(Reading time: 13 - 25 minutes)

அதை நினைத்து சிரிக்க ஆரம்பித்த ககனின் கவனத்தை கிளுக்கி சிரித்த ஒரு பெண்ணின் சிரிப்பு ஈர்த்தது. ஆனாலும் அவன் திரும்பி அப்பெண்ணை பார்க்காமல் இருந்தான், அடுத்து வரும் கமெண்ட்டை கேட்க.! எல்லாம் உதய்யின் நட்பு தந்த அனுபவம்.

“ஹே... அங்க பாரு டீ... அந்த பைக்காரன் என்னமா சீன் போடறான்... என்னவோ உலகத்துலேயே அதுவும் ஹைதராபாத்துலயே அவன்ட மட்டும்தான் Hardley-Davidson இருக்கற மாதிரி பந்தா. இதுலாம் சொந்த சம்பாத்யம்ன்னு நீ நினைக்கற?? friend வண்டிய ஓ.சி. வாங்கி வந்துருப்பான். ஹா ஹா... இதுக்கே இவ்வளோ சீனா?! ஷப்பா... முடியலையே.. “என்று தமிழில் கலாய்த்த குரலை கேட்டதும் ககனின் இதயம் நின்று துடித்தது.

ஏனோ புரியாத உணர்வுகள் சட சடவென்று தூவும் மழைபோல் மனதை ஆக்கிரமிக்க, கட்டுபடுத்திக்கொண்டு திரும்பாமல் கவனித்தான் அப்பெண்ணின் குரலை. அதற்கு, யாரோ வி.வி.ஐ.பி வருவதால் தாமதமான சிக்னலும் துணைபுரிந்தது.

இதற்குள் அவளுடன் வண்டியில் வந்த பெண் ‘ஷ்...ஷ்ஷ்...’ என்ற அமைதியாக இருக்கும்படி செய்த சிக்னல் நம் நாயகனின் நாயகியின் (இப்போவேவா?!) செவியில் விழாமல் போனது ஏனோ..?!  கவனம் அவளிடம் இருந்தால் அல்லவோ... அவளின் கவனம் தான் அந்த வண்டியின் பின்னால் அமர்ந்து மெல்லமாக சிரித்துக்கொண்டு இருந்த நாயகன் மீது இருந்ததே..!

அத்துடன் நிறுத்தாமல், “எனிவே.. பைக் கம்பீரமா தான் இருக்கு.. ஆனா ஆளும் கம்பீரமா இருப்பானோன்னு பார்த்தா, கம்பீரம் படத்துல வர லைலா கரெக்டர் போல... அவன் லுக்கும் அவனும்....இதுல பைக் ரோரிங் வேற..!!! ஆனா பின்னாடி உட்காந்து இருக்கான் பாரேன்... சைடு போஸ் தான் தெரியுது, இருந்தாலும் அவன் நாலா இருக்கான்லடீ... எனக்கு என்னவோ இவன பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு.. His smile is very pleasant. ஹ்ம்ம்...!!!!!!!!”என்று ஒரு ஏக்கமான பெருமூச்சுடன் ஓயாமல் பேசி முடித்தாள்.

இதை கேட்ட ககனின் நின்று துடித்த இதயம், பட பட படவென்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவனின் வாழ்க்கையில் தொழிலில் என்று எத்தனையோ பெண்களை கடந்து வந்திருந்தாலும் ஏனோ இப்பெண்ணை சந்திக்காமலேயே அவனுக்குள் ஏதேதோ தோன்றியது. ஏனோ மனதிற்கு மிகவும் நெருக்கமாக.! அவளை கடக்க உன்னால் முடியாது என்று கூறுவதுபோல்.!

ஆனாலும் திரும்பி பார்க்கவில்லை. இவனுக்கு என்னவோ அப்பெண் இது தெலுங்கு தேசம் என்பதால் மனம்திறந்து தமிழில் பாராட்டு பத்திரம் வாசிப்பதாகப்பட்டது. தமிழ் எவருக்கும் புரியாது என்ற தைரியத்தில்.!

திரும்பிபார்த்தால் அவளின் பேச்சை நிறுத்திவிடுவாளோ என்ற பயம்கூட.

