(Reading time: 17 - 34 minutes)

ல்ல வேண்டாம்... உங்களை மாதிரியே நானும் இசைஅக்காவும் ஒத்துமையா இருப்போம்... கொஞ்சம் கொஞ்சமா செஞ்ச் பண்ணிக்கறேன் பா...

பையனுக்கு இவ்வளவு அட்வைஸ் பண்ணறீங்கல.. உங்க அருமை பொண்ணுக்கும்கொஞ்சம் எடுத்து சொல்லுங்க....

என் அவினி செல்லத்துக்கு தெரியும்... அம்மாவுக்கு பிடிக்காதது எதுவும் செய்யக்கூடாதுனு தெரியும்... அப்படி செய்தா அப்பா நிலைமை தான் பாவம்னு தெரியும்... அப்பாவுக்கு கஷ்டம்னா என் செல்லம் அதை செய்யவே மாட்டாளே! என்னடா அவினி???

கரேக்ட் அப்பா!' என்று ஹைவை கொடுத்துக் கொண்டனர் தந்தையும் மகளும்!

ஆனாலும் ரொம்ப இடம் கொடுக்கறீங்க நீங்க! அந்த பாட்டு எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சே அதை தான் கேட்பேனு அடம்பிடிக்கறா...இல்லைனா அவ இந்த பாட்டையேல்லாம் கேட்கமாடா..

ஏன் நிலா... அந்த பாட்டு நல்லாதானே இருக்கு??

என்ன?? எவண்டீ உன்ன பெத்தான்....அவன் கையில கிடைச்சா செத்தான்...இது பாட்டா?? இப்போ புறியாது அவளுக்கு.. இன்னும் வளர்ந்தாதான் தெரியும்... ஏண்டீ.. யாரவது உங்க அப்பாவை மர்டர் செய்வேனு சொன்னா உனக்கு பிடிக்குமா?? ஹாப்பியா இருப்பியா?? 

என்னது மர்டரா??

ஆமா.. அந்த பாட்டு அதைதானே சொல்லுது...

அச்சோ... அப்ப அந்த பாட்டே எனக்கு வேண்டாம் மா...எனக்கு என் டாடீ தான் இம்பார்டண்ட்!

திரும்பவும் டாடீயா??

சரி.. சரி.. அப்பா... போதுமா...

கோவிலை அடைந்து தரிசனம் முடிந்து அமர்ந்திருந்தனர். டாடீ என்று ஏதோ ஒரு குழந்தை அழைக்க தானாக திரும்பியது நீலாம்பரியின் கண்கள். அதை பார்த்த ப்ரபுவோ 'டேய்.. செல்லம்ஸ்... சுந்தர்.. அவினி...அண்ட் மைடியர் நிலாபொண்ணு...அடேன்ஷன் ப்ளீஸ்.. இன்னைக்கு நம்ம மாமா... சித்தப்பாஸ்... அத்தை பத்தி நிறைய பேசினதால... எனக்கு ஒரு ஐடியா... நாம பேசாம ஒரு குட்டி  டரிப் இந்தியாவுக்கு போடலாமானு...' என்று கேட்கும் போதே அவினியும் சுந்தரும் ஆர்பரித்து வந்து ப்ரபுவின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தம் வைத்தனர்.

அதை பார்த்திருந்த நீலாம்பரியோ அமைதியாய் எழுந்து சென்று ஆடீ க்யூ5 ஹைபிரிடை ஸ்டார்ட் செய்தாள். திரும்பும் வழியேங்கும் அவனது நிலாபொண்ணு அமைதியாய் வர ஓரக்கண்ணால் அவளை கவனித்துக்கொண்டு குழந்தைகளுடன் பேசியபடியே வந்தான்.

வீடு வந்தவுடன் பிள்ளைகள் இந்தியாவிற்கு கிளம்ப தயாராக ஆர்பரித்துக்கொண்டு உள்ளே ஓட கேரேஜில் வண்டியை நிறுத்திவிட்டு வரும் மனைவிக்காக வாசலில் காத்துக்கொண்டு நின்றான் ப்ரபு.

நிலாபொண்ணு...' என்று கையை பிடித்து நிறுத்த 'வாங்க உள்ளே போகலாம்..' என்று அழைத்து சென்றாள்.

ஏன் டா டல்லா இருக்க?? என்று இறுக அணைத்துக்கொண்டான்.

ஒன்னுமில்லைங்க... ' என்று அவன் நெஞ்சில் தலைவைத்து கட்டிக்கொண்டாள். நான் டிக்கட்ஸ் ஏற்பாடு செய்துட்டேன்...நிலாபொண்ணு...

நாம போகலாமா...'

ம்ம்ம்...' என்றாள் நீலாம்பரி.

டுத்த நான்காவது நாள் ப்ரபு, நீலாம்பரி, அவினி, சுந்தர் என்று அந்த குடும்பமே சென்னை வந்து சேர்ந்தனர். சஞ்ஜய் ஏர்போர்டிற்கு வந்து அழைத்து சென்றான் தன் குடும்பத்தினரை!

இவர்கள் இந்தியா வந்திருப்பதை அறிந்து சித்ராவின் குடும்பமும் அருள்மொழியின் குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தனர். சஞ்ஜயும் சந்தோஷும் கூட்டுக்குடும்பமாய் ஓரேவீட்டில் வசித்து வந்தனர். ப்ரபு மட்டும் அவர்களது யூஸ் பிஸ்னஸை பார்த்துக்கொள்ள அங்கேயே தங்கிவிட்டான்.

அந்த ஞாயிற்று கிழமை பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து கார்ரம் விளையாடிக்கொண்டிருந்தனர். சஞ்ஜய், சந்தோஷ், சித்ரா, அருள்மொழி மற்றும் ப்ரபு என அனைவரின் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவினிக்கும் சுந்தருக்கும் இந்த விளையாட்டு புதிதாய் இருந்தது. அதை கற்றுக்கொண்டு விளையாட சிரமப்பட்டனர். ப்ரபுவும் அவர்களுடன் இணைந்து அவினிக்கும் சுந்தருக்கும் கற்றுக்கொடுத்தான். அதை நீலாம்பரி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். 

அவினி அருகே அமர்ந்து அவளுக்கு சொல்லிக்கொடுத்தவாரு சுந்தரின் கையை பிடித்து கற்றுக்கொடுத்தான். நீலாவின் கண்கள் இதை கண்டவுடன் நீரால் நிறைந்தது. அருகில் இருந்த அருள் 'அக்கா... என்ன ஆச்சு??' என்றான்.

ஒன்னுமில்லைடா அருள்... எனக்கு நம்ம டாடீ நியாபகம் வந்திடுச்சுடா..உனக்கு நினைவிருக்கா... நீ யூகேஜி படிக்கும் போது தான் நினைக்கறேன்.. டாடீ கார்ரம் போர்ட் வாங்கிட்டு வந்தார்.

அந்த போர்ட் இன்னும் இருக்குகா... அதுல தான் பிள்ளைக்களுக்கு விளையாட சொல்லிக்கொடுத்தேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.