(Reading time: 33 - 65 minutes)

 

சாரிடா...உன் மனசு தெரியாம நான் கொஞ்சம் அவசர பட்டுடேன் போல...மேரேஜ்க்கு அப்புறம் இதை பத்தி பேசிருக்கனும்....இதுக்காக ஃபீவர் வர்ற அளவு டென்ஷனாயிகிட்டு...

பச்...ஃபர்ஸ்ட் மேரேஜ் பாரு அப்பப்ப இப்படி சொதப்பிடுறேன்...நெக்ஸ்ட் டைம் நோ சொதப்பல்ஸ்...” கண் சிமிட்டினான்.

கண்ணில் தேங்கி இருந்த கண்ணீரோடு எனக்கு ஏன் சிரிப்பு வந்தது என்று தெரியவில்லை. எழுந்து ஒரு குத்து அவன் மார்பை குறிபார்த்து.

அவன் உடல் தொட்டநொடி என் மூடிய கையை இரு கைகளால் பிடித்தான் “ வார்த்தை காப்பாத்தனும்...” அவன் இருகை விரல்களுக்குள் என் கை பத்திரமாய். இப்படித்தான் நானும் இவனுக்குள் என்று தோன்றுகிறது.

“உங்க வார்த்தையை நீங்கதான் காப்பாத்தனும்...நீங்கதான் தொட மாட்டேன்னு சொன்னீங்க....”

வாய்விட்டு சிரித்தான். என் கையை விட்டிருந்தான். சிந்திய சிரிப்பை காரணமின்றி சேமித்தது பெண் மனது.

“இப்படியே இரு கடைசி வரைக்கும்...மாறிடாத...” என் தலையில் கை வைத்து லேசா என் தலையை ஆட்டிவிட்டு தன் தலை அசைவால், மொழி பார்வையால் விடை பெற்றான்.

உச்சந்தலையில் இறங்கியது ஒரு ஆறுதல் அபிஷேகம்.

திருமணம்.

ரிஷப்ஷன் முடிந்து உணவு உண்ண சென்று மீண்டுமாய் மணமகள் அறைக்குள் நான் உடை மாற்ற நுழையும் வரையும் என்னைவிட்டு ஒரு நொடி பிரியவில்லை அவன். உடை மாற்றி கதவை திறக்கும் போது அவனும் உடைமாறி வாசலில் நின்றிருந்தான்.

அங்கிருந்து கையோடு முதலிரவிற்கு ரிசார்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். தோழியரின் கேலியின்றி அவனுடன் சென்றேன். அதுதான் அவன் திட்டமும். என் மனம் பிறர் வார்த்தையில் வாடிவிட கூடாதாம்.

விவரம் அறியும் வயது வந்த பின் முதல் முறையாக என் படுக்கை அறை பங்கிடபடுகிறது. அதுவும் ஓர் ஆணுடன். இனம் புரியாத பதற்றம். அதே நேரம் அவன் அருகாமையில் எப்போதும் தோன்றும் ஓர் எல்லையற்ற பாதுகாப்புணர்வு.

சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன். விழிப்பு வந்த போது அவன் மேல் கை போட்டிருந்தேன். அவன் விழித்தபடி படுத்திருந்தான்.

“குட்மார்னிங் ஜுஜ்ஜூ”

என் கையை அவன் மார்பிலிருந்து நீக்கிவிட்டு அவன் முகம் பார்த்து திரும்பி படுத்தேன். இன்னும் தூக்கம் எனக்குள் மிச்சமிருக்கிறது.

“தூங்கனும் ஸ்வரூப்”

“ம்..நானும்....நைட் ஃபுல்லா தூக்கமே வரலை...”

“ஏன்?”

“இதுவரைக்கும் என் பெட்ல யாரும் தூங்கினது கிடையாதா...நீ வேற உன் கைய என் மேல போட்டியா....” இயல்பாய் சொன்னான். அவன் பேச்சு தாபத்தை பற்றியதல்ல. புதிய பழக்கத்திற்கு தகவமைதலை குறிப்பிட்டான்.

என்னைப் போலவே இவனும். மனதிற்குள் எண்ணம்.

ஏனோ அந்நொடி அவனுக்கும் எனக்கும் இடையில் இருந்த ஒரு மெல்லிய சுவர் உடைந்ததாக இப்பொழுது தோன்றுகிறது.

நாங்கள் ஒரு டீம் என்ற உணர்வு தாண்டி நானும் இவனும் ஒன்றே என்ற நிலைக்கான முதல் அடி அந்த நொடிதான். இவனும் என்னை போன்றவன் என்ற அந்த உணர்வுதான். அவன் ஆண் என்ற ஒதுக்கம் என்னுள் அடியோடு காணாமல் போனது.

அருகில் தெரிந்த அவன் முகத்தின் கேசகற்றை கை நீட்டி கலைத்தேன். மனதில் தாய்மை..

