(Reading time: 13 - 25 minutes)

உடனேயே திடீர் என்று ககனின் காதுகளில் ரீங்கரகமிட்டது வேறொரு இனிமையான குரல்.

அது அவனின் சுவாசமான குரல்.

சுவாசமான குரலா? ஆம்.!

அந்தக்குரலை கேட்காமல் விடியும் இந்த நாட்களில் இவன் இயல்பாக சுவாசிக்கவும் முடியாமல் திணறுகிறானே. இப்பொழுதுபோல்.!! இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ள மிகவும் கஷ்டப்படுகிறானே.!!! நடிப்பென்றாலும், வெந்துப் புழுங்கும் மனதுடன் புன்னகை புரிய போரிடுகிறானே..!!! இதெல்லாம் அவளின் குரலை கேட்கமுடியாத தூரத்தில் இருப்பதால் அல்லவோ..!

அவனில், அவனின் சுவாசத்தில் கலந்து உயிர் மூச்சாகிவிட்ட குரல்.

எப்பொழுது மறுபடி கேட்போம் என்று ஒவ்வொரு நொடியும் ஏங்கி உள்ளுக்குள் மருகும் இந்த ககனின் உணர்வுகளை தனது உடைமை ஆக்கிவிட்டு, இப்பொழுது ஊதித் தள்ளிவிட்டு சென்ற இவனின் ‘பேபி’யின் குரல்.

நெஞ்சை அடைத்த உணர்வுகளை வெளியேற விடாமல் பின்னால் நிற்கும் வாகனங்களில் ஹாரன் ஒளியில் சுயநினைவு அடைந்து, பச்சை நிற சிக்னலை கவனித்து வண்டியை கிளப்பினான்.

ஒரு நிமிடத்திர்க்கும் குறைவான அந்த நொடிகளில் எழுந்த உணர்வுகளால் உலகத்தை சுற்றி வந்த களைப்பு எழ, கண்ணில் பட்ட முதல் பார்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திவிட்டு கீழிறங்கி அஸ்வாசப் படுத்திக்கொண்டான்.

மனதில் ஒரேடியாக பொங்கி பெருகியது அவளை சார்ந்த உணர்வுகளும் நினைவுகளும். ‘இது எப்படி முடியும்? இதே போல் ஒரு ட்டாக்(talk) தானே அன்றும் நடந்தது. அதனால் தானே எனக்குள்ளே இவ்வளவு மாற்றம்.! காதல்..! அது தந்த இனிமை.! சுகம்.! சுமை.! வருத்தம்.!! வேதனை.!! மறுபடியும் அதை நினைவு படுத்தும் அதே போல் ஒரு நிகழ்வு என்றால்?! ஏன்? என் தாரா.. என் ஈஷு, என் வாழ்வில் வந்த முதல் நொடிகள் இன்னும் என் நினைவில் இருக்கும்போது, அதை நினைவு படுத்திய சொற்களை ஏன் என்னால் இயல்பாக ஏற்கமுடியவில்லை??!! அந்த நினைவின் சுகத்தை பகிர அவள் என்னுடன் இல்லை என்பதாலா?? அதனால்தான் சுகமான உணர்வு சுமை போல நெஞ்சை அழுத்துதோ..!? இப்பொழுதுகூட கேட்கிறதே அவளின் குரல்...!! முதன் முதலாக கேட்டு பல நாட்கள் ஆகியும் மீளவிடாமல் என்னை இனிமையில் ஆழ்த்திய குரல்.. இன்னும் என்னால் உணர முடிகிறதே.. அவள் தந்த தூக்கமில்லா பல இரவுகளை., அவளின் வண்டி எண்ணை தேடிய பல நாட்களை, அவளின் குரலை கேட்க நான் காதை தீட்டி ஆவலுடன் எதிர் பார்த்த நாட்களை.! மை பேபி.. I’m missing you damn badly. It’s like hell without you... ’

வண்டி மீது கவிழ்ந்து கொண்டு தன்னையும் மீறி வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தான் ககன். “வேணும் பேபி.. நீ எனக்கு வேணும்.. உன் குரலை கேட்கணும்.. கேட்டுகிட்டே இருக்கணும்.. உன் முகத்தை பார்க்கணும்.. உன்னை feel பண்ணனும்.. என் நெஞ்சு ஏங்குது பேபி உனக்காக.. உன்னை பார்க்க துடிக்குது பேபி... என் தலுக்கு புலுக்கு தாரகா... வாடி என்கிட்டே... நமக்குள்ள argument & aggrement எதுவும் வேண்டாம். Its all my mistake da. என்கிட்டே சீக்கரம் வந்துடு. இல்லனா நான் வரேன் உன்கிட்ட.. நீ எங்க இருந்தாலும் உன்கிட்ட நான் வரேன். சீக்கரம். I will be with you this January for our wedding anniversary da baby. I’m quite sure about it. “

அவனின் புலம்பலில் வேதனையும் இயலாமையும் குற்ற உணர்வும் மாறி மாறி பொங்கியது. அவனே இழுத்துவிட்டு கொண்ட வேதனை. கையில் இருந்த பலூனை காற்றில் பறக்கவிட்டு அதை பிடிக்க முடியாமல் தவிக்கும் இயலாமை. சொர்கமாக கழிய வேண்டிய நாட்களை சுக்கலாக தானே உடைத்த குற்ற உணர்வு.

பொங்கிப் பெருகிய நினைவுகள் அவனையும் மீறி, சில ஆண்டுகள் முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்று அவனையும் இழுத்துச் சென்றது.

கன் தனது தோழன் உதயுடன் ஒரு நாள் இரவு டைன்-அவுட் சென்று திரும்பும்போது இதேபோல் சிக்னலில் காத்திருந்தனர். கெத்தாக ஓட்டி வந்த உதய், வண்டியை உறுமவிட்டுக் கொண்டிருந்தான். அந்த சத்தத்தில் சிக்னலில் நிற்கும் பெண்களில் கவனம் அவன் வசம் வரும் அல்லவா..? அதனால்.! பெரிய ஐடியா ஐயாசாமி.!!

உதய்யின் இந்த வழக்கம் பழகியது என்பதால், அதை கருத்தில் கொள்ளாமல், ககன் வெக்கையின் காரணமாக ஹெல்மெட்டை கழட்டி தலையை குலுக்கிக் கொண்டான். சிறிது ரிலக்ஸ் செய்துகொள்ள, நண்பனின் இடி விழுந்த ஐடியாவை நினைத்து சிரிக்க ஆரம்பித்தான்.

இருவருக்கும் பணியிடம் ஒன்றே என்பதாலும் ஒரே தெருவில் வசிப்பதாலும் ஒன்றாகவே தான் சென்று வருவர். பகலில் ககன் வண்டி ஓட்ட வேண்டும். உதய் பின்னால் உட்கார்ந்து ப்ரெஷ்ஷாக(fresh) make-up-இல் வரும் யுவதிகளை சைட் அடிக்க வசதியாக. இரவு உதய் வண்டி ஓட்டுவான் டையர்டாக வரும் யுவதிகள் இவனை சைட் அடிக்க வசடியாகவாம்(!!!). ஒவ்வொரு நாளும் இந்த சீன் நடந்தாலும், பலன் என்னவோ பூஜ்யம் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.