(Reading time: 16 - 31 minutes)
இறுதி வார்த்தை - தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

அழைத்தான், நிறையச் சிந்தித்தான். தனக்குள்ளேயே கடவுளிடம் பேசினான், "கடவுளே என்ன செய்யணும்? நான் சாகவா? நான் செத்தா அவங்க வருத்தப்படுவாங்களா? நீ அவங்களுக்கு அறிவைக் கொடுப்பியா?"

  

கிழவி அடைபட்டிருந்த வீட்டிலேயே வளைய வந்தாள். அவள் கிழவனுக்காக சமையல் செய்தாள், அவனுடைய படுக்கையை, அதாவது கம்பளியை, உதறிவிட்டு விரித்தாள், லோட்டாவை பளபளவென்று தேய்த்து வைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போய்விட்டது. ஏனென்றால், இப்போதுதான் அவளுக்குக் கிழவனுடன் நெருங்கி வாழ வாய்ப்புக் கிடைத்திருந்தது. கிழவன் வெளியிலிருந்தபோது அவனுக்கு ஆயிரம் வேலை. அவளிடம் நாலு வார்த்தை குடும்பத்தைப் பற்றிப் பேச அவனுக்கு நேரமில்லை. அவன் பேசிக்கொண்டிருந்ததெல்லாம் பரத்பூரைப் பற்றிய பேச்சுத்தான், மக்களைப் பற்றிய பேச்சுத்தான். இன்றைக்கு இங்கே, நாளைக்கு இன்னோரிடம், இவன் வருவான், அவன் வருவான், ஜனங்கள் எப்போதும் அவனைச் சூழ்ந்திருப்பார்கள். இங்கே வந்தபிறகு கிழவிக்கு அவனுடன் இருக்க முடிகிறது. பேச முடிகிறது.

  

ஆனால் சில நாட்களில் கிழவியின் பிரமை தெளிந்துவிட்டது. கிழவன் மாறவில்லை. இப்போது அவனைச் சுற்றிக் கூட்டம் இல்லை, இருந்தாலும் அவனுடைய மூளையில் சிந்தனைகளின் கூட்டம் குறையவில்லை. "கிழவன் மனசு கல்" என்று ஜனங்கள் சொல்வார்கள். அவர்களுடைய கருத்து சரிதான் என்று தோன்றியது கிழவிக்கு.

  

அவள் "கிழவா!" என்று கூப்பிட்டாள்.

  

கிழவன் அவள் பக்கம் திரும்பி "உம்" என்றான். ஆனால் அவனுடைய பார்வை அவள் மேல் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எங்கோ தொலைவில், அதோ அந்த மலையுச்சியில் இருந்த கோவிலின் கும்பத்தில் அவனுடைய பார்வை நிலைத்திருப்பது போல் தோன்றியது.

  

"என்ன யோசிச்சுக்கிட்டிருக்கே?"

  

"யோசனையா?" கிழவன் சிரித்தான்.

  

"சிரிக்காதே கிழவா! உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கலே."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.