(Reading time: 13 - 25 minutes)

அடுத்த டைம் மீட் பண்ணினா யூஸ் ஆகும்ல. அப்படி மீட் பண்ணினா கண்டிப்பா இன்ட்ரோ கொடுக்கணும்.. சரியா? அதுக்கு அப்பறமா மனச பத்தி நாம தனியா டிஸ்கஸ் பண்ணிக்கலாம். okayy... tata” என்று கூறிவிட்டு உதய்யின் தோளை  தட்ட உதய், ககனின் Hardley - Davidson-னின் வேகத்தைக் கூட்டி பறக்க விட்டான், இவர்கள் வண்டி எண்ணை பார்க்கமுடியாத அளவு வேகத்துடன். ஆனாலும் ககனுக்கு பெரிய ஏமாற்றம்.! பின்னே.. அந்தப்பெண்கள் தான் துப்பட்டாவை கொண்டு முகத்தை மறைத்து இருந்தார்களே..!

அவர்கள் மெதுவாக சென்றிருந்தாலும் இவர்கள் கவனிப்பர்களோ என்னவோ..?! அவன் தமிழில் பேசியதால் ஏற்ப்பட்ட அதிர்ச்சியில் பல முறை வண்டி குலுங்கிக் குலுங்கி தட்டுத் தடுமாறி சாலையோரத்தில் நிற்க... ஓட்டிக்கொண்டு வந்தவள் திரும்பி முறைதுக்கொண்டே, “நான் அப்போவே சொன்னேன்ல டீ எரும... இப்போ பாரு, அடுத்த வம்பு ஸ்டார்ட் ஆய்டுச்சு நமக்கு.. இது எங்க போய் முடியபோகுதோ..! ஹையோ.. தேவுடா..”என்று கூறி தலையில் அடித்துக்கொண்டு, பின்னால் இருந்தவளின் தோளிலும் ஒரு அடி அடித்தாள். பின்னால் இருந்தவளோ பதில் பேச இயலாமல், திறந்த வாயை மூட முடியாமல், கண்ணை சிமிட்ட முடியாமல்.. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, வாயையும் கைகளால் மூடி இருந்தாள், இதயம் வெளியே குதித்துவிடாமல் இருக்க.!

Episode # 02

{kunena_discuss:1151}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.