(Reading time: 10 - 19 minutes)

எழுந்து வந்துவிடு மாயா, இதுயெல்லாம் பொய் என்று சொல்லி, அன்பாய் ஆறுதலாய் என் தலை கோதி நாள் பூராவும் உன் அன்பில் என்னை மூழ்கடித்து வந்துவிடு மாயா, மூச்சை முட்டுவதைப் போல இருக்கு தோட்டத்தின் பின்பக்கம் சென்றான்.

அழகான ரோஜா தோட்டம் இந்தக் குவியல்களைப் போலவே அவளின் பிறந்தநாளில் தான் ஒட்டுமொத்தமாக 100 ரோஜா தொட்டிகளை அனுப்பியதும், அதைக் கண்டதும் பேசிய மாயாவிடம் என் அழகான மாயாவிற்காக இன்னைக்குப் பிறந்தநாள் இல்லையா ? இன்றோடு நாம் சந்தித்து முழுவதாய் 100 நாட்கள் ஆகிறது அதற்குதான் அதை கொண்டாடத்தான் நாளை எனக்கு நீ தரப்போகும் முத்தத்திற்கு ஒரு அட்வான்ஸாய் இந்தக் குவியல்கள் என்று கொஞ்சியதும். அழகான வெட்கத்தோடு மறுநாள் அவளை சந்தித்ததும் நினைவிலாடியது கமலுக்கு! 

உயிர்போடு கூடிய பரிசு தந்ததுக்கு நன்றி கமல் நானுமே உங்களுக்கு ஒரு பரிசு தரப்போகிறேன் என்று ஓட்டல் சோழாவில் ஒரு டேபிளில் வெண்ணிற தேவதையைப் போல் அமர்ந்திருந்ததும், அவன் காரைப் பார்க் பண்ணிவிட்டு வர இருபது அடிக்கு ஒருவர் நின்று பூக்களைப் பரிசளித்ததும் அழகான வாத்தியங்கள் ஒலிக்க அவனை கையைப்பற்றி அமர வைத்தவள் இனிப்பு வகைகள் அணிவகுக்க கூடவே ஒரு மோதிரம் வந்தது. அழகான ஒற்றைக்கல் பதித்த மோதிரம்

உங்களுக்குப் பிடிச்சிருக்கா கமல்

ம். பிறந்தநாளுக்கு நான் தான் டியர் பரிசு தரணும்.

நம்ம இரண்டுபேரும் ஒன்றோடு ஒன்றாக கலந்திட்ட பிறகு இனிமேலும் நான் வேற நீ வேறன்னு யோசிக்கணுமா ? சொல்லுங்க. இது நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு நாள் அவ்வளவுதான் இன்னைக்கு ரொம்பவும் சந்தோஷமா நான் பீல் பண்றேன் கமல்

நல்ல விஷயம் மாயா ஆனா நீ மட்டும் பீல் பண்ணா போதுமா நானும் பீல் பண்ணணுமில்லையா ?!

அவன் குறும்பாய் தன் உதடுகளைத் தொட்டுக் காட்டிட,

ராஸ்கல் இந்த ஆசை வேற இருக்கா என்று அவன் காதை திருகினாள் மாயா.

மாயா வருவாள்

Epsiode # 09

Epsiode # 11

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.