வரும்வழியில் தான் இந்த சுயத்துடன் உரையாடல் படலம். ஸ்டேஷனில் அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் இதோ..

“மச்சி... நான் goa போறேன் டா.. goa... g...o....a... goa” என்று குரலில் பெருமை பொங்க பீத்திக்கொண்டே லக்கேஜ்களை வைத்து விட்டு இறங்கி நண்பனிடம் வந்தான் உதய்.

சூடான காப்பியை அவனது கையில் தந்து கொண்டே “டேய்.... வேண்டாம்... எதாவது சாபம் விட்ற போறேன்.. ஒழுங்கா போய் இடத்துல உட்காரு...”. இது நம் ககன். குரலில் பொறமை இல்லை. எரிச்சல் தான் இருந்தது. நண்பன் இல்லாமல் ஒரு வார காலம் ஓட்ட வேண்டுமே என்ற எரிச்சல்.

“ஆமாமா... நீங்க அப்படியே கண்ணகி-ஓட co-brother... நீங்க விட்ட உடனே சாபம் பலிச்சிட... போடாங்க கன் க...கன். நட்புக்காக படத்துல சிம்ரன் திட்ற மாதிரி உன் சாபம் வோர்ட்சாக மாறி காத்துல கரைஞ்சு தான் போகும் டோய்..”என்று ககனின் மனம் அறிந்து அவனை இயல்பாக்க வெறுப்பேற்றினான், உதய்.

“நான் கன்னுன்னா நீ குச்சி. ஈ..ஈ.....ர் குச்சி. ஊருக்கு போயிட்டு வாடி.. உனக்கு இருக்கு புட்டோ(butto- Hyderabad’s famous drums music)” என்று ககனும் சீண்டினான்.

“டேய்... நாங்கலாம் டப்பாங் குத்து ஆளு டா... உனக்கும் ‘பெப்பே...’ உன் புட்டோக்கும் ‘பெப்பே...’ங்கற அளவுக்கு திருப்பி அடிப்போம்...”

அதற்கு மேல் இயல்பாக பேச இயலாமல், இயல்பாக பேசுவதாக நடிக்க இயலாமல், “சரி டா மச்சி.. சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு சொல்லு.. நானும் சீக்கிரம் வரேன். நீயும் இல்லாம எனக்கு கடுப்பா வரும். will miss you dumbo.. இப்போ கிளம்பினா தான் பொக்கே வாங்கிட்டு வீட்டுக்கு போக சரியா இருக்கும்...” என்று கூறிக்கொண்டே உதய்யை அணைத்து விடுவித்தான் ககன்.

அந்த அணைப்பில் இருந்தது வெறும் ஒரு சிறிய பிரிவிற்கான ஆறுதல் இல்லை. ஆறுதலாய் இருக்கும் நண்பனை, சில வாரமேனும் பிரியவேண்டுமே என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இருந்த அணைப்பு.

“ok டா.. வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு.. நான் நாளைக்கு காலையில பேசறேன்...” ‘காவிய பார்த்தா கேட்டதா சொல்லு’ என்ற வார்த்தையை அவசரமாக முழுங்கிவிட்டு.. “...will miss you too buddy.. bye டா” என்று உதய்யும் வழியனுப்பினான்.

“ok buddy.. Take care.. See you all soon, team. My best wishes..” என்று விடை பெற்றான் ககன்.

வண்டியை signal-இல் நிறுத்த, throw back-இல் இருந்து வெளி வந்த ககன், உதய்யின் கிண்டலை நினைத்துக் கொண்டே ஹெல்மெட்டைக் கழட்டி தலையை குலுக்கிக்கொண்டான். இந்தச் செய்கையில் மனம் தானாகக் குழைந்து இனிமையான ஒரு உணர்வை எப்போதும் போல் இப்போதும் தந்தது. அதனால் சுகமான ஒரு புன்னகையும் மலர்ந்தது.

மாலை வேளை வந்த மழை தந்து விட்டு போன வெக்கையில் நிஜமாகவே வேர்த்ததோ..!! அல்லது அந்த உணர்வு வேண்டும் என்று மனம் தூண்டியதால் நேர்ந்த அனிச்சை செயலோ..!!! எதுவோ ஒன்று.. ஆனால் அச்செயலே பின்வரும் உரையாடலுக்கும் அவனை உலுக்கும் உணர்வுகளுக்கும் வித்திட்டது.

“ஹே.. அங்க பாரு டி.. நடு ரோடுல தனியா சிரிச்சிட்டு இருக்கான் அவன். பைக் மாதிரி ஆளும் நல்லா கம்பீரமா தான் இருக்கான்.! ஹே கண்ணா.. இங்கே கொஞ்சம் பாரும்மா...” என்ற ஒரு பெண்ணின் குரலை, அதுவும் தமிழில் கேட்டவுடன் அவனது உடம்பு அவனை அறியாமல் குலுங்கியதோ??!! இல்லை என்றால் அவன் கையில் இருக்கும் பைக் திடிர் என்று ஜெர்க் ஆவதேன்?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.