இழுத்து அவன் மார்பிற்குள் புதைத்தான். மறுக்க தோன்றவில்லை. தூங்கிப் போனோம்.

மீண்டும் விழிப்பு வரும் போது அவன் அணைப்பிற்குள் என்னை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான். தொட்டால் வராத தூக்கம் இப்பொழுது வந்ததெப்படி?

புன்னகை என் இதழில். மனமோ அவனுக்கு தாய், சகோதரிகள் கிடையாது என்ற ஒரு நினைவை கொண்டு வந்து கோடிட்டது.

அவனது தேவை அன்பு.

அணைப்பில் அவன் தூங்கிய காரணம் புரிந்தது.

என் தனிமை கடலின் முடிவுத் துறை அவனானால் நானும் அவனுக்கு அதுவாய் மாற அழைக்கபட்டவள்தானே? ஆனால் அதற்கான சிறு எதிர்பார்ப்பை கூட வெளிபடுத்தாமல் என்னை மட்டுமே அவன் பயணத்தின் இலக்காக கொண்டு இவன் இந்த ஸ்வரூப் என்ன செய்கிறான் இத்தனை நாள்?

அவன் மேல் மரியாதை ப்ராவகம். அவன் என் கணவனாய் இருப்பதில் ஒரு ஜெய உணர்வு. பெருமிதம். ஆசீர்வதிக்கப் பட்டவள் நான். கடவுள் என்னை வெறுக்கவில்லை.

முதன் முதலாக அவன் மேல் அக்கறைப் பட தொடங்கினேன். இத்தனை நாளாய் அவன் பக்கத் தேவையை நான் யோசிக்கவே இல்லையே? குற்ற உணர்ச்சி மனதில். அந்த நொடியில் இருந்து அவனுக்கு என்ன வேண்டும் என கவனிப்பது என் முதல் வேலை ஆயிற்று.

மனம் சொன்னது இதன் பெயர் அன்பு. காதல் என்று வரும்?

ப்பா நாம யுஎஸ் மூவாகிறது நல்லதுன்னு நினைக்கிறார். இப்போதான் அங்க நம்ம நியூப்ராஜக்ட்ஸ் லான்ச் செய்றோம். எனக்குமே நம்ம பிஸினஸுக்கு அதுதான் சரின்னு தோணுது....தம்பி இந்த இயர்ல இருந்து இங்க அப்பா கூட பிஸினஸ் பார்ப்பான்....நாம டெட்ராய்ட் போலாமா?”

அவன் கேட்ட விதத்தில் எனக்கு சிரிப்பு வந்தது. போக தேவை என்றால் போய்த்தானே ஆக வேண்டும். இதில் என் சம்மதம் கேட்டு கொண்டு இருக்கிறான்.

கிண்டலாக தான் சொன்னேன். “எனக்கு பிடிக்கலைனா?”

“யூஎஸ் ப்ராஜக்ட்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவேன்.....” சாதாரணமாக சொன்னான். அவன் வார்த்தை நூறு சதவிதம் உண்மை என எனக்கு புரிந்தது. நிச்சயம் செய்வான். அதிர்ந்து போனேன்.

அதையும் விட என்னை அதிகமாய் தாக்கியது அவனுக்கு என் மறுப்பில் வருத்தமோ வலியோ எரிச்சலோ எள்ளளவும் இல்லை என்பதுதான்.

நான் விழித்த விதத்தைப் பார்த்து விளக்கம் சொன்னான்.

“தனக்கு பிடிக்காத இடத்தில போய் யாராலயாவது வருஷ கணக்கா இருக்க முடியுமா? அதுவும் பணத்துக்காக என் பொண்டாட்டி போய் இருக்கனும்னு என்ன அவசியம்? “

என்னை விட என்னை அதிகமாக நேசிக்க ஒரு ஆணால் முடியுமா?

என் பிறந்த வீட்டிலும் தொழில் காரணமாக சிலமுறை இடம் பெயர்ந்திருக்கிறோம்தான். ஆனால் ஒரு பொழுதும் என் உணர்வுகள் பற்றி நான் உட்பட யாரும் ஆராய்ந்ததில்லை. தேவை என்றால் சென்றாக வேண்டும். அவ்வளவே.

பிறந்த வீடு என்பது குழுவில் ஒருவராக நேசிக்கபடும் வகை. திருமணம் என்பது நீ மாத்திரமே என் மொத்த காதலின் கொள்கலன் என்றாவதா?

For this reason a man will leave his father and mother and be one with his wife

என்று வேதாகமம் சொல்லும் நிலை இவன் காதல் வகை.

காதலிக்கிறேனோ காதலிக்காமல் போறேனோ ஆனால் இவனுக்கு பதில் செய்ய வேண்டும். இந்த அளவுகடந்த அன்பிற்கு எப்படி பதில் செய்ய?

டெட்ராய்ட் கிளம்பிவிட்டோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.