(Reading time: 33 - 65 minutes)

ல்லாம் தெரிந்தும் இவன் என்னிடம் சொல்லவில்லை.....ப்ரின்ஸ் என் நண்பன் என்று இவனிடமே நான் சொல்லி இருக்கிறேன்...அதை கேட்ட போது என்னைப் பார்க்க இவனுக்கு என்னவாக தோணி இருக்கும் ...அவமானமாக உணர்ந்தேன்.

ஏமாற்றபட்டது போல் ஒரு உணர்வு. கோபம், அவமானம். இப்படி எதுவெல்லாமோ என்னில் அலை அடிக்க இங்கிருந்து ஓடி விட வேண்டும் என தோன்றுகிறது.

லாப்டாப்பை உயிர்ப்பித்தேன். கை நடுங்குகிறது. டிக்கெட் புக் பண்ணனும்.

“ஜுஜ்ஜூ ப்ளீஸ்.....என்ன பண்ற ...தயவு செய்து வெளிய வா.....”

நடுங்கிய கையை இறுக்கினேன். ப்ரவ்சரை கிளிக்கினேன்.

“ஜுஜ்ஜூ ப்ளீஸ்.....என்ன பண்ற?”

தீவிரமாய் என் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தேன்.

வென் ஸ் த நெக்ஸ்ட் ப்ளைட்? தேட தொடங்கினேன்.

“ஜுஜ்ஜூ ப்ளீஸ்.....என்ன பண்றன்னுமட்டுமாது சொல்லு?..”

“ஊருக்கு போறேன்....டிக்கெட் புக் பண்றேன்....”

அடுத்து அவனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.

இப்போ நான் என்ன செய்துகிட்டு இருந்தேன்...?

கதவை தட்டுவதை கூட நிறுத்திவிட்டான்.

நான் டிக்கெட் புக் பண்ணனும். எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

கண் நிறைத்து நிற்கும் நீரைத்தாண்டி மானிட்டரில் என்ன எழுதி இருக்கிறது என தெரியவில்லை.

இது என்ன பேஜ்?

கண்ணை துடைத்துக் கொண்டு திரும்ப திரும்ப வாசிக்கிறேன். என்ன வாசிக்கிறேன் என்றே புரியவில்லை.

டிக்கெட் புக் பண்ணனும். மீண்டுமாய் ஞாபக படுத்துகிறேன்.

எந்த ஊருக்கு....? ஞாபகம் வரவில்லை.

.மரத்துவிட்டிருந்தது அறிவு.

எங்க போகனும்...? ஞாபகம் வரவில்லை

ஸ்வரூப்பை விட்டு போகனும் அது மட்டும்தான் இதயத்தில்.

நெஞ்சு அறுபடுவது போல் உள்ளே ஒரு உணர்வு.

உயிர் வலிக்கிறது.

ஓ உடலில் உயிர் இங்குதான் இருக்கிறதா?

கைகள் மட்டுமல்ல மொத்த உடலும் ஒத்துழையாமை இயக்கம்.

எல்லாம் துவள்கிறது.

ன் மொத்த மனமும் ஆன்மா அனைத்தும் அவனைப் பிரிய பேர்விளைவு கொள்ள எதோ ஒன்று என் மனம் அதன் வேரான ஆன்மா அனைத்தையும் தாண்டி படு வல்லமையாய் என்னை அவனோடு சேர்த்து பிணைக்கிறது. முதல் முறையாக உணர்கிறேன் அந்த எதோ ஒன்றை.

அவனை விட்டுட்டு என்னால இருக்க முடியாது...அவன்ட்ட பேசாம என்னால முடியவே முடியாது...அவனைத்தவிர நான் போக விரும்புற இடம் ஒன்னுமே இல்ல...எதோ ஒன்று ஓலமிட

அவன் உன்னை கூப்பிடுவதை நிறுத்திவிட்டான் பார்....

நீ போறதில் அவனுக்கு ஒன்னும் இல்ல போல....மனம் அலையடிக்க

உள்ளிருந்த அந்த பிணைப்போ அவன் பேச நிறுத்தினதுல இருந்து உன் நிலைய யோசிச்சு பாரு...உன் மூளை உடம்பு ஒன்னுமே வேலை செய்யலை....அவன பிரிஞ்சு உன்னால ஒரு நொடி சமாளிக்க முடியல....இதுல எப்படி வாழ்க்கைக்கும்....