முதல் பெண் முடிப்பதற்குள் மற்றொரு பெண் தனக்கு பேச சந்தர்ப்பம் வைத்ததுபோல உடனே பொரிய ஆரம்பித்தாள்.. “ஷ்... லூசே... உனக்கு எவ்ளோ முறை சொல்லி இருக்கேன்... இப்படி சத்தமா கிண்டல் பண்ணாதன்னு. காதுல விழுந்தா அவ்வளவு தான்” என்று முடிப்பதற்குள், முதல் பெண் தொடர்ந்தாள்.

“ஆமாம்... தமிழ் நாட்ல தான் வாய அடக்கணும்னா இங்க என்னடி..? என்னவோ அவனுக்கு தமிழ் புரியறமாதிரி..!”என்றாள்.

“அட பக்கி... அவ்ளோலாம் நீ ஆசை பட கூடாதுமா... இங்க இப்போலாம் IT புண்ணியத்துல 50%  தமிழ் தெரிஞ்சவங்க தான் அட்லீஸ்ட் புரிஞ்சவங்க... சோ... ப்ளீஸ்ஸ்..  இனிமே வாயை அடக்கு.. இங்கயும் வந்து வம்பை விலை குடுத்து வாங்காத.. இல்ல சித்திக்கிட்ட போட்டு கொடுப்பேன்” என்றாள் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பெண்.

“போடி... சாமியார் கலர்.!  தமிழ் தெரிஞ்சா இந்நேரம் அவன் திரும்பி முறைக்கமாட்டனா..?  சரி விடு.. அந்த பின்னாடி உட்காந்து இருக்கறவன் முகத்த  பார்க்க முடியுதா பாரு.. சைடு போஸ்  தான் எனக்கு தெரியுது. என் மனசு அவன் மேல இம்ப்ரெஸ் ஆகிடுச்சுன்னு நெனைக்கறேன். அதை கண்ட்ரோல் பண்ணனும். கொஞ்சம் முன்னாடி தான் போயேண்டி.. அப்போதானே என் மனச பிடிக்க முடியும். வண்டி நம்பராவது நோட் பண்ணிக்கறேனே. அடுத்த முறை பார்த்தா கண்டிப்பா இன்ட்ரோ தான்.. இல்ல இல்ல என் மனச தேடனும்ல.” என்றாள் உண்மை விளிம்பியான  ‘அவள்’. (ஹ்ம்ம் ஹ்ம்ம்..!!??)

இவை அனைத்தும் சின்சியராக பக்கத்தில் நிற்கும் பெண்ணிடம் கடலை சுண்டல் எல்லாம் போட்க்கொண்டு இருந்த உதய்யின் கவனத்தில் செல்லாதது அவனின் நல்ல நேரமா? கெட்ட நேரமா? என்பது பிறகு தெரியும் நமக்கு. இல்லை இல்லை அவனுக்கு தெரியும்.!

அதற்குள் பச்சை சிக்னல் விழ, அவர்களின் உரையாடலை நினைத்து புன்னகைத்த ககன், ஹெல்மெட்டை  மாட்டிக்கொண்டான். ஏனோ விளையாடத் தோன, அவர்களின் வண்டி அருகினில் வண்டியை செலுத்துமாறு உதய்யிடம் கூறினான்.. “ஒரெய் மாமா.. ஆ அம்மாயிலு பண்டி தகரைக்கு தீசகெல்லுரா...”என்று. உதயும் பெண்கள் வண்டி என்பதால் சிரமேற்க்கொண்டு செய்தான். (சாரி உதய். உன்னை ரொம்ப மிஸ்யூஸ் பண்றேன்..)

ஓரளவிற்கு வண்டியில் நெருங்கிய ககன், அவர்களில் பின்னால் இருப்பவளை நோக்கியபடி “Hello பாட்டீ... சாரி. பியூட்டி..! நானும் உன் மேல இம்ப்ரெஸ் ஆகிட்டேன். நீ என் வண்டி நம்பர் நோட் பண்ணியோ இல்லையோ, நான் உங்களோடத நோட் பண்ணிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.