வாழ்கைக்கும் அவன பார்க்காமல்...நினைவில் மூச்சடைத்தது.....

அவன் சத்தமே இல்ல அவன் என்ன செய்றானோ...பிணைப்பு பேச

விழுந்தடித்துக் கொண்டு போய் கதவைத் திறக்கிறேன்.

கதவருகில் செயலற்று நிற்கிறான் அவன். அவனை செயலற்று பார்ப்பது இதுவே முதல் முறை.

அவனைப் பார்த்ததும் மனம் ஆன்மா அந்த எதோ ஒன்று எல்லாம் அதன் முன்னிலையாம் இயல்நிலை அடைய மூச்சிலிருந்து முழு உடல் வரை எல்லாம் சரி நிலை அடைய மனதில் மிச்சமிருப்பது ஒரே கேள்வியும் அது சார்ந்த கோபமும் தான்.

“நான் ஊருக்கு போனா ஒன்னும் இல்லையா....செத்தா மட்டும்தான் உங்களுக்கு ப்ரச்சனையா?..” வெடித்தேன்.

அவன் அணைப்பின் வேகத்தில் எலும்பு நொறுங்கிவிடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் அது வலிக்கவில்லை.

“சொல்லுங்க...நான் ஊருக்கு போனா ஒன்னும் இல்லையா?” கோபம் கூட காணமல் போய் இது வெறும் சிணுங்கலாய் செல்ல குழைவாய் வருகின்றது.

“லூசாடி நீ ...ஊருக்கு போறதுன்னா இந்த வழியாதான வருவ..... “ சில நொடி மௌனம்.

ஒரு நிமிஷத்தில மனுஷன சாகடிச்சிட்ட...”

“ஐ லவ் யூ ஸ்வரூப்”

ஐந்து வருடங்களுக்கு பிறகு:

“இப்போ எங்களுக்கு 3 வயசில ஒரு பையன் இருக்கான். அடுத்த குட்டிக்கு ட்யூ டேட் வர்ற 31. கேர்ள் பேபின்னு ஸ்கேன் ரிப்போட் சொல்லுது. ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கோம். ”

அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு காதல் எப்பதான் வந்துச்சு? இதுதான் என் கண்டு பிடிப்பு.

கல்யாணத்துக்கு முன்ன கைசேராமல் கலையவென வர்ற காதலாகட்டும் கல்யாணம் செய்ய போறவன் மேல வர்ற காதலாகட்டும் அது காதலோட நறுமணம் மாதிரி. மனசுக்கு பிடிக்கும். அதை நம்மால உணர முடியுது. ஆனால் கல்யாணம் காதலோட உடல். இங்க காதல் மூச்சு திணறல் வந்தா மட்டும்தான் தனியா உணர்ற சுவாசம் மாதிரி. சாதாரண நேரத்தில் ரொம்ப இயல்பானது. தனித்து உணர முடியாது. பிரிவுன்னா மட்டும்தான் தெளிவா வலிக்கும். மூச்சு விட ஆரம்பிச்ச நொடிய எப்படி கண்டு பிடிக்க?”

அப்புறம் இந்த காதலை கற்றறிந்ததில் நான் புரிஞ்சிகிட்ட இன்னொரு விஷயம் துன்பம் முடிவல்ல, அது நன்மையின் தொடக்கம். உங்களால் தாண்டமுடியாத தாங்க முடியாத துன்பம் உங்களுக்கு நேரிடாது. எந்த துன்பமும் இழப்பும் உங்களை நன்மையிடம் மாத்திரமே நடத்திச்செல்லும். எதை இழந்தாலும் ரெண்டு மடங்காய் நன்மை திரும்பி வரும். அதை அனுபவிக்க உங்களுக்கும் காலம் வரும். துன்பத்தை தாண்டிய பின் வரும் தைரியத்தின் மறு பெயர் விடுதலை.

                                                                                        இப்படிக்கு,                                                                               

                                        திருமதி. ஜீவநதி தற்சொரூபன்.

                                    

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.